Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இளம் நடிகை சகானா திடீர் மரணம்: சாவில் மர்மம்?

திரையுலகில் ஷோபனா, சில்க் ஸ்மிதா  , பிரவினா, விஜி  என ஒரு சில நடிகைகள் தற்கொலை செய்து இறந்துள்ளனர். அந்த மரணங்கள் குறித்து பிரபலங்கள் சிலர் மீது வழக்கு பதியப்பட்டு போலீஸ் விசாரணையும் நடந்திருக்கிறது. ஆனால் யாரும் தண்டிக்கப்பட்டதுபோல் தெரிய வில்லை. த்ற்போது இளம் நடிகை ஒருவர் மரணம் பலத்த சந்தேகத்தை எழுப்பி உள்ளது.
கேரள மாநிலம் காசர்கோட்டை சேர்ந்தவர் சகானா (வயது 20). மலையாள படங்களில் நடித்து வந்தார்.  மாடலிங் தொழிலிலும்  ஈடுபட்டிருந்தார். வளர்ந்து வரும் நடிகையான இவர் சென்ற ஆண்டு சஜாத் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இருவரும்  கோழிக்கோட்டில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தனர். இந்நிலையில் சகானா  இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த  அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சகானாவின் உறவினர் களும் தகவல் அறிந்து அங்கு சென்றனர
சம்பவ. இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் சகானாவின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சகானாவின் படுக்கை அறையையும் சோதனை செய்தனர். அங்கு கஞ்சா மற்றும் சில போதை பொருட்கள் இருந்தன. அதனை கைப்பற்றிய போலீசார், இது தொடர்பாக அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.
சகானாவும், அவரது கணவரும் அடிக்கடி  சண்டையிட்டு   வந்ததாக அக்கம்பக்கத் தினர் தெரிவித்தனர்.இதுகுறித்து போலீசார்  சகானாவின் கணவர் சஜாத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.  சகானாவின் மரணம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சகானாவின் மரணம் கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

Related posts

‘கல்கி 2898 AD’யில் ‘பைரவா’வாக பிரபாஸ்.

Jai Chandran

பிரஷாந்த் இன்னும் பெரிய உயரத்தை தொடுவார்: ஆர்.கே.செல்வமணி வாழ்த்து

Jai Chandran

தி லெஜெண்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா ( கார்ட்டூன் பட விமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend