Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

ஜீப்ரா (பட விமர்சனம்)

படம்: ஜீப்ரா

நடிப்பு: சத்தியதேவ், தாளி தனஞ்செயா, சத்யராஜ், பிரியா பவானி சங்கர், சுனில், ஜெனிபர்

தயாரிப்பு: எஸ் என் ரெட்டி, பாலசுந்தரம் தினேஷ் சுந்தரம்

இசை: ரவி பர்சூர்

ஒளிப்பதிவு: பாபா பாஸ்கர் ஆர் கே

இயக்கம்: ஈஸ்வர் கார்த்திக்

பி ஆர் ஓ: சதீஷ் (AIM)

வெவ்வேறு வங்கியில் பணிபுரியும் சத்திய தேவ்,  பிரியா பவானி இருவரும் காதலிக்கின்றனர். ஒரு சமயம் பிரியா பவானிக்கு வங்கியில் எதிர்பாராத ஒரு சிக்கல் ஏற்பட அதை தீர்த்து வைக்க சத்தியதேவ் ஒரு தில்லு முல்லு வேலை செய்கிறார்.. அதன் தொடர்ச்சியாக பல்வேறு தில்லுமுல்லுகளை செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகி பெரிய ரவுடி கூட்டம், அரசியல்வாதிகள் வலை, போலீஸ் சுற்றிவளைப்பு என பல சிக்கலில் சிக்குகிறார். 5 கோடி ரூபாயை நான்கு நாட்களில் ரவுடி தலைவரிடம் ஒப்படைப்பதாக சத்திய தேவ் வாக்கு தருகிறார். அவரால் அது முடிந்ததா? ரவுடி தலைவனுக்கு சத்தியதேவ் ஏன் பணம் தர வேண்டும் என்ற கேள்விகளுக்கு படம் பதிலளிக்கிறது.

கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வந்திருக்கும் படம் என்றாலும் சத்யராஜ், ப்ரியா பவானி சங்கர் முக்கிய இடங்களில் நடித்திருப்பதால் டப்பிங் படத்தை பார்க்கிறோம் என்ற உணர்வு  ஏற்படவில்லை.

வங்கி அலுவலராக வரும் சத்தியதேவ் காதலி பிரியா பவானிக்காக வங்கி கணக்கில் ஒரு தில்லுமுல்லு செய்ய அதன் தொடர்ச்சியாக சத்தியதேவ்  எதிர்கொள்ளும் அடுத்தடுத்த சிக்கல்கள் காட்சிகளை விறுவிறுப்பாக நகர்த்தி செல்கிறது.

கோடிக்கணக்கில் வங்கிகளில் எப்படி மோசடி நடக்கிறது என்பதை சத்தியதேவ் மூலமாக இயக்குனர் புட்டு புட்டு வைத்திருக்கிறார். இப்படி எல்லாம் கூட வங்கியில் தில்லுமுல்லு செய்யலாமா என்று யோசிக்க வைத்து அதை திரைக்கதையில் இணைத்து பக்காவாக நகர்த்தி  இருக்கும் இயக்குனர் எப்படி எல்லாம் யோசித்திருக்கிறார் என்று ஆச்சரியப்பட வைக்கிறார்.

பிரியா பவானி,  சத்தியதேவ் காதலியாக வருகிறார். அவருக்கு  உதவப்போய் இவரும் சிக்கலில் மாட்டிக் கொள்வாரோ என்று அடிக்கடி ஷாக் ஆகி . திக் திக் ஆக்குகிறார்.

குதிரை ரேஸ் ஆடி ஜெயிக்கும் வித்தியாசமான ரவுடியாக சத்யராஜ் நடித்திருக்கிறார்.

ரவுடிகளே நடுங்கி அதிரும் கில்லடியாக தாளி தனஞ்ஜெயா ஆக்ஷன் காட்சிகளில் அதிர விட்டிருக்கிறார்.

சர்வ சாதாரணமாக வங்கியில் கோடிக்கணக்கான ரூபாயை தில்லு முல்லு செய்வதும், அதை டிஜிட்டல் ட்ரான்ஸ்பர் செய்து வேறு ஒருவருக்கு அனுப்புவதும் என  ஜம்போ சைஸ் ஊழல்கள் அதிர்ச்சியை தந்தாலும் இதெல்லாம் நடக்கக்கூடிய செயலா என்ற ஒரு சந்தேகமும் ஏற்படுகிறது.

கோடிக்கணக்கில் பண பரிவர்த்தனையை செல்போனிலேயே டீல் செய்வதெல்லாம் நம்ப முடியாத காட்சிகள். 10 லட்ச ரூபாய்க்கு மேல் பண பரிமாற்றம் செய்வதென்றாலே கணக்கு வைத்திருக்கும் நபர்  வங்கிக்கு நேரில் வரவேண்டும் என்ற விதிமுறையில் இருக்கும் நிலையில் இருந்த இடத்திலிருந்து கோடிகளை செல்போன் மூலம் வரவு வைப்பதும், அனுப்பி வைப்பதுமாக ஏதோ பஜாரில் கத்திரிக்காய் வாங்கி கைமாற்றி விடுவதை சர்வசாதாரணமாக செய்து தலை சுழல வைக்கிறது.

தெலுங்கு நடிகர் சுனில் 50% வில்லனாகவும், 50% காமெடியனாகவும் நடித்திருக்கி றார்.

ரவி பர்சூர இசை ரசிகர்களை கண் அசர விடாமல் தட்டி தூக்குகிறது

பாபா பாஸ்கர் ஆர் கே  கேமரா காட்சிகளை பளிச்சிட வைக்கிறது.

ஈஸ்வர் கார்த்திக்  கமர்சியல் நோக்கத்தில் வங்கியில் நடக்கும் மோசடி விளையாட்டில் புகுந்து விளையாடி இருக்கிறார். படத்தின் இரண்டாம் பகுதியை நீட்டி முழக்கியிருக்கிறார்கள்.

ஜீப்ரா –  பதற வைக்கும் வங்கி மோசடி. .

 

 

 

 

 

 

 

 

Q weeds

Related posts

Titling films in Tamil should be brought back

Jai Chandran

என் திரையுலக வாழ்விற்கு வித்திட்டவர் இயக்குனர் சேரன் : ஆரி அர்ஜூனன் நெகிழ்ச்சி

Jai Chandran

ராஜமவுலியின் ஆர் ஆர் ஆர் 550 தியேட்டரில் நாளை ரிலீஸ்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend