படம்: அயலான்
நடிப்பு: சிவகார்த்திகேயன், ரகுல் பிரீத் சிங், யோகிபாபு, கருணா கரன், இஷா கோபிகர்,, ஷரத் கெல்கர், பானுப்ரியா, பால சரவணன்,
தயாரிப்பு: கே ஜி ஆர் ஸ்டுடியோஸ்
இசை: ஏ. ஆர்.ரஹ்மான்
ஒளிப்பதிவு: நீரவ் ஷா
இயக்கம்: ஆர்.ரவிகுமார்
பி ஆர் ஒ: சுரேஷ் சந்திரா(Done), ரேகா, நாசர்
இந்த பூமி மனிதர்களுக்கு மட்டுமல்ல சிறு சிறு பூச்சிகள் புழுக்கள்பறவைகள் விலங்குகள் என அனைத்திற்குமான இடம் என்ற எண்ணம் கொண்டவர் சிவகார்த்திகேயன். கிராமத்தில் இருக்கும் அவரை அவரது தாய் பட்டணத்துக்கு சென்று வேலை செய்து சம்பாதிக்கும்படி அறிவுறுத் துகிறார் அதன்படி சென்னை வருகிறார் சிவகார்த்திகேயன். வந்த இடத்தில் அவருக்கு கருணாகரன், யோகி பாபு நண்பர்கள் ஆகிறார்கள். இந்நிலையில் வேற்றுகிரகத்தி லிருந்து வரும் வேற்றுகிரகவாசி பூமியில் மனிதர்கள் இயற் கைக்கும் பூமிக்கும் அளிக்கும் அழிவை தடுக்கும் முயற்சியில் இறங்குகிறது. ஆனால் அதனால் அதை செய்து முடிக்கவில்லை. இந்நிலையில் வேற்று கிரக வாசிக்கு சிவகார்த்திகேயன் நண்பராகிறார் சிவகார்த்தி கேயனின் நல்ல மனம் வேற்று கிரகவாசியை கவர்கிறது. இவர் தான் இந்த பூமியை காப்பாற்ற சரியான நபர் என்று அது முடிவு செய்து அவருடன் ஒன்றிணைந்து பூமியின் அழிவை தடுக்க முயல்கிறது. பூமியின் அதிக ஆழத்திலிருந்து ஆபத்தான வாயுவை (கேஸ்) எடுக்க ஒரு கார்ப்பரேட் நிறுவனம் முயற்சிக் கிறது. அதற்காக விண்வெளியில் இருந்து வந்த ஒரு விண்கல்லை அந்த கார்ப்பரேட் வில்லன் பயன் படுத்துகிறான். இதற்காக பல்வேறு நிறுவன அதிபர்களை தன்னுடன் கூட்டு சேர்த்துக் கொள்கிறான். வேற்றுகிரகவாசி இதை தடுக்க முயலும்போது வேற்றுகிரகவாசியை தன் கட்டுப் பாட்டுக்கு வில்லன் கொண்டு வருகிறான். அதை மீட்பதற்காக சிவகார்த்திகேயன் கார்ப்பரேட் நிறுவனத்திற்குள் நுழைந்து சாதுர்யமாக அதை மீட்டு விண்கலத்தில் ஏற்றி அனுப்பு கிறார். அதன் பிறகு அங்கு பெரும் சண்டை நடக்கிறது. இதில் சிவகார்த்திகேயனை அடித்து சாய்க்கின்றனர்.அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வேற்றுகிரக வாசி சிவகார்த்திகேயனுக்கு மீண்டும் உயிர் கொடுக்க முயற்சிக்க அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மீண்டும் வேற்று கிரகவாசியை வில்லன் கூட்டம் சிறை பிடிக்கிறது. இதற்கிடையில் சிவகார்த்திகேயனுக்கு வேற்று கிரகவாசிபோல் பவர் வந்து விடுகிறது. அதை வைத்து அவர் வில்லன் கூட்டத்திடம் இருந்து வேற்றுகிரகவாசியை எப்படி மீட்கிறார்,, இந்த பூமியை அவர் களிடமிருந்து எப்படி பாதுகாக் கிறார் என்பதை கிளைமாக்ஸ் விளக்குகிறது.
சிவகார்த்திகேயன் இதற்கு முன்பு நடித்த மாவீரன் படம் வானிலி ருந்து கேட்கும் குரலை கேட்டு அடுத்த நிமிடம் என்ன நடக்கப். போகிறது என்பதை அவர் தெரிந்து கொள்வதுபோல் கதை அமைக்கப்பட்டு இருந்தது அயலான் படத்தில் சற்று வித்தியாசமாக வேற்றுகிரகத்தி லிருந்து வரும் வேற்றுகிரக மனிதன் சிவகார்த்திகேயனுக்கு சக்தி அளிக்க அதைக் கொண்டு அவர் சாகசங்கள் செய்வது போல் கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அந்தப் படத்துக்கும் இந்தப் படத்துக்கும் காட்சியும் கருவும் முற்றிலும் வித்தியாச மானது.
சிவகார்த்திகேயன் கிராமத்திலி ருந்து சென்னைக்கு வந்த பிறகு தான் கதையில் விறுவிறுப்பு தொற்றுகிறது.வேற்றுகிரக வாசியை சிவகார்த்திகேயன் கண்டு அவரிடம் நட்பு கொண்ட பிறகு கதையின் போக்கு முற்றிலுமாக மாறுகிறது அதனுடன் ஜாலியாக விளை யாடுவது, பழகுவது, லாலிபாப் சாப்பிடுவது என்று பல்வேறு விளையாட்டுத்தனங்களை செய்து குழந்தைகளை கவர்கிறார்.
சிவகார்த்திகேயன் யோகி பாபு கருணாகரன் ஆகியோருடன் இணைந்து வேற்றுகிரகவாசி செய்யும் சேட்டைகள் குறிப்பாக யோகி பாபுவை பார்த்து அடிக்கும் கமெண்ட்கள் அரங்கை கலகலப்பில் ஆழ்த்துகிறது.
வேற்றுகிரகவாசி பூமியில் எங்கு தங்கி இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க வில்லன் கூட்டம் அனுப்பும் செயற்கை கருவிகள் பறந்து வந்து அது இருக்கும் இடத்தை கண்டுபிடிப்பதும் அதனிடமிருந்து தப்பிக்க வேற்று கிரகவாசியை காரில் வைத்துக் கொண்டு சிவகார்த்திகேயன் எஸ்கேப் ஆவதும் விறுவிறுப்பு.
ஒரு வழியாக வில்லன் கூட்டம் வேற்றுகிரகவாசியை சிறை பிடித்துச் சென்று கண்ணாடி கூண்டுக்குள் அடைத்து சித்திர வதை செய்து அதனிடம் பூமியை துளைத்தெடுக்கும் விண்கல் எங்கு இருக்கிறது என்று கேட்டு அதன் நாடி நரம்புகளை மின்சாரம் வைத்து சித்திரவதை செய்வது ஐயோ பாவம் காட்சிகள்.
வேற்றுகிரகவாசியை மீட்பதற்காக சிவகார்த்திகேயன் ரகசிய இடத்திற்கு வருவதும் அங்குள்ள கூட்டத்தை துவம்சம் செய்து அதனை மீட்டு விண்கலத்தில் ஏற்றி அனுப்பி வைப்பது நிம்மதி பெருமூச்சு விட வைத்தாலும் அடுத்த நொடி சிவகார்த்திகேயன் வில்லன் ஆட்களால் கொலை செய்யப்படும் அளவுக்கு கடப்பாறையில் குத்தி ரத்த வெள்ளத்தில் மிதப்பதை பார்த்ததும் விண்கலத்தில் தப்பிச் செல்லும் வேற்றுகிரவாசி மீண்டும் திரும்பி வந்து சிவகார்த்தி கேயனை உயிர் பெறச் செய்ய அவருக்கு தன் உடலில் இருந்து சக்தியை தருவது திருப்பமாக அமைகிறது.
திடீரென்று சிவகார்த்திகேயனுக்கு சூப்பர் மேன் சக்தி வந்தவுடன் எதிரி கூட்டத்தை அந்தரத்தில் பறக்க விட்டு அதிரடி காட்டும் சண்டைக் காட்சிகள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்க வைக்கிறது.
சிவகார்த்திகேயன் காதலியாக வரும் ரகுல் பிரீ ரத் சிங் ஒரு தோழி போலவே வந்து செல்கிறார். காதல் கதை இல்லை என்பதால் அவருக்கு ஒன்றும் பெரிதாக வேலை இல்லை.
வில்லன் கூட்டத்தில் இருக்கும் இஷா கோபிகர் ஒரு ஆக்சன் வீராங்கணையாக வருகிறார் சிவகார்த்திகேயனுடன் அவர் நேரடியாக மோதுவதும், ஒரு கட்டத்தில் சிவகார்த்திகேயனை கடப்பாறையால் குத்தி கொல்ல முயல்வது சரி வில்லித்தனம்.
ஜெயன்ட் ரோபோவிடம் சிவகார்த் திகேயன் மோதும் காட்சி சிறுவர்களை ரசனைக்குள் ளாக்கும்..
வில்லன் சரத் கல்கர் கட்டுமாஸ் தான உடற்கட்டுடன் செய்யும் அடாவடித்தனம் பயங்கரம். தன் உடம்பிற்குள் சக்தி ஏற்றிக். கொண்டு சிவகார்த்திகேயனுடன் மோதுவது பவர்ஃபுல் ஆக்சன் காட்சி.
கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரித்திருக்கிறது
வேற்றுகிரகவாசி படம் எடுக்கி றேன் என்று சொல்லி சொதப் பாமல் ஹாலிவுட் படங்களுக்கு நிகராக காட்சிகளை அமைத்து இயக்கியிருக்கும் ஆர் ரவிக்குமார் உண்மையில் ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் படத்தை தரமாக தந்திருக்கிறார்.
தமிழுக்கு புதுமையாக மாறுபட்ட புதிய படைப்பாக உருவாகி யிருக்கும் இப்படத்திற்கு பொருத்தமாக இசையமைத்து ஏ ஆர் ரகுமான் காட்சிகளை மேலும் பட்டைதீட்டி இருக்கிறார்.
நீரவ்ஷா ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்க்கிறது. முக்கிய பங்காற்றியிருக்கிறது வி எஃப் எக்ஸ் மற்றும் கிராபிக்ஸ் காட்சிகள் வேற்றுகிரகவாசியின் தோற்றத்தை வடிவமைத்திருக்கும் ஆர்ட் டைரக்டருக்கு கைகுலுக் கலாம்.
இடைவேளை வரை படம் சற்று நீளமாக தோன்றினாலும் இடைவேளைக்குப் பிறகு ஆக்சன் காட்சிகள் அதனை ஈடு செய்தி ருக்கிறது. இடைவெளிக்கு முன்பான சில காட்சிகளை குறைத்தால் படம் இன்னும் ஸ்கிப்பாக இருக்கும்.
அயலான் – தமிழில் ஒரு புதிய முயற்சி.