Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சிவகார்த்திகேயன் “மாவீரன்” படப்பிடிப்பு தொடங்கியது

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில்,
ஷாந்தி டாக்கிஸ் (Shanthi Talkies) சாரபில் அருண் விஸ்வா தயாரித்து வழங்க, இயக்குநர் மடோனா அஷ்வின் இயக்கத்தில் உருவாகும் “மாவீரன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு, எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது !!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் “மாவீரன்” படத்தின் படப்பிடிப்பு நேற்று காலை சென்னை யில் எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது. மண்டேலா திரைப்பட புகழ் மடோனா அஸ்வின் எழுதி இயக்கும் இப்படத்தில் நடிகை அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். சிவகார்த்திகேயனின் மற்றுமொரு படமான ‘பிரின்ஸ்’ படத்தின் இணை தயாரிப்பாளரான அருண் விஸ்வா Shanthi Talkies சார்பில் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். திரைப்பட துவக்க விழாவில் இந்தியாவின் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் ஷங்கர் கலந்து கொண்டார்.

தொழில்நுட்பக் குழு:
ஒளிப்பதிவு,  இயக்குனர்  விது அயன்னா. இசையமைப்பாளர்  பரத் சங்கர். எடிட்டர்  பிலோமின் ராஜ்.
கலை இயக்குனர் குமார் கங்கப்பன்.
ஸ்டண்ட் இயக்குனர்  யானிக் பென்.
ஒலி வடிவமைப்பு  சுரேன் ஜி, எஸ். அழகியகூத்தன். ஒலிக்கலவை  சுரேன் ஜி. ஆடை வடிவமைப்பாளர்  தினேஷ் மனோகரன். ஒப்பனை கலைஞர்  சையத் மாலிக் எஸ்.
உடைகள்  நாகு.

Related posts

தியான்ஷா பேசிய வசனத்தால் பரபரப்பு: சித்தார்த் பேச்சு

Jai Chandran

Cheran and Gautam Karthik join hands for a new film

Jai Chandran

பிரிட்டிஷ் அகடமி ‘பாப்டா’ தூதராக ஏஆர்.ரஹ்மான் நியமனம்.

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend