படம்: அன்பிற்கினியாள்
நடிப்பு: அருண்பாண்டியன், கீர்த்தி பாண்டியம், பிரவின் ராஜா, கோகுல், ரவீந்திர விஜய், கே. வி.பி தீபக் ராஜ், பூபதி ராஜா, ஜெயராஜ், அடிநாட் சசி, சங்கர் ரத்னம், கவுரி, த்ரியா பாண்டியன், மொனிஷா முரள், சந்தோஷ், ஜி மணி பாரதி, சுரேஷ்
தயாரிப்பு: அருண் பாண்டியன்
இசை: ஜாவித் ரியாஸ்
ஒளிப்பதிவு: மகேஷ் முத்துசாமி
இயக்கம்: கோகுல்
சிவம் (அருண்பண்டியன்) மகள் அன்பிற்கினியாள் (கீர்த்தி பாண்டியன்). இருவரும் ஒருவர் மீது ஒருவர் பாசமழை பொழிகின்றனர். தந்தைக்கு வேளை தவறாமல் மாத்திரை தருவது முதல் அவரை சிகரெட் பிடிக்காமல் பார்த்துக்கொள்வது வரை அன்பிற்கினியாள் அக்கறை காட்டுகிறாள். ரெஸ்டாரண்ட்டில் வேலை செய்யும் அவர் சார்லஸ் (ப்ரவீன் ராஜா) மீது காதல் கொள்கிறாள். இதற்கிடையில் வெளிநாடு சென்று நர்சிங் வேலை பார்த்து தந்தை பட்ட கடனை அடைக்க எல்லா முயற்சியும் மேற்கொள்கிறாள். இதற்கிடையில் அன்புவின் காதல் விவகாரம் தந்தைக்கு தெரியவர கோபம் அடையும் அவர் உடனடியாக மகளை வெளிநாடு அனுப்ப முடிவு செய்கிறார். மறுநாள் வெளிநாடு செல்ல வேண்டிய நிலையில் அன்று இரவு ரெஸ்டாரண்ட்டில் உள்ள ஃப்ரீஸர் அறையில் சிக்கிக்கொள்கிறார். எல்லோரும் அங்கிருந்து சென்றுவிட்ட நிலையில் ஃப்ரீஸர் அறையிலிருந்து வெளியில் வர முடியாமல் தவிக்கிறார். உயிர் பிழைப்பதற்காக அவர் நடத்தும் போராட்டம்தான் கிளைமாக்ஸ்.
கீர்த்தி பாண்டியன் எல்லோருக்கும் செல்லப்பெண்ணாக வருகிறார். பக்கத்து வீட்டு பாட்டிக்கு சுகர் ஊசி போடுவது முதல் எல்லோர் வேலையும் இழுத்துபோட்டு செய்கிறார். சிரித்தபடி அவர் செய்யும் சின்ன சின்ன சிணுங்கல்கள் அழகு. யாருமே தலை நிமிர்ந்து பார்க்காத செக்யூரிட்டிக்கு வணக்கம் சொல்லி அவர் மனதில் இடம் பிடிப்பது, காதலன் பிரவினிடம் செல்லமாக கோபித்துக் கொள்வது, தந்தையை நிற்க வைத்து சிகரெட் பிடிக்கக்கூடாது என்று சத்தியம் வாங்குவது என இயல்பான நடிப்பில் கவர்கிறார்.
ப்ரீஸர் அறைக்குள் கீர்த்தி பாண்டியன் சிக்கியபிறகு அவர் நடத்தும் போராட்டம் ஒன்மேன் ஆர்மியை மிஞ்சி விடுகிறது. எப்படித்தான் அவ்வளவு குளிரையும் தாங்கிக்கொண்டாரோ என்று உச் கொட்ட வைக்கிறார்.
கீர்த்தி, ப்ரீஸர் அறையில் சிக்கி இருப்பது தெரியாமல் வெளியே அவர் காணாமல் போய்விட்டார் என்று தந்தை அருண்பாண்டியன் அவரை தேடி போலீஸ் நிலையத்துக்கும் தெரு தெருவாகவும் அலைவது பரிதாபம்.
கீர்த்தியை காணவில்லை என்று எல்லோரும் பதற்றத்தில் இருக்க அந்த இன்ஸ்பெக்டர் படுத்தும்பாடு கடுபேபடம் பார்ர்க்கும் ரசிகர்களை ஃபொரீஸருக்குள் அடைத்துவிடுகிறார் ற்றும் வில்லத்தனம்.
அருண்பாண்டியன் தயாரித்திருக்கிறார். இயக்குனர் கோகுல். குளிரடிக்கும் ஒளிப்பதிவை மகேஷ் துரைசாமி செய்திருக்கிறார். ஜாவித் ரியாஸ் இசை காட்சிகளை விறுவிறுபாக்குகிறது.
அன்பிற்கினியாள்- குளிர்காலத்தில் ஐஸ் மழையில் நனைந்த மலர்.