Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இளம் அடல்ட் காமெடி ஜானரில் ‘பஸ் கரோ ஆன்ட்டி

ராய் கபூர் பிலிம்ஸ் சித்தார்த் ராய் கபூர் கூறுகையில்,
“உலகளவில் இருக்கும் இளம் தலைமுறையினரின் ஒரு பகுதியினரை பிரதிபலிக்கும் திறன் கொண்ட திரைப்படம் பஸ் கரோ ஆன்ட்டி. இந்தத் தலைமுறையைச் சேர்ந்த பெரும்பாலா னோர் தங்கள் வாழ்க்கையைத் தேடி, அவர்களின் திறமையைக் கண்டறிய போராடுகின்றனர். , அவர்கள் சக்தி வாய்ந்த முரண்பாடுகளுக்கு எதிராக தங்கள் வாழ்க்கைக்காக போராடுகின் றனர். தேவையில்லாமல் மற்றவர்கள் வாழ்கையில் குறுக்கிடக்கூடிய அனு ஆன்ட்டி அந்தத் தடைகளின் ஒரு உதாரணம். இது மகிழ்ச்சி மற்றும் வெற்றியின் வரலாறு, மேலும் இந்தக் கதையைச் சொல்ல பிக்ரம், நிதேஷ், ரோனி மற்றும் அபிஷேக் ஆகியோருடன் இணைந்திருப்பதில் நான் மகிழ்ச்சியடை கிறேன். ” என்றார்

ஆர்  எஸ் வி பி  ரோனி ஸ்க்ரூவாலா கூறுகையில்..
“ஸ்டார் ஸ்டுடியோஸ் சித்தார்த் மற்றும் நித்தேஷ் ஆகியோருடன் பஸ் கரோ ஆன்ட்டி படத்திற்காக மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ஒரு வேடிக்கையான மற்றும் எழுச்சி யூட்டும் கதை தான் இது, இது தொழில் முனைவோர் ஆகும் ஆர்வம் கொண்டவர்கள் மத்தியில் இந்த படம் நிச்சயமாக பெரும் வெற்றிபெறும்”

இயக்குனர் அபிஷேக் சின்ஹா ​​கூறும்போது, ​​
“ஒரு இயக்குநருக்கு எல்லோரும் விரும்புக்கூடிய ஒரு கதையை பார்வையாளர்களிடம் கொண்டு செல்வதில் உள்ள சுவாரஸ்யத்தை விட வேறு எதுவும் வேறு எதுவும் சுவாரஷ்யமாக இருக்காது. நிகில் மெஹ்ரோத்ரா,ஸ்டார் ஸ்டுடியோஸ் , ஆர. எஸ் வி பி மூவிஸ் மற்றும் ராய் கபூர் பிலிம்ஸ் மற்றும் அஷ்வினி ஐயர் திவாரி மற்றும்நிதேஷ் திவாரியின் எர்த்ஸ்கை பிக்சர்ஸ்  போன்ற பிரமாண்ட தயாரிப்பா ளர்களுடன் இணைந்து, எனது வழிகாட்டி யும் நெருங்கிய நண்பர்களில் ஒருவரு மான நித்தேஷ் திவாரி எழுதிய திரைப் படத்தை இயக்குவதில் நான் மகிழ்ச்சி யடைகிறேன். ஒரு குழுவாக அவர்கள் இந்த இதயத்தை தொடும் மற்றும் ஊக்கமளிக்கும் கதையினை தேர்ந் தெடுத்துள்ளனர். இந்தத் திரைப்படம் கனவுகளைப் பின்தொடரும் தைரியமான அனைவருக்குமான எங்களுடைய மரியாதை ஆகும்.” என்றார்.

ஸ்டார் ஸ்டுடியோஸ் , ஆர. எஸ் வி பி மூவிஸ் மற்றும் ராய் கபூர் பிலிம்ஸ் மற்றும் எர்த்லஸ்கை  பிக்சர்ஸ் தயாரிப்பில், அபிஷேக் சின்ஹா ​​இந்த படத்தை இயக்குகிறார், இஷ்வாக் சிங் மற்றும் மஹிமா மக்வானா நடிக்கும், பாஸ் கரோஆன்ட்டி திரைப்படம் மும்பை முழுவதும் படமாக்கப்படவுள்ளது.

Related posts

சட்டமும் நீதியும் (வெப் சீரிஸ் விமர்சனம்)

Jai Chandran

அனபெல் சேதுபதி (பட விமர்சனம்)

Jai Chandran

Musical Tribute to SPB by Renowned Doctor and Sikkil Gurucharan

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend