Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மகளிர் உரிமைத்தொகை எப்போது? கமல் கட்சி கேள்வி

மகளிர் உரிமைத்தொகை எப்போது? என்று  மக்கள் நீதி மய்யம் கேள்வி! எழுப்பி உள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
(

மக்கள் நீதி மய்யம் முதலில் முன்வைத்த “மகளிர் உரிமைத் தொகையானது” திமுகவின் தேர்தல் அறிக்கையிலும் இடம்பெற்றது.

கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும் என்றார் முதல்வர்.
ஆட்சிக்கு வந்தபின்னர், “…அனைவருக்கும் வழங்க முடியாது; உரிமைத்தொகை பெறத்தகுதியானவ ர்களைத் தேர்ந்தெடுத்து வழங்குவோம்” என்றார் நிதியமைச்சர்.

கடந்த பட்ஜெட்டின்போது, நிதிநிலைமை சரியானதும் வழங்கப்படும் என்று புதுநிலைப்பாடு எடுத்தார் நிதியமைச்சர்.

தமிழகத்தின் நிதிநிலைமை குறித்து விவாதிக்க முதல்வர், நிதியமைச்சர் தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ள சூழலில் “மகளிர் உரிமைத்தொகை” திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, விரைவில் அமல்படுத்தப்பட வேண்டும் என்று மக்கள் நீதி மக்கள் வலியுறுத்துகிறது.

Related posts

ஆவிச்சி கல்லூரியில் ’’ஏ.வி.எம். மாஸ்டர் கிளாஸ் -2022’

Jai Chandran

Lyca Production’s ‘Lal Salaam’ all set for a Pongal release

Jai Chandran

நான்கு கதாநாயகிகள் இணைந்து நடிக்கும் ‘வார்டு126’

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend