Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

சூடு பிடிக்கும் ஸ்ரீகாந்த் செகண்ட் இன்னிங்ஸ்..

சூடு பிடிக்கும் ஸ்ரீகாந்த் செகண்ட் இன்னிங்ஸ்..

அரைடஜன் படங்களை அள்ளினார்..

முன்னணி ஹீரோக்கள் எல்லோருமே ஒரு கட்டத்தில் சரிவை சந்தித்து அதிலிருந்து மீண்டு தங்களது இடத்தை தக்க வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் முன்னணி ஹீரோவாக இருந்து ஒரு கட்டத்தில் சரிவை சந்தித்த ஹீரோ ஸ்ரீகாந்த் பொறுமை யாக இருந்து தனது இடத்தை மீண்டும் கைப்பற்றி இருக்கிறார். அரை டஜன் படங்களுக்கும் மேலாக நடித்து வரும் ஸ்ரீகாந்த் தற்போது முன்னணி நடிகர்களுடன் கைகோர்த்து நடித்து வருகிறார்.
தான் நடிக்கும் புதிய படங்கள் பற்றியும் அதில் தனது வேடங்கள் குறித்தும் மனம் திறந்து பேசினார் நடிகர் ஸ்ரீகாந்த்.
அவர் கூறியதாவது:
‘மிருகா’ படத்தின் படப்பிடிப்பு கொரோனா பாதிப்பால் 144 தடை உத்தரவு போடும் முன்பே முடிந்துவிட்டது. தற்போது, அனைத்து பணிகளும் முடிந்து வெளியாக தயாராகவுள்ளது.ஊரடங்கு முடிந்து இயல்பு வாழ்க்கை திரும்பியதும், திரையரங்குகள் திறக்கப்படும். அப்போது வெளியாகும் முதல் படமாக ‘மிருகா’ இருக்கும்.
இப்படத்தை ஜெ.பார்த்திபன் இயக்க, அருள் தேவ் இசையமைக்கிறார். பி. வினோத் ஜெயின் தயாரிக்கிறார். ராய் லட்சுமி நாயகியாக நடிக்கிறார்.
‘மிருகா’ படத்திற்குப் பிறகு நானும், ஹன்சிகா மோத்வானியும் இணைந்து நடிக்கும் ‘மஹா’ படத்தில் நடிகர் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். கருணாகரன், தம்பி ராமையா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

யூ ஆர்.ஜமீல் இயக்கத்தில், ஜிப்ரான் இசையமைக்கிறார். வி.மதியழகன் தயாரிக்கிறார். இப்படம் துப்பறியும் திரில்லராக உருவாகி வருகிறது. பாதி படம் முடிந்து விட்டது.
அதுபோல், நானும், நடிகர் விஜய் ஆண்டனியும் இணைந்து நடிக்கும் படம் ‘காக்கி’. இப்படத்தில் இரு கதாநாயகிகள். விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக இந்துஜாவும், எனக்கு ஜோடியாக வெளிநாட்டு நடிகையும் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப் பிடிப்பும் கொரோனா ஊரடங்கால் பாதியிலேயே நிற்கிறது.

‘காக்கி’ படத்தை ‘வாய்மை’யை இயக்கிய செந்தில்குமார் இயக்க, கமல் கோரா, தனஞ்செயன், பிரதீப் ஜெயன் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். ‘நண்பன்’ படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் இப்படத்தையும் ஒளிப்பதிவு செய்கிறார். அவருடன் நான் இரண்டு படங்களில் பணியாற்றியிருக்கிறேன்.

மேலும், இப்படம் சமுதாய சிந்தனையைக் கொடுக்கும் படமாக இருக்கும்.எனக்கும், விஜய் ஆண்டனிக்கும் சரிசமமான பாத்திரங்கள் இருக்கிறது.மிகவும் உணர்வுபூர்வமான படமாக இருக்கும்.

அடுத்து, உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறேன். இதுவும் பாதி யில் நிற்கிறது. இந்த படங்களுக்குப் பிறகு இன்னும் இரண்டு படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்துள்ளோம். ஆனால், 144 தடை உத்தரவால் பாதி யில் நிற்கும் படங்களுக்கு முன்னுரிமை கொடுத்து, பிறகு இந்த படங்களின் படப்பிடிப்பைத் துவங்கு வோம்.
இதில் ஒவ்வொரு படங்களிலும் வெவ்வேறு விதமான கதாபாத்தி ரங்கள் என்பதுதான் எனக்கு மகிழ்ச்சியளிக்கக் கூடிய விஷயமாக இருக்கிறது.

இவ்வாறு ஸ்ரீகாந்த் கூறினார்.

#actor srikhanth joining handas with vijayantony, udayanithi
#ஸ்ரீகாந்த் #விஜய் ஆண்டனி #உதயநிதி ஸ்டாலின்

Related posts

Seema Biswas on Om Kali jai kali shooting experience

Jai Chandran

Ravi Mohan’s Directorial Debut “An Ordinary Man” Promo Unveiled

Jai Chandran

விக்ரமின் ‘வீர தீர சூரன்- பார்ட் 2 ‘பெங்களூரூ புரமோஷன்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend