Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

லட்சுமி காந்தன் கொலை வழக்கு ( பட விமர்சனம் )

படம்: லட்சுமி காந்தன் கொலை வழக்கு

நடிப்பு: வெற்றி, ரங்கராஜ் பாண்டே, பிரிகிடா சாகா, மாறன், சரவணன், லிசி ஆண்டனி, அருவி மதன், கவிதாபாரதி, சுப்பிரமணியம் சிவா

தயாரிப்பு: கே வி சபரீஷ்

இசை: தர்புகா சிவா

ஒளிப்பதிவு : எம் வி பன்னீர்செல்வம்

இயக்கம்: தயாள் பத்மநாபன்

பிஆர்ஓ : ரேகா

கதை : படித்துவிட்டு அரசு வேலைக்காக காத்திருக்கிறார் அறிவுமதி (வெற்றி). இந்நிலையில் அம்மா வாங்கிய கடனை கட்ட முடியாமல் தவிக்கிறது குடும்பம். இதனால் நண்பர் மூர்த்தியுடன் (மாறன்) சேர்ந்து திருட்டு வேலையில் ஈடுபடுகிறான் அறிவுமதி. ஒரு கட்டத்தில் ஒரு கொலையை செய்ய வேண்டிய சூழலுக்கு அறிவுமதி ஆளாக போலீஸ் அவனை சிறையில் அடைக்கிறது. குற்றவாளி கூண்டில் நிற்கும் அறிவுமதிக்கு தூக்கு தண்டனை கிடைக்கும் சூழல் உருவாகிறது. இக்கட்டான இந்த சூழலில் நீதிபதி தீர்ப்பு என்ன என்பதுதான் கிளைமேக்ஸ்.

வெறும் கமர்சியல் ஹீரோ என்றில்லாமல் கன்டென்ட் உள்ள கதையாக தேர்வு செய்து நடித்து வருகிறார் வெற்றி.அதுதான் அவரை சினிமா இன்னும் பிடித்து வைத்திருக்கிறது.
இந்த படத்தில் அறிவுமதி என்ற தூக்குத் தண்டனை கைதியாக நடித்திருக்கிறார் வெற்றி.
தனிமையில் சிறைக்குள்ளேயே அவரது காலகட்டம் போனாலும் தூக்குத் தண்டனை கைதி பற்றிய ஒரு புத்தகம் எழுதி அதை வெளியிட ஏற்பாடு செய்வது கதாபாத்திரத்தை ஒரு எழுத்தாளராக சித்தரிக்கிறது.

அம்மா வாங்கிய கடன் மீதான வட்டியை அடைப்பதற்காக சின்ன சின்ன திருட்டுகளில் ஈடுபடும் வெற்றிக்கு திடீர் திருமணம் நடக்கிறது. அதன் பிறகு குடும்ப கதையாக மாறி விடுமோ என்று எண்ணிக் கொண்டிருந்த நிலையில் படம், நான் லீனியர் பாணியில் மீண்டும் சிறையில் தொடங்குகிறது. தூக்குத் தண்டனை நிறைவேறும் நாள் அன்று உயர் போலீஸ் அதிகாரியாக வரும் ரங்கராஜ் பாண்டேவும், தண்டனை கைதி வெற்றிக்கும் இடையே நடக்கும் தூக்குத் தண்டனை வேண்டுமா? வேண்டாமா? என்ற தர்க்கப் போராட்டம் நீண்ட உரையாடலாக இருந்தாலும் அதை உன்னிப்பாக கவனிககும் வகையில் வசனங்கள் அமைந்திருக்கின்றன.

கைதிகளை தூக்கிலிடும் வேலை செய்பவராக சுப்ரமணிய சிவா நடித்திருக்கிறார். தூக்கு கயிற்றை அவர் தயாரிக்கும் விதமும், தூக்கு தண்டனை நிறைவேற்றும் முன்பாக அந்த தூக்கு வயிற்றில் நெய், வாழைப்பழம் போன்றவற்றை கலப்பது ஏன் என்பதற்கு கடைசியில் ஒரு விளக்கமும் தருகிறார்.

தூக்கு தண்டனை வேண்டுமா வேண்டாமா என்ற வாத பிரதிவாதம்  பொது வெளியில் நடந்து வருகிறது. இந்த படத்திலும் அந்த விஷயம்தான் அலசப்பட்டிருக்கிறது.

கே வி சபரீஷ் படத்தை தயாரித்திருக்கிறார்.. பொழுதுபோக்காக  கமர்சியல் படம் எடுக்க வேண்டும் என்றில்லாமல் சமுதாயத்துக்கு  ஒரு கருத்தை சொல்ல வேண்டும் என்ற நோக்கோடு இப்படத்தை தந்திருக்கும் இயக்குனர் தயாள் பத்மநாபன் தனக்கென ஒரு பாதையை அமைத்து பயணிப்பது தெரிகிறது.

லட்சுமி காந்தன் கொலை வழக்கு – விவாதத்துக்குரிய படம்.

Review by

K. Jayachandhiran

Trending cinemas now.com

Related posts

Diamond Celebrating 35 Year’s of Cinema Journey

Jai Chandran

84 வயது முன்னாள் ஜனதிபதி பிரணாப் முகர்ஜி காலமானார்.. ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்..

Jai Chandran

ZEE5 தளத்தில் “சங்கராந்திகி வஸ்துனானு” காமெடி படம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend