Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

அனபெல் சேதுபதி (பட விமர்சனம்)

tபடம் : அனபெல் சேதுபதி
நடிப்பு: விஜய் சேதுபதி, டாப்ஸி, ஜெகபதி பாபு, ராஜேந்திர பிரசாத், ராதிகா சரத்குமார், வெண்ணிலா கிஷோர், சேத்தன், தேவதர்ஷினி, சுப்பு பஞ்சு, யோகி பாபு, மதுமிதா, ராஜ சுந்தரம், சுரேஷ் மேனன், ஜார்ஜ் மரியன், ராஜ்குமார், சுனில், சுரேகா வாணி, லிங்கா, ஹர்ஷதா, இந்து ரவி மற்றும் குழந்தை நட்சத்திரங்கள் உத்ரா , யுவனேஷ், அஷ்வின்
தயாரிப்பு: சுதன் சுந்தரம், ஜி ஜெயராம்
இசை:கிருஷ்ணா கிஷோர்
ஒளிப்பதிவு:கௌதம் ஜார்ஜ்
இயக்கம்: தீபக் சுந்தர்ராஜன்

சுதந்திரத்துக்கு முன்பு தொடங்கும் கதை இன்றைய காலகட்டத்தில் நிறைவடைகிறது. மன்னர் வீரசேதுபதி தனது காதலிக்காக அற்புத தொழில் நுட்பம் மற்றும் கலைவேளைப் பாடுகளுடன் கூடிய அரண்மனை ஒன்றை கட்டுகிறார். அதை காணும் ஜெகபதிபாபு அரண்மனையை தனதாக்கிகொள்ள எண்ணுகிறார். வீரசேதுபதியிடம் அரண்மனையை விலைக்கு கேட்கிறார். அவர் தர மறுக்கிறார். இதனால் கோபம் அடைந்த ஜெகபதிபாபு உணவில் விஷம் வைத்து வீரசேதுபதி அவரது காதல் மனைவி அன்பெல் இருவரையும் சாகடித்து அரணமனையை தனதாக்கிக்கொள்கிறார். ஆனால் வீரசேதுபதிக்கு விஸ்வசமான வேலைக்காரனாக இருக்கும் யோகிபாபு, ஜெகபதிபாபு குடும்பத்துக்கே விஷம் வைத்து கொல்வதுடன் தானும் அதை சாப்பிட்டு சாகிறார். ஆவியாக எல்லோரும் அந்த அரண்மனையில் சுற்றிக்கொண்டிருக் கின்றனர். அரண்மனைய எப்படியாவது அடைய வேண்டும் என்று எண்ணும் ஜெகபதிபாவின் பேரன் பேய்களை விரட்ட முடியாமல் தவிக்கிறார். அந்த அரண்ம னையை சுத்தப்படுத்த டாப்ஸி, ராதிகா, ராஜேந்திரபிரசாத் கொண்ட திருட்டு கூட்டத்தை அனுப்பி வைக்கிறார். அரண்மனை யில் இருப்பதை திருடிக்கொண்டு எஸ்கேப் எண்ணத்தில் அவர்கள் வருகின்றனர். அவர்களும் அரண்மனையிலிருந்து வெளியில் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். போன ஜென்மத்தில் வீரசேதுபதியின் காதல் மனைவி இந்த ஜென்மத்தில் டாப்ஸியாக பிறந்திருக்கி றார், டாஸியால்தான் தங்களை அரண்மனையி லிருந்து விடுவிக்க முடியும் என்று எல்லா பேய்களும் எண்ணுகின்றன. அதற்காக அவரை சுற்றி சுற்றி வருகின்றன. இறுதியில் பேய்களுக்கு விடுதலை கிடைத்ததா என்பதை கலகலப்புடன் படம் விளக்குகிறது.

பயமுறுத்தும் பேய்கதை, காதலிக்கும் பேய்கதை, கலகலப்பு பேய்கதை என பேய் கதையில் பல ரகங்கள் வந்துக்கொண்டிருக் கின்றன. அதில் இப்படம் கலகலப்பு பேய் கதை களத்தில் உருவாகி இருக்கிறது.

ஜெகபதிபாபு தொடங்கி யோகிபாபு என பெரும்பாலான நடசத்திரங்கள் பேய்களாக நடித்திருக்கின்றனர். பெயர்தான் பேய் ஆனால் எல்லோருக்கும் அழகான மேக்கப் போட்டு இயல்பான தோற்றத்திலேயே நடமாட விட்டிருக்கிறார் இயக்குனர்.
தொடக்க காட்சியில் தொடங்கும் டாப்ஸியின் சுட்டித்தனம் இறுதிவரை தொடர்கிறது. போலீஸில் சிக்கிக்கொள்ளும் ராதிகா, ராஜேந்திரபாபு, டாப்ஸி ஆகியோர் அரண்மனைக்கு சுத்தம் செய்ய அனுப்பி வைக்கப்படுவதிலிருந்து பேயின் கலகலப்பு ஆட்டம் தொடங்கி விடுகிறது.

டாப்ஸிதான் வீரசேதிபதியான விஜய்சேது பதியின் மனைவி அனபெல் என்பதை தெரிந்துக்கொண்டு அவருக்கு பழைய ஞாபகங்களை வரவழைக்க யோகிபாபு படாதபாடுபட்டு சோர்ந்து போவது வெடிசிரிப்பை வரவழைக்கிறது.
மற்றபடி சுப்பு பஞ்சு, சேத்தன், மதுமிதா என ஒரு பட்டாளமே பேயாட்டம் போட்டிருக் கிறது.

டாப்ஸியின் அம்மாவாக வரும் ராதிகாவும் சோகமான நடிப்புக்கு குட்பை சொல்லி நகைச்சுவையை அள்ளி வழங்குகிறார்.

வீரசேதுபதியாக, விஜய் சேதுபதியின் என்ட்ரி இடைவேளைக்கு பிறகுதான் வருகிறது. ஆனால் படம் முழுவதும் இருப்பதுபோன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தி விடுகிறார்.

எப்படி வேண்டுமானாலும்கொட்டம் அடியுங்கள் என்று ஒரு அரண்மனையை பிடித்து அனைவரையும் உள்ளே அனுப்பி வைத்திருக்கும் இயக்குனர் தீபக் சுந்தரராஜன் காட்சிகளை சுவைபட இயக்கி உள்ளார்.

கிருஷ்ணா கிஷோர் இசை இனிமை சேர்க்கிறது. அதேபோல் நடன காட்சிகளும் அழகாக அமைக்கப்பட்டிருக்கிறது. அரண்மனை, ராஜா என்று கதை இருந்தாலும் ராணியின் பரதநாட்டியம் மிஸ்ஸிங்.

கௌதம் ஜார்ஜ் ஒளிப்பதிவு பளீரென காட்சிகளை கண்களுக்கு விருந்தாக்குகிறது.
எல்லா பேய்களும் அரண்மனையை விட்டு வெளியேறினாலும் ஜெகபதிபாபு பேய் மட்டும் அரணமனையை விட்டு வெளியே போக முடியாமல் தவிக்கிறது. படத்தின் 2ம் பாகம் வரும் என்று எண்ட் கார்ட் போட்டு சீனை முடிக்கிறார்கள்.

அன்பெல் சேதுபதி- கலகலப்பு காமெடி பேய்படம்.

Related posts

Vijay Deverakonda LIGER (Saala Crossbreed) Song Shoot In Mumbai

Jai Chandran

#SeetiMaar Radhe Out No

Jai Chandran

Lokesh Kanakaraj releases intense first look of Sirai

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend