Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

நண்பன் ஒருவன் வந்த பிறகு ( பட விமர்சனம்)

படம்: நண்பன் ஒருவன் வந்த பிறகு

நடிப்பு: லீலா, குமரவேல், விஷாலினி, ஆனந்த், பவானி ஸ்ரீ, ஆர் ஜே விஜய், இர்ஃபான், வில்ஸ்பாட், தேவ், கேபிஒய் பாலா, மோனிகா, ஆர் ஜே ஆனந்தி, சபரீஷ், குகன், ஃபென்னி ஆலிவர்,  தர்மா, வினோத், மதன் கௌரி, ஜெரோம் ரெமிகாஸ்  பிரவீன், சாய் வெங்கடேஷ், தங்கதுரை வெங்கட் பிரபு (கௌரவ வேடம்), ஐஸ்வர்யா

தயாரிப்பு: ஐஸ்வர்யா எம் மற்றும் சுதா ஆர்.

இசை: காசிப்

ஒளிப்பதிவு: தமிழ்ச்செல்வன்

இயக்கம் : ஆனந்த்

பி ஆர் ஓ: சுரேஷ் சந்திரா

 

ஒரே காலனியில் வசிக்கும் ஆனந்த் உள்ளிட்ட நண்பர்கள் படித்து முடித்த பிறகு வெவ்வேறு வேலைக்கு சென்று தனித்தனி யாக பிரிய வேண்டாம் என்று பேசி சொந்தமாக ஒரு ஈவன்ட் மேனேஜ் மென்ட் நிறுவனம் தொடங்க முடிவு செய்கின்றனர். ஆனால் அது நிறைவேற முடியாத சூழல் ஏற்படுவதால் குடும்பத்தினர் தங்கள் பிள்ளைகளை வேலைக்குச் செல்ல கட்டாயப் படுத்துகின்றனர். இதனால் நண்பர்கள் பிரிந்து வெவ்வேறு வேலைக்கு செல்கிறார்கள். எல்லோரும் வேலைக்குச் சென்ற பிறகும் ஆனந்த் மட்டும் வீட்டில் இருப்பதால் அவரது குடும்பத் தினர் அவரை திட்டி தீர்க்கின்றனர். ஒரு வழியாக அவரும் வெளிநாடு செல்ல ஏற்படாகிறது. அங்கு சென்று தான் நினைத்த ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்துக் கான செயலியை கண்டுபிடிக்க முயல்கிறார்.  அவரால் அது முடிந்ததா? பிரிந்த நண்பர்கள் ஒன்று சேர்ந்தார்களா? என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் அளிக்கிறது.

நண்பன் ஒருவன் வந்த பிறகு படம் சென்னை 28 படத்தின் இன்னொரு பிரதிபலிப்பாகவே தெரிகிறது. அந்த படத்தில் நண்பர்கள் கிரிக்கெட் விளையாடினார்கள் இந்த படத்தில் நண்பர்கள் ஏழு கல் அடுக்கு விளையாட்டு விளையாடுகிறார்கள்.

குழந்தை பருவத்தில் சிறுவயதில் நண்பர்களுக்குள் சண்டை சச்சரவு இருந்தாலும் அது பனிபோல் மறைந்து விடும்.  வளர்ந்தபிறகு  அவர்களுக்குள் ஏற்படும் சிறுமோதல்களும் பெரிய விரிசல்களாக  மாறிவிடும் அப்படித்தான் கதாநாயகன் ஆனந்த் அவரது நண்பர்களுக்கு இடையே ஏற்படும் மோதல் பெரிய விரிசலாக மாறி ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசைக்கு சென்று விடுகிறார்கள்.

ஹீ0ரோ ஆனந்த்  நண்பர்களைப் போல் வேலைக்கு செல்லாமல் இருப்பதால் குடும்பத்தினர் அவரை  திட்டுகிறார்கள். “உன் நண்பனுக்கெல்லாம் வேலை கிடைக்கிறது உனக்கு மட்டும் ஏன் வேலை கிடைக்கவில்லை” என்று பல குடும்பங்களில் மகன்கள் மீது பெற்றோர்கள் காட்டும் கடுப்பை அப்பட்டமாக காட்டி இருக்கிறார் ஆனந்த்.

இப்படிப்பட்ட இளைஞர்களுக்கு வேலைதான் இருக்காது ஆனால் எந்த பெண் மீதாவது காதல் இருக்கும். அப்படித்தான் ஆனந்துக்கும் சக தோழி பவானி ஸ்ரீ மீது காதல் வருகிறது. அந்த காதலும் ஒரு கட்டத்தில் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும்போது ஆனந்த் வேலைக்கு செல்லாதது ஒரு மைனஸ் பாயிண்டாக குறுக்கே வருவதும்  அதற்காகவும் குடும்பத்தினர் திட்டியதற்காகவும் ஆனந்த் வேலைக்கு செல்வது சில இளைஞர்களின் பொறுப்பில்லா தனத்தை தோலுரிக்கிறது.

ஆனந்த் நண்பராக வரும் ஆர்ஜே விஜய் மற்றும் சக நண்பர்கள் தங்கள் பங்களிப்பை  கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

வேலைக்காக சிங்கப்பூர் சென்ற ஆனந்த் தன் காதல் எங்கே பறிபோய் விடுமோ என்ற பதட்டத்தில் பவானி ஶ்ரீயிடம்  செல்போனில் கதறுவது கடுப்பேற்றுகிறது. அதற்கு காரணம் பவானி ஸ்ரீ தன் காதலுக்கு முக்கியத்துவம் தராமல் குடும்பத்தினர் சொல் பேச்சு கேட்டு உறவினர் மகனுக்கு திருமணத் திற்கு பச்சைக் கொடி காட்டும் போது அவர் ஆனந்த் மீது இருக்கும் காதலை பொருட்படுத்தாதை உணர்த்துகிறது. இது எப்படி உண்மை காதலாகும் இதற்காக ஆனந்த் அப்படி கதறுகிறார் என்ற கேள்வி எழுகிறது.

ஆர் ஜே விஜய் இதுவரை பல படங்களில் தலைகாட்டி இருந் தாலும் இதில் அவருக்கு நடிப்பை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்தி ருக்கிறது அதை பயன்படுத்தி இருக்கிறார்.

கதாநாயகி பவானி ஸ்ரீ எந்நேரமும் ஒரே முக பாவனையில் காட்சி களை கடத்துகிறார். இவ்வளவு பேர் இருந்தும் காமெடிக்கு பஞ்சம் ஏற்பட்டது ஏனோ..

“பிகம் ஏ ஹீரோ” என்ற செயலியை உருவாக்குவது தான் ஹீரோ ஆனந்தின்   லட்சியமாக இருக்கி றது அது ஏதோ புதுவித செயலி யாக இருக்குமோ என்று நினைத் தால் டிக் டாக் செயலிபோல் கடைசியில் காட்டும் போது சப் என்று ஆகிவிடுகிறது.

இப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு வழங்கி இருப்பதுடன் கௌரவ வேடத்திலும் நடித்திருக் கிறார்.

ஐஸ்வர்யா எம் சுதா ஆர் தயாரித்திருக்கின்றனர்,

ஆங்காங்கே இளையராஜா பாடலும், ரகுமான் மெட்டுக்களும் தாளம் போட வைத்தாலும் இசை அமைப்பாளர் காசிஃபின் தனித்துவம் பிடிபடவில்லை.

தமிழ்ச்செல்வன் கேமரா சிங்கப்பூரை புதிய எழிலுடன் காட்டி இருக்கிறது. ஆனால் கமல்,  ரஜினி நடித்த “நினைத்தாலே இனிக்கும்” பட காலத்தின்  சிங்கப்பூரை இப்படத்தில் காண முடியாதது அங்கு ஏற்பட்டிருக்கும் புதிய மாற்றம் என்றே தெரிகிறது.

நண்பன் ஒருவன் வந்த பிறகு – என்பதற்கு பதிலாக நண்பன் ஒருவன் சென்ற பிறகு என டைட்டில் வைத்திருக்கலாம்.

 

 

 

 

 

 

Related posts

நிவின் பாலி மாஹாவீர் யார்” பட ஃபர்ஸ்ட் லுக்

Jai Chandran

The first look & title of VelsSignature’s upcoming short film #4 Tomorrow

Jai Chandran

SoSoGa Song from Manchi Rojulochaie

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend