Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தஞ்சையில் 1000 மூட்டை நெல் மழையில் சேதம்: கமல் கேள்வி

தஞ்சையில் 1000 மூட்டை நெல் மழையில் சேதம்: அடைந்திருப்பது  குறித்து மக்கள் நீதி மய்யம் விவசாய அணி மாநில செயலாளர் டாக்டர் ஜி.மயில்சாமி வெளியிட்டுள்ள அறிக்கை:

சமீபசத்தில் தஞ்சையில் பெய்த மழையில், அரசு கொள்முதல் செய்து வைத்திருந்த நெல் ஏறக்குறைய 1000 மூட்டைகள் நனைந்து வீணாகிவிட்டது என்ற வேதனை மிகுந்த செய்தி வெளியாகியிருக்கிறது.

இது அடிக்கடி நடப்பதும் விவசாயிகளின் சார்பாக நாங்கள் கண்டனம் தெரிவிப்ப தும் வழக்கமாகிப்போன ஒன்றாக உள்ளது.

நெல்மூட்டைகள் மழையில் நனைந்தால் முளைத்துப்போய்விடும் ஆபத்து இருக்கிறது என்ற குறைந்தபட்ச அறிவுகூட நம் அரசுக்கும், அந்த துறைக்கும் இல்லை என்பது அதிர்ச்சிகரமான உண்மை. நமக்கே உரிய ஒரு பொருளாக இருந்தால் இப்படி வெட்டவெளியில் விடுவோமா?

அரசு எப்போதும், பொதுச்சொத்து என்பது மக்கள் சொத்து என்பதை உணர்ந்து அதை கவனமாக கையாள வேண்டும் என்பதே மக்கள் நீதி மய்யத்தின் கோரிக்கை.

கர்நாடகா அரசு காவிரியில் தண்ணீர் விடுவதில் செய்யும் கெடுபிடி, உரவிலை, அறுவடை நேரத்தில் காலம் தப்பி பெய்யும் மழை என்ற பல தடைகளை தாண்டி விவசாயிகளின் கண்ணீரில் விளைந்த அந்த நெல்லை இப்படி மழைத்தண்ணீரில் பறிகொடுக்கும் தவறை செய்யும் யாருக்கும் மன்னிப்பே கிடையாது.

இனியும் இது தொடருமானால் மக்கள் நீதி மய்யம் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு பாக்டர் ஜி.. மயில்சாமி கூறியுள்ளார்.

Related posts

ஆஸ்கார் விருது நடிகர் குழுவில் ராம் சரண்

Jai Chandran

கண்ணை நம்பாதே (பட விமர்சனம்)

Jai Chandran

“டான்ஸிங்க் ரோஸ்” பாராட்டு மழையில் நடிகர் ஷபீர் கல்லரக்கல்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend