-
ஜெயலலிதா வீட்டின் ஒரு பகுதி மட்டும் நினைவு இல்லம் ஆக்கலாம்..
ஐகோர்ட் அதிரடி உத்தரவு
சென்னை மே :
தமிழக முதல்வர் ஜெயலலிதா தனது போயஸ் கார்டன் இல்லத்தில் வாழ்ந்து வந்தார். அவரது மறைவுக்கு பிறகு சொத்து யாருக்கு என்ற பிரச்னை எழுந்தது. அவரது அண்ணன் மகள் ஜெ. தீபா, ஜெ. தீபக் சொத்துக்கு உரிமை கொண்டாடினார்கள். இதற்கிடையில் ஜெயலலிதா வாழ்ந்து இல்லத்தை நினைவு இல்லமாக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில் அதிமுக நிர்வாகி புகழேந்தி கடந்த ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில், ‘ஜெயலலிதாவுக்கு
சொந்தமான போயஸ் கார்டன் உள்பட சுமார் ரூ.913 கோடி மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க வேண்டும் என்று கோரியிருந்தார் இவ்வழக்கில் ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோரும் எதிர்மனுதாரர்க ளாக சேர்க்கப்பட்டனர்.
அவர்கள் தங்களை ஜெயலிதாவின் சட்டப்பூர்வ வாரிசாக அறிவிக்க தனித்தனி யாக மனு செய்தனர்.
இந்த வழக்கில் வாத பிரதி வாதங்கள் நடந்தன. வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், அப்துல் குத்தூஸ் இன்று தீர்ப்பளித்தனர்.
ஜெயலலிதாவின் சொத்துக்கள் மீது அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா, மகன் ஜெ.தீபக் ஆகியோருக்கு உரிமை உண்டு.
அவர்கள் சொத்துக்களின் இரண்டாம் நிலை வாரிசுக ளாக அறிவிக்கப்ப டுகிறார்கள். ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் கார்டன் வேதா இல்லத்தின் ஒரு பகுதியை மட்டும் நினைவு இல்லமாக தமிழக அரசு மாற்றலாம். அந்த இல்லத்தை முழுமையாக நினைவு இல்லமாக மாற்றும் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
போயஸ் கார்டன் இல்லத்தை ஏன் முதல்வரின் அதிகாரப் பூர்வ இல்லமாக மாற்றக் கூடாது? ஜெயலலிதாவின் சொத்துக்களில் ஒரு பகுதி யில் அறக் கட்டளை அமைக்கலாம்.இது குறித்து 8 வாரத்தில் அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் கூறினார்கள்.
சொத்துக்களை நிர்வகிக்க கோரி புகழேந்தி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப் பட்டது.
#Madras HC puts brakes on state government’s plan to convert Jayalalitha’s house into memorial
#ஜெயலலிதா போயஸ் கார்டன் இல்ல வழக்கு