Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

ஏழு கடல் ஏழு மலை (பட விமர்சனம் )

படம்: ஏழு கடல் ஏழுமலை

நடிப்பு: நிவின் பாலி, சூரி, அஞ்சலி,

தயாரிப்பு: சுரேஷ் காமாட்சி

இசை: யுவன் சங்கர் ராஜா

கூடுதல் இசை: சந்தோஷ் தயாநிதி

ஒளிப்பதிவு : என் கே ஏகாம்பரம்

இயக்கம்: ராம்

பிஆர்ஓ : A.ஜான்

கதை: சாவே இல்லாமல் 8000 ஆண்டுகளாக வாழும் நிவின் பாலி, இன்றைய காலகட்டத்தில் வாழும் சூரி இருவரும் ஓடும் ரயிலில் சந்திக்கிறார்கள். 8000 ஆண்டுகளாக வாழ்வதாக கூறும் நிவின் பாலியிடம் ஏடா கூடமாக சிக்கிக் கொள்ளும் சூரி அவரிடம் செம மாத்து வாங்குகிறார். இதற்கிடையில் தான் சாவே இல்லாமல் வாழ்வது குறித்தும் ஒவ்வொரு காலகட்டத்திலும் தனது காதலியை சந்தித்த ஞாபகம் குறித்தும் சூரியிடம் நிவின் பாலி சொல்ல கதை ஏழு கடல் ஏழு மலை தாண்டி செல்கிறது.

கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, பறந்து போ என முத்திரை பதிக்கும் படங்களை இயக்கி அளித்த ராமிடமிருந்து முற்றிலும் மாறுபட்ட பேண்டஸி கதையாக உருவாகி இருக்கிறது ஏழு கடல் ஏழுமலை.

ஹல்க்  கதாபாத்திரம் எப்படி சாவே இல்லாமல் வாழ்கிறானோ அதுபோன்றுதான் சாவே இல்லாமல் வாழும் ஒரு பிறவியாக நிவின் பாலி வேடம் ஏற்றிருக்கிறார். என்னுடைய வயது 8,822 என்று நிவின் பாலி கூறும்போது ஒரு கணம் தலை சுற்றிப் போகிறது.

நிவின் பாலியிடம் சிக்கிக் கொள்ளும் சூரி அடிபட்டு மிதிபட்டு கதறுவதும் மீண்டும் அவருடன் ஃப்ளாஷ் பேக் கதையை கேட்பதும் மாறி மாறி நடப்பது ரிப்பீட் காட்சிகளாக இருந்தாலும் சூரியின் கதறல் குழந்தைகளை கைதட்டி ரசிக்க வைக்கும்.


ஏழு கடல் ஏழு மலை தாண்டி அங்கு மறைந்து வாழும் கிளியின் உடலில் நிவின்பாலி உயிர் இருக்கிறது என்று மந்திரவாதி கணக்கில் கதை சொல்லி இருந்தால் படத்தில் சுவாரஸ்யம் இன்னும் கூட அதிகரித்திருக்கும்.

அஞ்சலி, நிவின் பாலி காதலியாக வருகிறார். ஒரு தேவதை போலவே அவரை எண்ணி நிவின் பாலி அவரது காதலுக்காக பல்லாயிரம் ஆண்டுகளாக ஏங்குவது இனம் புரியாத ஒரு ஈர்ப்பை பரவச் செய்கிறது.
படத்தில் வரும் எலி கதை, புலி கதை, குரங்கு கதை எல்லாமே குழந்தைகளுக்கு கூடுதல் போனஸ்.

படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்திருக்கிறார். இந்த தளத்தில் கூட படத்தை உருவாக்கலாம் என்ற கதைசொல்லி கதையை இயக்குனர் ராம் இப்படத்தில் சொல்ல முயன்றிருக்கிறார்.

யுவன் சங்கர் ராஜா இசையில் ஏழு கடல் ஏழுமலை பாடல் மனதை மயக்கி இசை மழையில் நனைய வைக்கிறது.

என் கே ஏகாம்பரம் காலகட்ட வித்தியாசங்களை காட்டுவதற்காக கையாண்டிற்கும் காலர் டோன் காட்சிகளை ஓவியமாக கண்களில் பதிய வைக்கிறது. A I காட்சிகளும் படத்தில் நிரம்பி வழிகிறது.

ஏழு கடல் ஏழு மலை – ராமின் ஃபேண்டஸி தர்பார்.

Review by
K. Jayachandhiran
www.trendingcinemasnow.com

Related posts

வசந்தமுல்லை (பட விமர்சனம்)

Jai Chandran

15-வது ஆண்டில் ஜே எஸ் கே தரும் புது இயக்குனர்களுக்கு அரிய வாய்ப்பு!

Jai Chandran

ஒளிப்பதிவு சட்ட திருத்த வரைவுக்கு கமல் எதிர்ப்பு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend