Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

யசோதா (பட விமர்சனம்)

படம்: யசோதா
நடிப்பு: சமந்தா, வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா, சம்பத்ராஜ், சஹத்ரு, மதுரிமா, காவ்யா, கல்பிகா, திவ்யா ஸ்ரீபடா, பிரியங்கா சர்மா,

தயாரிப்பு: சிவலெங்கா கிருஷ்ணபிரசாத்

இசை: மணிசர்மா

ஒளிப்பதிவு : எம்.சுகுமார்

இயக்கம்: ஹரி – ஹரிஸ்

பி. ஆர் ஓ:சுரேஷ் சந்திரா, ரேகா (D’ one)

வாடகை தாய் பற்றிய பதறவைக்கும் கதையாக உருவாகியிருக்கிறது யசோதா.

யசோதா(சமந்தா) தன் தங்கையின் பராமரிப்பு செலவிற்காக வாடகை தாயாக ஒப்புக்கொள் கிறாள். அவரை வாடகை தாயாக்கும் நிறுவனம் வீட்டிலிருந்து தங்களது ஆடம்பர விடுதிக்கு அழைத்துச் செல்கிறது. வசதிகளுக்கு குறை வில்லாத அந்த விடுதியில் ஏற்கனவே பல இளம்பெண்கள் வாடகை தாயாக இருப்பதை கண்டு யசோதா திகைக்கிறார். விடுதியின் ஹெட் மதுபாலா (வரலட்சுமி) எல்லோருக்கும் உத்தரவுகள் கொடுத்து பராமரிக்கிறார். பிரசவத்துக்காக அழைத்துச் செல்லப் படும் பெண்ணோ, குழந்தையோ மீண்டும் திரும்பாதநிலையில் சந்தேகப்பட்டு அந்த ரகசிய விடுதியை பற்றி துப்பு துலக்குகிறார் யசோதா அதில் பல திடுக்கிடும் அதிர்ச்சி தகவல்கள் வெளிவரு கிறது. இதன் முடிவு என்ன என்பதை ஆக்ஷன் அதிரடியுடன் விளக்கு கிறது படம்.

யசோதா என்ற கதாபாத்திரத்தில் தனது முழுதிறனையும் வெளிப் படுத்தி நடித்து ஆச்சர் யப்பட வைக்கிறார் சமந்தா.

தங்கையின் செலவுக் காக என்று வாடகை தாயாக செல்லும் சமந்தா விடுதியில் சக தோழிகளுடன் அடிக்கும் லூட்டி கலகலப்பு.

சிகரெட் பாக்கெட்டுக்குள் சாக்லெட் வைத்து ஏமாற்றுவது, விடுதி வார்டனின் டேப் லெட்டை திருடி வைத்துக் கொண்டு அவரை அலையவிடுவது என காமெடிகள் செய்யும் சமந்தா திடீரென்று டிடெக்டிவ்போல் விடுதியின் ரகசிய அறைகளுக்குள் பூனை போல் நுழைவதும் வசமாக சிக்கிக்கொண்ட பின் மயங்கி விழுந்து சமாளிப்பதும் நல்ல டெக்னிக்.

ஒரு கட்டத்தில் ஆக்‌ஷன் அதிரடி புலியாகி விடுகி றார் சமந்தா. மீண்டும் ஒரு விஜயசாந்தி கிடைத்து விட்டார் என்பதுபோல் சண்டைக் காட்சிகள் அவர் எடுத்திருக்கும் ரிஸ்க் இனி சம்ந்தாவை ஆக்‌ஷன் ஹீரோயி னாக்கிவிடும் என்பதில் சந்தேகமில்லை.
அதுவும் கர்ப்பிணியாக இருந்துகொண்டு சமந்தா செய்யும் சண்டை காட்சிகள் எந்த நேரத்தில் என்னவாகு மோ என்ற பதற்றத்தை அரங்குமுழுவதும் பரவச் செய்கிறது.

வரலட்சுமி சரத்குமார் மாறுபட்ட கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார். வில்லியாகவும் மாறி மிரள வைக்கிறார்.

டாக்டராக வரும் உன்னி முகுந்தன் தோற்றமே , அவர்தான் வில்லன் என்று காட்டிக் கொடுக் கிறது. அதை மறைப்ப தற்காக சமந்தாவை காதலிப்பதுபோல் போக்கு காட்டியிருக்கின் றார் இயக்குனர்.

இதெல்லாம் ஒரு பக்கம் நடக்க மற்றொரு பக்கம் அரசியல் சதுரங்கம், போலீஸ் துரத்தல்கள் படத்தை கிரைம் சப்ஜெக்ட் தளத்துக்கு இட்டுச் செல்கிறது.

காட்டுக்குள் இவ்வளவு நவீன வசதிகளுடன் ஒரு ரகசிய இடம் இருப்பதாக சொல்வதை ஏற்க முடியவில்லை.

கதைக்கரு இப்படிக்கூட நடக்குமா என்று வியப்பை ஏற்படுத்தி னாலும் இதெல்லாம் நடந்துக்கொண்டிருக்கும் சம்பவங்களாகவே நம்பத்தோன்றுகிறது.

சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரித்துள் ளார்.

மணிசர்மா இசை அதிர வைக்கிறது.

எம்.சுகுமார் கேமிரா காட்சிகளை தெள்ளத் தெளிவாக படமாக்கி யுள்ளது.

இயக்குனர்கள் ஹரி – ஹரிஸ் மருத்துவ துறையில் குறிப்பாக வாடகை தாய் விவகாரத் தில் நடக்கும ஒரு சில அவலங்களை வெளிசம்போட்டு காட்டியிருக்கின்றனர்.

யசோதா – ஒவ்வொரு பெண்களும் அவசியம் பார்க்க வேண்டிய படம்.

Related posts

150 சதவிகித சொத்துவரி உயர்வு நியாயமற்றது: ,சரத் அறிக்கை

Jai Chandran

நாகரத்தினம் – இலக்கியாவின் வள்ளிமலை வேலன் இசை வெளியீட்டு விழா

Jai Chandran

நடிகை பார்வதி நாயர் போலீஸ் புகார் குறித்து அறிக்கை

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend