படம்: கேப்டன் மில்லர்
நடிப்பு: தனுஷ், சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், காளி வெங்கட் மற்றும் வெள்ளைக்கார நடிகர்கள்
தயாரிப்பு: சத்யஜோதி.பிலிம்ஸ் டி ஜி.தியாகராஜன், செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன்
இசை: ஜி.வி.பிரகாஷ்குமார்
ஒளிப்பதிவு: சித்தார்த்தா நுனி
வசனம்: மதன் கார்க்கி
இயக்கம்: அருண் மாதேஸ்வரன்
பி ஆர் ஒ: சதீஷ்,( AIM), சிவா, ரியாஸ்
சுதந்திரத்திற்கு முன்பு பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் ஒடுக்கப்பட்ட வர்கள் மீது நடந்த கொடுமையை விளக்கும் படமாக உருவாகி இருக்கிறது கேப்டன் மில்லர்.
சமஸ்தானத்திற்கு உட்பட்டிருக்கும் கிராமத்திற்கு வரும் பிரிட்டிஷ் படை அங்கு காலம் காலமாக வாழ்ந்து வரும் ஒடுக்கப்பட்டவர் களை விரட்டிவிட்டு அந்த இடத்தை அபகரிக்க பார்க்கின்றனர். பிரிட்டிஷாரின் அதிகாரத்துக்கு பயந்து சமஸ்தானமும் அந்த இடத்தை பிரிட்டிஷார் ஆக்கிரமிக்க ஒத்துழைப்பு தருகின்றனர். இதற்கிடையில் அதே ஊரில் பிறந்து வளர்ந்த அண்ணன், தம்பி செங்கோலன், ஈசா இருவரும் வெவ்வேறு திசையில் பயணிக் கின்றனர் . செங்கோலன் பிரிட்டி ஷாரை எதிர்த்து போராளியாக மாறுகிறான். ஈசா உள்ளூர் சமஸ்தான அதிகாரிகளை எதிர்த்து பிரிட்டிஷ் படையில் சிப்பாயாக சேர்க்கிறான். பிரிட்டிஷ் படையில் அவனுக்கு மில்லர் என்று பெயர் தரப்படு கிறது. அந்த பெயர் அவனுக்கு பிடித்துப்போகவே அதையே எண்ணி எண்ணி நெகிழ்கிறான்.
ஒரு சமயம் பிரிட்டிஷ் கமாண்டர் சிப்பாய்களை அழைத்துச் சென்று அங்கு இந்திய சுதந்திரத்திற்காக போராடும் மக்களை பின்னால் இருந்து சுட்டுத் தள்ளுகிறார்.. அதைக் கண்டு கொதிப்படையும் மில்லர் பிரிட்டிஷ் கமாண்டரை சுட்டுத் தள்ளி நெருப்பில் தள்ளிவிட்டு பிரிட்டிஷ் ராணு வத்தில் இருந்து வெளியேறி செல்கிறான். அப்படி வெளியேறிய மில்லர் ஒரு கொள்ளைக் கூட்டத்தில் சேர்ந்து அவர்களுடன் கொள்ளையடிக்க தொடங்கு கிறான். இந்நிலையில் தான் பிறந்த கிராமத்தை பிரிட்டி ஷாரும் சமஸ்தானமும் அபகரிக்க பார்ப்ப தையும் அங்குள்ள ஒடுக்கப் பட்ட மக்களை அவர்கள் கொன்று குவிப்பதையும் கண்டு ஆவேசம் அடையும் மில்லர் தன்னுடன் இருக்கும் கொள்ளையர்களை போராளிகளாக மாற்றி பிரிட்டிஷ் படையையும் சமஸ்தானத்தையும் எதிர்க்கிறான். இதற்கிடையில் இறந்து விட்டான் என்று கருதப்பட்ட செங்கோலன் படை திரட்டி கொண்டு கேப்டன் மில்லருக்கு ஆதரவாக களத்தில் இறங்கி பிரிட்டிஷாரையும் சமஸ்தானத் தையும் அடித்து நொறுக்குகிறான். இந்த போராட்டம் எந்த எல்லைக்கு சென்று முடிகிறது, ஏற்கனவே ஒடுக்கப்பட்டவர்களை அங்கி ருக்கும் கோயிலுக்குள் அனுமதிக்க முடியாது என்ற சமஸ்தானத்தின் உத்தரவை என்ன கதி ஆக்குகிறார்கள் என்பதற்கெல் லாம் உணர்ச்சி பொங்க பதில் அளிக்கிறது கேப்டன் மில்லர் திரைப்படம்.
கேப்டன் பில்லர் படம் இந்திய சுதந்திரத்திற்காக பிரிட்டிஷாரை எதிர்த்து ஆயுதம் எந்தி போராடிய சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கை பின்னணியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருப்ப தாகவே தோன்றுகிறது. சுபாஷ் சந்திரபோஸ் ஆக செங்கோலன் பாத்திரத்தில் நடிக்கும் சிவராஜ் குமார் இருக்கிறாரா அல்லது கேப்டன் மில்லர் பாத்திரத்தை ஏற்றிருக்கும் தனுஷ் இருக்கிறாரா என்பதை கணிக்க முடியாத அளவுக்கு இருவருமே பிரிட்டிஷ் ராணுவத்தை பயங்கரமாக எதிர்த்து ஆயுத புரட்சி நடத்துகின் றனர்.

கேப்டன் மில்லர் கதாபாத்திரத்தை ஏற்றிருக்கும் தனுஷ் முற்றிலுமாக அந்த கதாபாத்திரமாகவே மாறி இருப்பதுடன் தனது உடல் மொழி, உடை மற்றும் நடையையும் முற்றிலுமாக மாற்றி கண் முன்னால் கேப்டன் மில்லராகவே நிற்கிறார் தனுஷ்
பிரிட்டிஷ் ராணுவத்தில் சேரும் தனுஷ் அங்கு தனக்கு வழங்கப் படும் மில்லர் என்ற பெயரை மனதில் பதிய வைத்துக் கொண்டு சிப்பாய், ஜவான் , கேப்டன் என தன்னைத் தானே மனதில் சித்தரித்துக் கொண்டு கேப்டன் மில்லராக தன்னை நினைத்துக் கர்வம் கொள்வது அழகு.
சுதந்திரத்திற்காக போராடும் அப்பாவி மக்களை பிரிட்டிஷ் சிப்பாய்களுடன் சேர்ந்து சுட்டுத் தள்ள வேண்டிய நிலைக்கு ஆளாகும் தனுஷ் மனம் வெதும்பி கண்ணீர் பீறிட அங்கிருக்கும் வெள்ளைக்கார கமாண்டரை சுட்டு வீழ்த்தி நெருப்பில் எட்டி மிதித்து தள்ளுவது தனுஷின் ஆவேசத் திற்கு ஒரு எடுத்துக்காட்டு.
கொள்ளைக்கார கும்பலில் தனுஷ் சேர்ந்ததும் இவர் வாழ்க்கை என்ன இப்படி மாறிவிட்டது என்று எண்ணத் தோன்றுகிறது ஆனால் காட்சிகள் நகர நகர அந்த கொள்ளை கூட்டத்தை போராளி களாக மாற்றி பிரிட்டிஷாரையும் சமஸ்தானத்தையும் எதிர்க்கும் தரைப்படையாக மாற்றி தாக்கும் போது தனுஷ் உண்மையிலேயே கேப்டன் மில்லராக பிரகாசிக் கிறார்
கோயிலில் இருக்கும் கோர்னார் பொக்கிஷத்தை வெள்ளைக் காரர்கள் வலுக்கட்டாயமாக எடுத்துச் செல்லும்போது அவர்களை மோட்டார் சைக்கிளில் பின் சென்று துரத்தும் தனுஷ் பிரிட்டிஷ் சிப்பாய்களையும் அதிகாரியையும் சுக்கு நூறாக நொறுக்கி அவர்களை தீயில் இட்டு பொசுக்கும்போது நம் உள்ளத் திலும் வெப்பம் படர்கிறது.
தனுஷ். உச்சகட்ட கோபம் அவர் வைத்திருக்கும் மிஷின் துப்பாக்கி யில் தெரிகிறது. பிரிட்டிஷ் அதிகாரியையும் சமஸ்தான படைகளையும் சல்லடையாக புல்லட்டால் துளைக்கும் தனுஷ் ஆவேசத்தின் உச்சத்துக்கு சென்று விடுகிறார்.
தனுஷ் ஒரு பக்கம் தனது ஆவேசத் தையும் ஆத்திரத்தையும் வெளிப். படுத்திக் கொண்டிருக்கும் நிலை யில் செங்கோலனாக வரும் கன்னட நடிகர் சிவராஜ்குமார் ஒரு போராளியாகவே உருமாறி பிரிட்டி ஷாரை எதிர்ப்பது நெருப்பில் ஊற்றிய எண்ணையாக தகிக்கிறது.
