Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

எக்ஸாம் (வெப் சீரிஸ் விமர்சனம் )

படம் (வெப் சீரிஸ்): எக்ஸாம்

நடிப்பு: துஷரா விஜயன், அதிதி பாலன், வசுந்தரா, அப்பாஸ், நரேன் மணி

கிரியேட்டிவ் தயாரிப்பு: வால் வாட்ச்சர்ஸ் ஃபிலிம் புஷ்கர், காயத்ரி

தயாரிப்பு: கௌதம் செல்வராஜ் எஸ். குஹபிரியா, நந்தகுமார்

இசை : சாம் சிஎஸ்

ஒளிப்பதிவு : அருண் அமரேந்திரன்

இயக்கம்: ஏ சற்குணம்

ரிலீஸ்: பிரேம் வீடியோ OTT தளம்

பி ஆர் ஓ : யுவராஜ்

எந்த வசதியும் இல்லாத கிராமத்தில் ஏழை பெண்ணாக பிறந்த துஷாரா படித்து ஐபிஎஸ் தேர்வு எழுதி போலீஸ் அதிகாரியாக வர எண்ணுகிறார். அதற்காக தனது தாய் கஷ்டப்பட்டு தன்னை படிக்க வைப்பதை மனதில் வைத்து கவனமாக படித்து தேர்வு எழுதுகிறார். ஆனால் பணக்கார வீட்டுப் பெண் அதிதி பாலன் தேர்வு எழுதாமல் ஐபிஎஸ் ஆவதற்கான ஊழலில் ஈடுபடுகிறார். இதை அறிந்த துஷாரா கோபம் அடைகிறார். இதையடுத்து அவர் எடுக்கும் அதிரடி நடவடிக்கைகள் என்ன? தேர்வில் ஊழல் எப்படி நடக்கிறது என்பதை அம்பலமாக்குகிறது எக்ஸாம் வெப் சீரிஸ.

எத்தனையோ ஏழை பிள்ளைகள் தங்கள் சக்தியையும் மீறி செலவு செய்து படித்து உயர் பதவிக்கு செல்வதற்காக குரூப் ஒன் போன்ற தேர்வுகள் எழுதி உயர் அதிகாரிகளாக ஆவதற்கு உயிரை கொடுத்து படிக்கிறார்கள். ஆனால் பணம் படைத்தவர்கள் அதிகாரம் படைத்தவர்கள் தங்கள் பிள்ளைகளை ஊழல் செய்து தேர்வு எழுதாமல் மாற்று வழியில் அவர்களை உயர் பதவிகளுக்கு தேர்வு செய்து பணியாற்ற வைக்கிறார்கள். இந்த கொடுமை இந்தியா முழுவதும் இப்போதும் நடந்து கொண்டிருக்கிறது.
அரசு சட்டம் இயற்றுகிறது ஆனால் அந்த சட்டத்தில் நிறைய ஓட்டைகள் வைக்கப்பட்டு அதன் வழியாக ஊழல்வாதிகள் தப்பிக்கி றார்கள். சமீபத்தில் கூட நீட் தேர்வு கேள்வித்தாள்கள் ராஜஸ்தானில் லீக் செய்யப்பட்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ஏழை குடும்பத்தைச் சேர்ந்த துஷாரா விஜயன் எப்படியாவது குரூப் ஒன் தேர்வில் தேர்ச்சி பெற்று ஐபிஎஸ் அதிகாரி ஆக வேண்டும் என்று கவனமாக படித்து தேர்வு எழுதுகிறார். அவர் தேர்வு எழுதிவிட்டு நிம்மதியாக வெளியில் வரும்போது அங்கு அதிதி பாலன் செய்யும் ஊழலை பார்த்து அதே இடத்தில் அவரை அடித்து தெறிக்க விடுவது ஆக்ரோஷமான காட்சி. ஆனால் இந்த அதிரடி காட்சி சினிமாவிலோ வெப்சீரிசிலோ மட்டும்தான் நடக்கிறது, நிஜத்தில் ஊழல்வாதிகள் ஜாலியாக நடமாடுகிறார்கள். தட்டி கேட்க முடியாத அப்பாவிகள் தற்கொலை செய்து கொண்டு சாகிறார்கள்.

இதற்கெல்லாம் எந்த ஆட்சி வந்தாலும் விடிவு கிடைக்காது என்பது மட்டும் தெரிகிறது. ஆனால் அந்த ஒரு நிலைமையையும் இந்த வெப் சீரிஸில் சொல்லி இருந்தால் இன்னும் கூட வெப் சீரிஸ் பரபரப்பாகி இருக்கும்.

துஷாரா விஜயன் டி எஸ் பி கெட்டப்பில் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். குரூப் 1 தேர்வில் ஊழல் எப்படியெல்லாம் யார் யாரால் நடத்தப்படுகிறது என்பதை ஜேம்ஸ் பாண்ட் பாணியில் அவர் துணிச்சலாக களம் இறங்கி கண்டுபிடிக்கும் காட்சிகள் வேகம். அடுத்தடுத்து இந்த வெப் சீரிசின் காட்சிகள் இப்படித்தான் போகப் போகிறது என்பதை கணிக்க முடியாத அளவுக்கு திருப்பங்கள் நிறைந்த காட்சிகளாக இயக்குனர் சற்குணம் அமைத்திருப்பது கூடுதல் பலம்.

அதிதி பாலன் இன்னொரு பெண் டிஎஸ்பியாக வருகிறார். வழக்கமாக இது போன்ற நெகடிவ் கதாபாத்திரத்தில் ஹீரோயின்கள் நடிக்க தயங்குவார்கள் ஆனால் அருவி படத்திலேயே அதிரடி கதாபாத்திரத்தில் நடித்த அதிதி பாலனுக்கு இந்த பாத்திரமெல்லாம் ஒரு பொருட்டல்ல.
அப்பாஸ் நீண்ட நாட்களுக்கு பிறகு திரையில் வெப் சீரிஸ் மூலமாக தலைகாட்டி இருக்கிறார். இது அப்பாஸ் தானா என்று கேட்கும் அளவுக்கு வெயிட் போட்டு குண்டாகி இருக்கிறார். படம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரு ஹீரோ அல்லது ஒரு நடிகர் தனது உடற்கட்டை ஸ்லிம்மாக பராமரிக்க வேண்டும் என்பதை அப்பாஸ் ஏன் மறந்தாரோ தெரியவில்லை.

வால் வாட்ச்சர்ஸ் ஃபிலிம் புஷ்கர், காயத்ரி வெப் சீரிசை கிரியேட்டிவ் தயாரிப்பும்,
கௌதம் செல்வராஜ் எஸ். குஹபிரியா, நந்தகுமார்
தயாரித்திருக்கிறார்கள்.

ஒரு நிமிடம் கூட அயர்ந்து விடாமல் இருக்க செய்கிறது சாம் சிஎஸ் இசை. அருண் அமரேந்திரன் கேமரா ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது

கிராமப்பாங்கான கதைகளை இயக்குவதில் கில்லாடி என்று பெயர் பெற்ற ஏ சற்குணம் தற்போது உயர் கல்வி தேர்வில் நடக்கும் ஊழலையும் மோசடியையும் பிரித்து மேய்ந்திருக்கிறார். தனக்கு ஆக்சன் கதைகளும் இயக்க வரும் என்பதை எக்ஸாம் வெப்சீரிஸ் மூலம் நிரூபித்திருக்கிறார்.

பிரைம் வீடியோ OTT தளம் இந்த வெப் சீரிசை வெளியிட்டுள்ளது.

எக்ஸாம்- கவனத்தை கவரும் பரீட்சை.

Review By
K Jayachandhiran

trending cinemas now. com

Related posts

ரஜினி, கமல், விஜய். அஜீத் வாக்கு பதிவு: சைக்கிளில் வந்த நடிகர்

Jai Chandran

Jai participated shooting in spite of injured

Jai Chandran

கமல் ரசிகர்கள் 4 லட்சம் யூனிட் ரத்த தானம்.. 40 வருட சாதனை..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend