படம்: பரோல்
நடிப்பு: ஆர். எஸ். கார்த்திக், லிங்கா, கல்பிகா, மோனிஷா முரளி, விநோதினி, மேக் மணி, சிவம், டென்னிஸ், இமானுவேல், ஜானகி சுரேஷ், டி எஸ் ஆர்
தயாரிப்பு: எஸ்.மதுசூதனன்
இசை: ராஜ்குமார் அமல்
ஒளிப்பதிவு : மகேஷ் திருநாவுக்கரசு
இயக்கம்: துவாரக் ராஜா
பி ஆர் ஒ: சதீஷ் (AIM)
வட சென்னை பகுதியில் வசிக்கும் கரிகாலன் (லிங்கா) , கோவலன் ( கார்த்திக்) சகோதரர்கள். கரிகாலன் குத்துவெட்டு கொலை என்று கூலிப்படைபோல் செயல் படுகிறான். ஆனாலும் அவன் மீதுதான் அம்மா அதிகம் பாசம் காட்டுகிறார். தான் பிரியமாக இருந்தாலும் தன் மீது அம்மா பாசம் காட்டுவதில்லை என்று கோவலன் எரிச்சலடைகிறான். கொலை வழக்கில் கரிகாலன் ஜெயிலுக்கு செல்கிறான். இந்நிலையில் அவனது தாய் இறந்து விடுகிறார். அவரது உடலுக்கு இறுதி சடங்கு செய்ய அண்ணன் கரிகாலனை தம்பி கோவலன் பரோலில் வெளியில் கொண்டு வர முயற்சிக் கிறான். இதற்கிடையில் உள்ளுர் எதிரிக்கும்பல் கரிகாலன், கார்த்திக் இருவரையும் போட்டுத் தள்ள முடிவு செய்கின்றனர். இறுதியில் நடப்பது என்ன என்பதை கிளைமாக்ஸ் விளக்கு கிறது.
எவ்வளவு லோக்கலாக எடுக்க முடியுமோ அவ்வளவு லோக்காக பரோல் படத்தை இயக்கியுள்ளார். இயக்குனர்.
லிங்காவும், பி.எஸ். கார்த்தியும் அசல் வட சென்னைவாசிகளாகி யிருக்கின்றனர்.
கத்தியை கையில் வைத்துக் கொண்டு சகட்டு மேனிக்கு கொலை செய்கிறார் லிங்கா. எவ்வளவு கொலைகள் என்பதை கணக்கு வைக்க முடியவில்லை.
திடீரென்று காதலி கல்பிகா வந்ததும் அவரை வைத்து
லிங்கா மனம் திருந்தி விட்டார்போல் பில்டப் செய்யும் காட்சிகள் கொஞ்சம் இளைப்பார வைக்கிறது. ஆனால் மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதையாக சகட்டு மேனிக்கு கொலை படலம் தொடர்வது பயமுறுத்துகிறது.
ஒரேயடியாக லிங்காவை கூலிப்படையாக மாற்றிய இயக்குனர் ஆங்காங்கே கொஞ்சம் காமெடி சீன்கள் வைத்திருந்தால் ஆறுதல் கிடைத்திருக்கும்.
அண்ணனை பரோலில் எடுக்காமல் தன் இருப்பை காட்டிக்கொள்ள கார்த்திக் போடும் திட்டங்கள் ஒரு கட்டத்தில் மாறி லிங்காவை அம்மாவுக்கு இறுதி சடங்கு செய்ய பரோல் எடுக்க முடிவு செய்வதும் கோர்ட்டில் வக்கீல் விநோதினி தடுமாறும் போது பாயின்ட்டாக பேசி பரோல் வாங்குவதுமாக கார்த்திக் தன் பங்கு நடிப்பை வெளிப்படுத்து கிறார்.
ராவாக மனிதர்களை காட்டுகி றேன் என்று கதாபாத்திரங்களை இயக்குனர் துவாரக் ராஜா ரவுடித்தனத்தில் மூழ்கடித்திருப் பதால் தாய்ப்பாசம் என்பது மனதில் பதியாமல் போகிறது. அம்மா சென்டிமென்ட்டை இன்னும் கொஞ்சம் கூட நெகிழ்வாக காட்டியிருக்கலாம்.
இசை, ஒளிப்பதிவு பெரிதாக கைகொடுக்க வில்லை.
பரோல் – டென்ஷன்

