படம்: தமிழ்க் குடிமகன்
நடிப்பு: சேரன், லால், ஶ்ரீ பிரியங்கா, வேல ராமமூர்த்தி, எஸ். ஏ.சந்திர சேகர், அருள்தாஸ், ரவிமரியா, ராஜேஷ், மயில்சாமி, துருவா, தீப்ஷிகா, சுரேஷ் காமாட்சி, மு.ராமசாமி
தயாரிப்பு: இசக்கி கார்வண்ணன்
இசை: சாம் சி. எஸ்.
ஒளிப்பதிவு: ராஜேஷ் யாதவ்
இயக்கம்: இசக்கி கார்வண்ணன்
பி ஆர் ஒ: நிகில் முருகன்
சலவை தொழிலாளர் சமூகத்தை சேர்ந்த சின்னசாமி வேறு தொழி லுக்கு மாற எண்ணுகிறார். விஏஓ தேர்வு எழுத செல்லும் அவரை அந்த ஊரை சேர்ந்த பெரியவர் தந்திரமாக தேர்வு எழுத விடாமல் செய்கிறார். இதனால் ஏமாற்றம் அடைந்த சின்னசாமி பால் பண்ணை நடத்த செல்கிறான். அப்போதும் அவருக்கு இடைஞ்சல் வருகிறது. ஊரில் பெருபுள்ளி சுடலையாண்டி ( லால்)யின் தந்தை இறந்துவிட அவருக்கு இறுதி சடங்கு நடத்தி தர யாரும் வர மறுக்கின்றனர். சின்ன சாமியை மிரட்டி வரவழக்கப் பார்க் கின்றனர். அவர் குடும்பத்துடன் சென்று போலீசில் புகார் தருகிறார் அங்குள்ள இன்ஸ்பெக்டர் சுடலை யாண்டியின் உறவினர் என்பதால் சின்னசாமியை வேறு வழக்கில் புக் செய்து சிறையில் தள்ளுகி றார். அங்கு வரும் உயர் அதிகாரி இன்ஸ்பெக்டரை கண்டிப்பதுடன் சின்னசாமியை விடுதலை தருகி றார். தனக்கு சாதியே வேண்டாம் என்று. எண்ணும் சின்னசாமி எடுத்த.இறுதி முடிவென்ன என்பதே கிளைமாக்ஸ்.
நீண்ட நாட்களுக்கு பிறகு சேரன் நடிப்பில் உருவாகியிருக்கும் படமாக வந்திருக்கிறது தமிழ்க் குடிமகன். சாதி மறுப்பு கதாபாத் திரம் சின்னசாமி வேடத்தில் சேரன் உணர்வுப்பூர்வமான நடிப்பை தந்திருக்கிறார்.
லால் தன் வீட்டுக்கு அடியாட் களுடன் வந்து தன் தந்தைக்கு இறுதி சடங்குகளை செய்யச் சொல்லி மிரட்டும்போது என்னால் செய்ய முடியாது என்று சேரன் சொல்ல அடுத்த நிமிடம் கத்தியை காட்டி கொன்றுவிடுவதாக மிரட்டியதும் இறுதி சடங்கு செய்ய காலையில் வருவதாக கூறி அன்று இரவே ஊரைவிட்டு கிளம்பி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் புகுந்துவிட சேரனுக்கு அங்கும் ஒரு ஆபத்து காத்திருப்பது அதிர்ச்சி.
புகார் கொடுக்க வந்த இன்ஸ் பெக்டரிடம் அடிவாங்கும்போது அங்கு வரும் உயர் அதிகாரி சுரேஷ் காமாட்சி, இன்ஸ்பெக்டரை மிரட்டி சேரனை விடுவிப்பது ஆறுதல்.
சேரனின் சாதி இல்லாத பிரிவு சம்பந்தப்பட்ட வழக்கில் வழங்கப் படும் தீர்ப்பு மூலம் சாதி சர்ச்சை களுக்கு தீர்வை தருவதாக அமைவது சிறப்பு. ஆனால் அது நடைமுறை சாத்தியமா என்ற சர்ச்சையும் எழுகிறது. அதாவது தமிழ்க் குடிமகன் என்ற புதிய பிரிவே பிற்காலத்தில் ஒரு சாதியாக வாய்ப்பு இருப்பதே சர்ச்சைக்கு காரணம்.
சாதி வெறி பிடித்தவராக நடித்தி ருக்கும் லால் எப்போதும்போல் தனது.நேர்த்தியான நடிப்பால் கவர்கிறார். தமிழ்க் குடிமகன் யார் என்பதற்கான கிளைமாக்ஸ் விடையும் சர்ச்சைக்குரியதாக இருகிறது.
:படத்தை தயாரித்து இயக்கி யிருக்கிறார் இசக்கி கார்வண்ணன்.
சாம் சி. எஸ். இசை காட்சியோடு பயணிக்கிறது.
ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு காட்சிகளை நேரில் பார்பது போன்ற உணர்வை தருகிறது.
இசக்கி கார்வண்ணன் சாதி விஷயத்தை கையிலெடுத்து சாட்டை விளாசியிருக்கிறார்.
தமிழ்க் குடிமகன் – சாதியற்ற.புதிய பாதை.