கோர்னார் திருவிழாவில் தனுசுடன் சேர்ந்து சிவராஜ்குமார் ஆடும் ஆட்டம் அமர்க்களமோ அமர்க்களம் . அது ஆட்டம் தான் ஆனால் அதில் ஆத்திரமும் கோபமும் இருவர் முகத்திலும் கொப்பளிக்கிறது.

ஏற்கனவே சூப்பர் ஸ்டாருடன் ஜெய்லர் படத்தில் கலக்கிய சிவராஜ்குமார் தற்போது சூப்பர் ஸ்டாரின் மருமகன் தனுசுடன் கேப்டன் மில்லர் படத்தில் கலக்கி இருப்பது அவரை நிரந்தரமாக தமிழ் சினிமாவின் ஒரு அங்கமாக வே மாற்றிவிடும் என்று தோன்று கிறது. தமிழிலிருந்து எந்த வாய்ப்புகள் வந்தாலும் சிவராஜ் குமார் விட்டு வைக்க மாட்டார் என்றே தோன்றுகிறது. இப்படத்தில் தனது கதாபாத்திரத் திற்கு அவரே டப்பிங் பேசியி ருப்பது பிளஸ்.
சிவகார்த்திகேயன், சூர்யா போன்றவர்களுடன் காதலியாக கைகோர்த்த பிரியங்கா மோகன் இப்படத்தில் மாறுபட்ட கதாபாத் திரத்தில் நடித்திருக்கிறார். கமர்சியல் நாயகியாக மட்டுமல்ல தன்னால் ஒரு பெண் போராளி யாகவும் நடிக்க முடியும் என்பதை தன்னுடைய வளமான நடிப்பின் மூலமும், மிரட்டலான பார்வை மூலமும் வெளிப்படுத்தி வித்தியாசப்படுகிறார்.
சந்திப் கிஷன் குமார வேல், காளி வெங்கட், ஐஸ்வர்யா மற்றும் வெள்ளைக்காரர்களாக நடித்திருக்கும் நடிகர்கள் எல்லோருமே தங்கள் பங்களிப்பை முற்றிலுமாக வழங்கி படத்திற்கு பெரும் துணையாக நின்றிருக் கிறார்கள்.
பல வெற்றி படங்களை வழங்கிய சத்யஜோதி பிலிம்ஸ் டிஜி தியாக ராஜன், செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் இப்படத்தை பிரமாண்டமாக தயாரித்திருக்கிறார்கள்.
படக் கதைக்கு என்ன தேவையோ அதை கிஞ்சித்தும் குறையாமல் பிரிட்டிஷ் காலகட்டத்திற்கு நம்மை அழைத்துச் சென்று அங்கு கண் முன் நிகழும் போராட்டங்களை மனதுக்குள் ஏற்றி விடும் ஒரு செயல்பாட்டை தனது இயக் கத்தின் மூலம் செய்து யார் இப்படத்தின் இயக்குனர் என்று பேச வைத்திருக்கிறார் டைரக்டர் அருண் மாதேஸ்வரன். இப்படத்தின் ஒளிப்பதிவாளர் சித்தார்த்த நுனி காட்சிகளை மிரட்டலாக படமாக்கி கண்களுக்குள் பதியம் போடுகிறார்.
நடிகர்கள் இயக்குனர்கள் தொழில் நுட்ப கலைஞர்கள் எல்லோரும் வழங்கி இருக்கும் கடினமான உழைப்பிற்கு தனது இடி முழக்க மான இசையில் உரம் சேர்த்தி ருக்கிறார் இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ்.

குறிப்பாக பிரிட்டிஷ் அதிகாரிகள் கோர்னார் பொக்கிஷத்தை கடத்திச் செல்லும்போது அவர்களை தனுஷ் மோட்டார் சைக்கிளில் துரத்தும் காட்சியில் இசை அரங்கை அதிரவிடுகிறது.
கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி களில் வெடிகுண்டுகளும், மிஷின் துப்பாக்கிகளும் முழங்கும் முழக்கம் காதையும், நெஞ்சை உறைய வைக்கிறது.
கேப்டன் மில்லர் – சுதந்திரத்திற் காக போராடிய போராளிகளின் தியாகத்திற்கு அர்ப்பணம் செய்யலாம்.

