Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

ரத்னம் (பட விமர்சனம்)

படம்: ரத்னம்

நடிப்பு: விஷால், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், டெல்லி கணேஷ், கௌதம் வாசுதேவ மேனன், விஜயகுமார்,  ஒய் ஜி மகேந்திரன், வி டிவி கணேஷ்,  ஜெயபிரகாஷ், முரளி ஷர்மா, ஹரிஷ்  பரேடி, குமார், கும்கி அஸ்வின், அஞ்சலிதேவி, , துளசி

தயாரிப்பு: ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ், ஜி ஸ்டுடியோ

இசை: தேவி ஸ்ரீ பிரசாத்

ஒளிப்பதிவு: எம் சுகுமார்

இயக்கம்: ஹரி

பி ஆர் ஓ: நிகில் முருகன்

சமுத்திரக்கனியை ஒரு கூட்டம் கொல்ல வரும் போது சிறு வயதிலேயே அவரை காப்பாற்றுகிறார் விஷால். அன்று முதல் விஷாலை தன்  பிள்ளை போல் வளர்க்கிறார் சமுத்திரக் கனி. ஒரு சந்தர்ப்பத்தில் பிரியா பவானி சங்கரை விஷால் பார்த்து அவரை பின்தொடர்கிறார். அவரை ஒரு கூட்டம் துரத்தி துரத்தி கொல்ல வருகிறது. அவர்களை விஷால் தடுத்து பந்தாடுகிறார்.  பிரியா பவானி சங்கர் மீது விஷாலுக்கு காதலா அல்லது வேறு பாசமா என்பதை மையமாக வைத்து ரத்னம் கதை உருவாகி இருக்கிறது.

இயக்குனர் ஹரி படம் என்றாலே அது தொடக்கம் முதல் இறுதி வரை ஜெட் வேகத்தில் பறக்கும் என்பது ஏற்கனவே சிங்கம் , சாமி உள்ளிட்ட படங்கள் நிரூபித்து இருக்கின்றன அந்த வரிசையில் ரத்னம் படமும் இடம் பிடித்திருக்கிறது.

விஷாலுக்கு ஆக்சன் என்றால் அல்வா சாப்பிடுவது போல் வெளுத்து கட்டுவார்  இந்த படத்தில் காதலுக்கே இடம் இல்லாமல் முழுக்க முழுக்க ஒரு ஆக்சன் நாயகனாக வலம் வந்திருக்கிறார் அப்படி என்றால் சண்டைக் காட்சிகளில் வேகத்துக்கு கேட்க வேண்டுமா? ரத்தம் தெறிக்கிறது,  அனல் பறக்கிறது, குண்டு வெடிக்கிறது, துப்பாக்கி தோட்டா பாய்கிறது, ஹரியின் டிரேட் மார்க்கான அரிவாள் சுழன்று சுழன்று வெட்டுகிறது.

பிரியா பவானி சங்கரை விஷால் பாரத்து அவரை பின்தொடரும் போது இது காதல்  ரூட் என்று எண்ணத் தோன்றுகிறது ஆனால் அதில் ஒரு டிவிஸட்டை ஹரி வைத்து அதையே கதையின் கருவாகவும் மாற்றியிருப்பது புது யுக்தி. சொல்லப் போனால் விஷாலுக்கு படத்தில் ஜோடியே கிடையாது.

பிரியா மீது  விஷால் ஏன் இவ்வளவு அக்கறை காட்டுகிறார் என்றால் பிரியா அவரது தாயார் சாயலில் இருப்பதுதான் காரணம் என்ற சென்டிமென்ட்  பெண்கள மனதை  ஈர்க்கும்.

படத்தில் நிறைய டிவிஸ்ட்கள் கிளைமாக்ஸ் வரை கதையின் தொடர்ச்சி நீள்கிறது.

சமுத்திரக்கனி அரசியல்வாதியாக வருகிறார்.  ஆளுங்கட்சி எம்எல்ஏவாக இருந்தாலும் அவர் போலீஸ் உயர் அதிகாரிகள் கூட்டத்திலேயே நுழைந்து எச்சரிக்கை விடுகிறார் இது நிஜத்தில் சாத்தியமா என்பது சந்தேகம்தான் சினிமாவுக்கு எம் எல் ஏ கெத்து காட்ட  பயன்பட்டி ருக்கிறது.

தெலுங்கு படங்களில் வில்லன் வேடம்போடும் முரளி சர்மா மற்றும் ஹரிஸ்  பரேடி  உள்ளிட்ட 3 வில்லன்கள் அடியாட்களை வைத்து ஆக்ஷன் விளையாட்டு விளையாட்டுகின்றனர். .

ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ், ஜி ஸ்டுடியோ தயாரித்திருக்கிறது.

ஹரி படம் என்றால் ஸ்பீடாக இருக்கும் என்பதற்கு இன்னொரு சாட்சிதான் ரத்னம்

தேவி ஸ்ரீ பிரசாத் இசை ஆக்ஷனில் அதிரடி காட்டினாலும் ரொமான்சுக்கு இடமில்லாமல் போய்விட்டது.

எம். சுகுமார்  கேமிரா  சக்கரம் கட்டிக்கொண்டு பறக்கிறது.

கமல் கண்ணன், பீட்டர் ஹெயின், திலீப் சுப்பராயன், விக்கி என ஸ்டண்ட் மாஸ்டர் பட்டியல் நீள்கிறது என்றால் சண்டை காட்சிகள் எப்படி படமாகியிருக்கும் என்பதை யூகிக்கலாம்

ரத்னம் – ஹரி பிளஸ் விஷால் கூட்டணியில்  ஆக்ஷன் சென்டிமென்ட்  அதிரடி அமர்க்களம்.

 

 

 

 

Related posts

First look of Single Kannamma Eannamma

Jai Chandran

சூரகன் (பட விமர்சனம்)

Jai Chandran

அரசிடம் மாதாந்திர ரிப்போர்ட் கேட்கும் கமல்ஹாசன்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend