Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நாடாளுமன்ற தேர்தல்: ரஜினி, கமல், அஜீத், விஜய் சரத் வாக்கு பதிவு செய்தனர்

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் 18-வது நாடாளுமன்ற தேர்தல் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி ஜூன் மாதம் 1-ந்தேதி வரை 7 கட்டங் களாக நடக்கிறது.
இதில் தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் 102 தொகுதி களில் முதல் கட்ட தேர்தல் இன்று (ஏப்ரல் 19ம் தேதி) நடக்கிறது.
இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச் சேரியில் உள்ள 40 தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்த லுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது.

பல இடங்களில் காலை முதலே மக்கள் ஆர்வ மாக வாக்களிக்க வாக்கு சாவடிக்கு வந்து வரிசை யில் நின்று வாக்களித்தனர்.
திரையுலகினர் வாக்களிப்பில் ஆர்வம் காட்டினர்.
சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது வாக்கினை செலுத்தினார்.

முன்னதாக இங்குள்ள வாக்கு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. இதனால் மக்கள் காத்திருந்தனர். பின்னர் கோளாறு சரிசெய் யப்பட்டு மக்கள் வாக்கி னை செலுத்தினர். .

நடிகர் அஜித்குமார் சென்னை திருவான் மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை முதல் நபராக செலுத்தினார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள வாக்குச் சாவடிக்கு நடிகர் பிரபு குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். பின்னர் அவர் கூறும்போது,” வாக்கு நமது உரிமை, வாக்க ளிப்பது நமது கடமை. ஆபிரகாம் லிங்கன் கூறியதுபோல் புல்லட்டை விட வலிமை வாய்ந்தது வாக்கு. வாக்கு செலுத்தி னால்தான் பிரச்சினை களுக்கு குரல் கொடுக்க முடியும்” என்றார்.

சென்னை பெசன்ட் நகரில் உள்ள வாக்குச் சாவடியில் நடிகர் விக்ரம் தனது வாக்கினை செலுத்தினார்.

மேலும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தமிழக வெற்றி கழக தலை வரும் நடிகருமான விஜய், நடிகர்கள் சரத்குமார், ராதிகா, விஷால்,  தனுஷ், சூர்யா, கார்த்தி , சிவகார்த்தி கேயன், இயக்குனர்கள் வெற்றி மாறன், பா.ரஞ்சித் உள்ளிட்ட பலரும் வாக்களித்தனர்

நகைச்சுவை நடிகர் சூரி, சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச் சாவடிக்கு தனது மனை வியுடன் வாக்களிக்க சென்றார். ஆனால் வாக்காளர்களின் பெயர் பட்டிய லில் சூரியின் பெயர் விடுபட்டுள் ளதாக தேர்தல் அதிகாரிகள் கூறினர். இதனால் நடிகர் சூரி தனது வாக்கை செலுத்த முடியாமல் திரும்பினார்

இது குறித்து அவர் வெளியிட்ட வீடியோவில், “நான் இதுவரை அனைத்து தேர்தல்களிலும் என வாக்கை செலுத்தி ஜனநாயக கடமையை நிறைவேற்றி இருக்கி றேன். அந்த வகையில்
இன்று என் மனைவி யுடன் வாக்கு செலுத்து வதற்காக வந்தேன். எனது மனைவி வாக்கு செலுத்திவிட்டார். ஆனால் என்னுடைய பெயர் விடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக் கின்றனர்

எங்கு தவறு நடந்தது என்று தெரியவில்லை. என்னுடைய ஜனநாயக கடமையை நிறைவேற்ற முடியவில்லை என்பது வேதனையாக உள்ளது. அடுத்த தேர்தலில் என்னுடைய வாக்கை தவறாமல் செலுத்து வேன். தயவு செய்து அனை வரும் 100% உங்கள் வாக்கை செலுத்திவிடுங்கள். அது நமது நாட்டிற்கு மிகவும் முக்கியம்” என்று தெரிவித்துள்ளார்.

M21,

Related posts

The showbiz journey of Hansika Motwani

Jai Chandran

MARVEL STUDIOS’ “ETERNALS” TEASER TRAILER & POSTER OUT NOW!

Jai Chandran

Anbulla Ghilli Trailer On July 3rd..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend