உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் 18-வது நாடாளுமன்ற தேர்தல் இன்று (வெள்ளிக் கிழமை) தொடங்கி ஜூன் மாதம் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடக்கிறது.
இதில் தமிழகம், புதுச் சேரி உள்பட 21 மாநிலங்களில் 102 தொகுதி களில் முதல் கட்ட தேர்தல் இன்று (ஏப்ரல் 19ம் தேதி) நடக்கிறது.
இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச் சேரியில் உள்ள 40 தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது.
இந்நிலையில் சென்னை தேனாம் பேட்டை எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார். அவருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் வாக்களித் தார்.
பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர் களிடம் கூறியதாவது:
மக்கள் அனைவரும் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். வாக்குரிமை பெற்றிருக்கும் அனைவரும் மறந்திடா மல், புறக்கணிக்காமல் வாக்கு செலுத்த வேண்டும். நீங்கள் நினைப்பதுபோல இந்தியாவுக்கே வெற்றி தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடிக்கு தனது மனைவியுடன் சென்று பொதுமக்க ளுடன் வரிசையில் காத்திருந்து தனது வாக்கை பதிவு
செய் தார்.
அதன் பின்னர் கூறிய அவர், ” தமிழகத்தின் 39 தொகுதிகளுக்கும் பிரசாரத்திற்காக சென்றுள்ளேன். தேர்தலில் தி.மு.க., மற்றும் ‘இந்தியா’ கூட்டணி வெற்றி
பெறும் என்பதே தமிழக வாக்கா ளர்களின் மனநிலையாக உள்ளது.” என்றார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கண்டனூர் சிட்டாள் ஆச்சி உயர்நிலைப் பள்ளியில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தனது வாக்கினை பதிவு செய்தார்.
பின்னர் செய்தி யாளர்கள் சந்திப்பில் ப.சிதம்பரம் கூறியதாவது:
எனது ஜனநாயக கடமையை ஆற்றியதில் மகிழ்ச்சி அடைகி றேன். தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதி களிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்று நான் உறுதியோடு நம்புகிறேன்.
இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பன்முகத்தன்மை காப்பாற்றப்படும்
கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட சரிவுகளை நாங்கள் சீர் செய்து விடுவோம். இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் அதனை யாரும் உடைக்க முடியாது. அது ஒரு வலிமையான கூட்டணி. அமலாக் கத்துறை, பாஜக கூட்டணி என்பது அனைவருக்கும் தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அரியலூர் மாவட்டம் அங்கனூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது வாக்கினை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்
கூறியதாவது:
நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. மக்களின் பக்கம் இந்தியா கூட்டணி நிற்கிறது. அரசமைப்பு சட்டத்தை பாதுகாக்க வாக்களி யுங்கள் என்று இந்தியா கூட்டணி கூறியுள்ளது. நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
தி.மு.க. தலைமை யிலான கூட்டணி 40 இடங்களில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்தியா கூட்டணியின் ஆட்சி மலரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
திண்டிவனம் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள ஸ்ரீமரகதாம்பிகை அரசு உதவி பெறும் பள்ளி
வாக்குச்சாவடி மையத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று காலை 8 மணிக்கு தனது வாக்கைப்பதிவு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது”
மக்கள் மாற்றத்தை விரும்பு கிறார்கள். அதனால் நடைபெற வுள்ள மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதி களிலும் அமோக வெற்றி பெறும்” என்றார்.
அதிமுக கூட்டணி: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சிலுவம் பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் வாக்களித் தார்.
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், மகன்கள் விருதுநகர் தொகுதி வேட்பாளர் விஜய் பிரபாகரன், நடிகர் சண்முகபாண்டியன் ஆகியோர் சென்னை சாலிகிராமம் கே.கே. சாலையில் உள்ள காவேரி மேல் நிலைப்பள்ளியில் காலை 7 மணியளவில் வாக்களித்தனர்.
பா.ஜ.க. மாநில தலைவரும், கோவை மக்களவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை, கரூர் தொகுதிக்குட்பட்ட அரவக்குறிச்சி தொட்டம்பட்டியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில். தனது வாக்கினை செலுத் தினார்.
அனைவரும் ஜனநாயக கடைமையை ஆற்ற வேண்டும். காரணம் இந்த ஜனநாயகத்தின் வலிமை என்பது வாக்காளர் பெருமக்கள் மட்டும்தான். வாக்காளர் பெருமக்கள்தான் இந்த நாடு எப்படி செல்ல வேண்டும்? நல்லவர்கள் நம்மை ஆள வேண்டும் என்பதை முடிவு செய்கிறார்கள். ஆளுபவருக்கும் நமக்கும் எப்போதும் தொப்புள் கொடி உறவு இருக்க வேண்டும்.
சிந்தித்து எல்லோரும் வாக்களிப்போம். நான் எனது ஜனநாயக கடைமையை ஆற்றி விட்டேன். தமிழகத்தில் உள்ள அனைத்து அன்பு செல்வங் களுக்கும் வேண்டுகோள் எங்கிருந்தாலும் மாலை 7 மணிக்குள் வாக்களியுங்கள்.
நல்ல ஒரு ஆட்சி அமைய உதவுங்கள். நல்லவர் களுக்கு வாக்களி யுங்கள்.பெரிய மாற்றத்தை கொண்டு வாருங்கள்” என்று கூறினார்.
சென்னை கிண்டி அருகே உள்ள அட்வெண்ட் கிறிஸ்தவ நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி, அவரது மனைவி ஆகியோர் வாக்களித்தனர்
