Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு தாதா சாகேப் பால்கே விருது

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது. இந்த விருதை வரும் 25, ம் தேதி டெல்லி சென்று பெறுகிறார்.

ஏற்கனவே பாடகி லதா மங்கேஷ்கர்,  இயக்குனர்கள் சத்யஜித் ரே, ஷியாம் பெனகல், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் இந்த விருதை பெற்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் இருந்து சிவாஜியும், கே.பாலச்சந்தரும் பெற்றுள்ளனர். இந்த வரிசையில் 2019-ம் ஆண்டுக் கான விருது ரஜினிகாந்துக்கு அறிவிக்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக விருது விழா நடத்தப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் வருகிற 25ம் தேதி டெல்லியில் நடக்கும் விழாவில் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட உள்ளது.
இதுபற்றி  சென்னை போயஸ்கார்டனில் நடிகர் ரஜினிகாந்த் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மத்திய அரசின் தாதா சாகேப் பால்கே விருது வாங்குவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. நான் விருது பெறும் இந்த தருணத்தில் கே.பாலசந்தர் இல்லையே என்பது வருத்த மாக உள்ளது.
டெல்லி சென்று வந்தபிறகு மீண்டும் பத்திரிகையாளர் களை சந்திக்கிறேன்.
இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.

Related posts

மார்கன் (பட விமர்சனம்)

Jai Chandran

Director Kittu is a man of high talents – Seenu Ramasamy

Jai Chandran

உண்மைச் சம்பவம் அடிப்படையில் உருவான மதுரை சிங்கம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend