கமல்ஹாசன் நடித்த அபூர்வ சகோதரர்கள் உள்ளிட்ட தமிழ் மற்றும் தெலுங்கு படங்களை இயக்கிய இயக்குனர் சங்கீதம் சீனிவாசராவ் நேற்று காலமானார் அவருக்கு வயது 95.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் 60 படங்களை இயக்கியிருக்கிறார் சிங்கீதம் சீனிவாசராவ்.தமிழில் கமல்ஹாசன் கூட்டணியில் பல வெற்றி படங்களை இவர் கொடுத்திருக்கிறார்.
குறிப்பாக கமல்ஹாசன் நடித்த அபூர்வசகோதரர்கள், மைக்கேல் மதனகாமராஜன், மகளிர்மட்டும், காதலா காதலா, மும்பை எக்ஸ்பிரஸ் ஆகிய படங்களை சிங்தம் சீனிவாசராவ் இயக்கியுள்ளார். இயக்குனராக மட்டுமல்லாமல் பல்வேறு யாரடி நீ மோகினி உள்ளிட்ட பல்வேறு படங்களிலும் சங்கீதம் சீனிவாசகம் நடித்திருக்கிறார் தனது 92 வது வயதில் சங்கீதம் என்ற படத்தை இயக்கி சாதனை படைத்தார்.
பல்வேறு மொழிகளில் ரசிகர்களை இயக்குனராகவும் நடிகராகவும் கவர்ந்த சங்கீதம் சீனிவாசனம் தனது 95 வது வயதில் வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு ரஜினிகாந்த், கமலஹாசன் உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் மற்றும் தமிழ் தெலுங்கு திரை உலகினர் அஞ்சலி செலுத்தினர்.
சங்கீதம் சீனிவாசன் பற்றிய சிறு குறிப்பு :
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் பிறந்தவர், சென்னையில் படித்தார். ஆரம்பத்தில் பள்ளி ஆசிரியராக, நாடக எழுத்தாளராக, பத்திரிகையாளராக பணியாற்றினார். சினிமா மீதான ஆர்வத்தால் அந்த காலத்தில் பிரபல இயக்குநராக இருந்த கே.வி.ரெட்டியிடம் உதவி இயக்குநராக சேர்ந்தார். ‘மாயாபஜார்’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றி இருக்கிறார்.

தெலுங்கில் 1972-ல் வெளியான ‘நீதி நிஜாயிதி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தமிழில் அவர் முதன்முதலில் இயக்கிய படம் ‘திக்கற்ற பார்வதி’ 1974-ல் வெளியாகி, தேசிய விருதையும் வென்றது. 54 ஆண்டுகளாக சினிமாவில் தொடர்ந்து இயங்கியவர்,
