Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

சிக்மா (பட விமர்சனம் )

படம்: சிக்மா

நடிப்பு: சந்தீப் கிஷன், பரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ்,  ஷூவ் பண்டிட், அன்பு தாசன், யோக் ஜெபி, ஷீலா ராஜ்குமார், மகாலட்சுமி சுதர்சனன்,, கமலேஷ் ஜெகன், கிரண் கொண்டா, நாக சாய்

தயாரிப்பு: லைகா ஏ சுபாஸ்கரன், லைகா நிறுவன தலைமை நிர்வாகி ஜி கே எம் தமிழ் குமரன்

இசை: தமன் எஸ்

ஒளிப்பதிவு : கிருஷ்ணன் வசந்த்

இயக்கம்: ஜேசன் சஞ்சய்  (அறிமுகம் ) ( நடிகர் விஜய் மகன்)

பிஆர்ஓ : சுரேஷ் சந்திரா  (D’One ), அப்துல் ஏ நாசர்

 கதை: இளைஞன் குரு (சந்தீப் கிஷன் ) பழைய லைப்ரரி நடத்தி வருகிறார். அதிலிருக்கும் புத்தக கதைகளை யூடியூபில் ஒலிவடிவில் வாசித்து  வெளியிடுகிறார். இதற்கிடையில் அவரது தந்தை வாங்கிய கடனுக்காக கடன் காரர்களிடம் சிக்கி தவிக்கிறார் . எப்படியாவது பணம் சம்பாதித்து கடனை அடைக்க வேண்டும் என்ற நிலையில் குருவிற்கு ரேடியோ ஜாக்கி சாம் (பரியா அப்துல்லா,) துணை நிற்கிறார். அதேசமயம் குரு கையில்1000 கோடி மதிப்பிலான  லாக்கர் சாவி கிடைக்கிறது   இதை அறிந்த வில்லன் கூட்டம் அந்த லாக்கர் சாவியை அடைய முயல்கிறது   இதில் நடக்கும் மோதல் எங்கு கொண்டு போய் நிறுத்துகிறது என்பதுதான் கிளைமாக்ஸ்.

 முதல்வர் நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கியிருக்கும் முதல் படம் சிக்மா எப்போது ரிலீஸ் ஆகும் என்று ரசிகர்கள் காத்திருந்த நிலையில் தற்போது திரைக்கு வந்திருக்கிறது.

இதில் ஜேசன் சஞ்சய் நடித்திருக்கிறாரா என்பதை விமர்சனத்தின் கடைசியில் பார்க்கலாம்.  இப்படத்தில் ஹீரோவாக  மாநகரம் சந்ததீப் கிஷன் நடித்திருக்கிறார்.   ஹீரோயிசத்தை குறைத்து சராசரி இளைஞனாக நடித்திருப்பது கதாபாத்திரத்திற்கு உயிரூட்டுகிறது.

நான் ஒத்தையால் அத்தனை பேரையும் அடித்து துவம்சம் செய்வேன் என்றில்லாமல் தன் கடனை அடைப்பதற்காக ஆயிரம் கோடி மதிப்பிலான லாக்கர் சாவி கிடைத்தும் தனக்கு வேண்டிய அளவில் ஒரு கோடி, ஒன்றரை கோடி என்று மட்டுமே வில்லன் கூட்டத்திடம் பேரம் பேசி அந்த பணத்தை வாங்குவதற்கு ஏ பி சி என்று பல்வேறு பிளான்களை போட்டு அதில் முட்டி மோதி பணத்தை இவர்களால் வாங்க முடியுமா என்ற ஒரு பெரிய கேள்வியை இயக்குனர் ஜேசன் சஞ்சய்  பல்வேறு டிவிஸ்ட்களாக  வைத்திருப்பது  சுவாரசியமாக  படத்தை கிளைமாக்ஸ் வரை கொண்டு செல்கிறது

ஹீரோயின் பரிதா அப்துல்லா  சொன்ன வேலையை செய்தால் போதுமென்று ரொம்பவும் மெனக்கெடாமல் நடித்து விட்டு சொல்கிறார். படத்தில் வில்லன்களுக்கு தான் அதிக வேலை..  சம்பத் ராஜ் உள்ளிட்ட மூன்று வில்லன்கள் ஆக்சன் காட்சிகளுக்கு  தீனி போட்டிருக்கிறார்கள். டாக்டராக வந்து அவ்வப்போது கிச்சு கிச்சு மூட்டுகிறார் ராஜூ சுந்தரம்

ஷிவ் பண்டிட், அன்பு தாசன், யோக் ஜெபி, ஷீலா ராஜ்குமார், மகாலட்சுமி சுதர்சனன்,, கமலேஷ் ஜெகன், கிரண் கொண்டா, நாக சாய்  ஆகியோரும்  நடித்திருக்கிறார்கள்.

லைகா ஏ சுபாஸ்கரன் படத்தை தயாரித்திருக்கிறார்.

தமன் எஸ் இசையில் பாடல்கள்  கேட்கும்படி உள்ளது. கிருஷ்ணன் வசந்த்   கேமரா  பளிச்சென காட்சிகளை பதிவு செய்திருக்கிறது.

 

முதல்வர் நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கியிருக்கும் முதல் படம் என்பதால் இப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்தது. கமர்சியல் ரீதியாக படத்தை இயக்கி  கமர்சியல் இயக்குனராக தனது பதிவை தொடங்கி இருக்கும்  ஜேசன்  சஞ்சய் படத்தில் நடித்திருக்கிறாரா என்றால் கிளைமாக்ஸ் முடிந்த பிறகு வரும் ப்ரோமோ சாங்கில் ஒரு ஆட்டம் ஆடி இருக்கிறார். இவர் தொடர்ந்து படங்களை இயக்குவாரா என்பது தெரியாது ஆனால் சீக்கிரமே ஹீரோவாக களத்தில் இறங்கி விடுவார் என்பது மட்டும் உறுதி.

சிக்மா – விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும்.

Review by

K. Jayachandhiran

www.trendingcinemasnow.com

 

 

 

Related posts

‘பிரேக்ஃபாஸ்ட்’ பட இசை விழாவில் வைரமுத்து பேச்சு..

Jai Chandran

ஸ்வீட்டி நாட்டி கிரேசி (பட விமர்சனம்)

Jai Chandran

‘Karnan ‘ 10th Place Globally

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend