Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

மிரள் ( பட விமர்சனம்)

படம்: மிரள்

நடிப்பு: பரத், வாணி போஜன், கே.எஸ்.ரவி குமார், ராஜாங்கம், மீரா கிருஷ்ணன், ராஜ்குமார், காவ்யா அறிவுமணி, அர்ஜெய், ஜீவா சுப்ரமணியம், மாஸ்டர் அம்க்கிட், மாஸ்டர் சாந்தனு, பாக்யா

தயாரிப்பு: ஜி.டில்லிபாபு

இசை: பிரசாத்.எஸ்.என்.

ஒளிப்பதிவு: சுரேஷ் பாலா

இயக்கம்: எம்.சக்திவேல்

பி ஆர் ஓ: சுரேஷ் சந்திரா, ரேகா (D’ one)

ஹரி (பரத்), ராமா (வாணி) காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். ரமா வுக்கு அடிக்கடி கqனவுகள் வந்து பயமுறுத்துகிறது. மர்ம உருவம் ஒன்று ஹரியை கொல்வதுபோல் கனவு கண்டதில் ரமா நடுங்கிப் போகிறார். இதற்கு பரிகாரம் குலதெய்வ கோயிலில் சிறப்பு பூஜை செய்வதுதான் என்று ஜோதிடர் கூற ஹரி, ரமா இருவரும் தங்களது குழந்தையுடன் குல தெய்வ கோயிலுக்கு செல்கின் றனர். அங்கு பூஜை முடிந்ததும் நள்ளிரவில் இருவரும் சொந்த ஊர் திரும்புகின்றனர். காட்டுப் பாதை வழியாக அவர்கள் காரில் செல்லும்போது ரமா கனவில் கண்டதுபோல் மர்ம உருவம் அவர்களை வழிமறித்து தாக்கு கிறது. இதன் முடிவு என்ன என்பதை த்ரில்லாக சொல்கிறது கிளைமாக்ஸ்.

சில படங்களுக்கு டைட்டில் பொருத்தமாக அமைவதுண்டு மிரள் டைட்டில் இப்படத்துக்கு மிகப்பொருத்தமாக அமைந் துள்ளது.

தொடக்கத்தில் காரில் வரும் பரத் குடும்பத்தை மர்ம உருவம் தாக்கும் காட்சியிலேயே திகில் தொடங்கி விடுகிறது.

குல தெய்வ கோயிலுக்கு சென்று விட்டு வரும்போது கார் டயர் பங்க்சர் ஆகிவிட அதை பரத் சரி செய்வதற்குள் நடக்கும் அமானுஷ்ய விஷயங்கள் அடுத்து என்ன நடக்குமோ என்ற பதற்றத்தை ஏற்படுத்துகிறது.

மர்ம உருவம் காரின் மீது ஏறி காரை நொறுக்க அதைக்கண்டு பதறும் பரத் காரை ஸ்டார்ட் செய்ய முயல்வதும் ஆனால் கார் ஸ்டார்ட் ஆகாமல் மக்கர் செய்வதும் இந்த பயங்கரத்தை கண்டு வாணி கதறுவதும் விறுவிறு.

டவரின் மேல் சிக்கிக் கொண்டி ருக்கும் மகனை காப்பாற்றி தோளில் சுமந்தபடி பரத் கீழே உறங்கிவர திடீரென்று டவரை சுற்றி நெருப்பு எரிவதும் அதிலி ருந்து அவர் தப்புவதும் த்ரில்.
ஒரு கட்டத்தில் இந்த வேலைகளை செய்வது கே.எஸ்.ரவிகுமாராக இருக்குமோ என்ற சந்தேகம் எழ வைப்பதும் பின்னர் நடந்த எல்லா சம்பவங்களும் வேறு ஒருவருக்கு நடந்ததாக இயக்குனர் டுவிஸ்ட் வைத்திருப்பதும் அதிர்சியும் ஆச்சரியம் கலந்த காட்சி. ஒரு நிமிடம் இதுதொடர்பாக கே. எஸ்.ரவிகுமார் பேசும் வசன காட்சியை கேட்காமல் விட்டால் மீண்டும் படத்தை பார்த்தால்தான் கதையை புரிந்து கொள்ள முடியும்.

வாணி போஜன் காட்டும் பய உணர்வுகள் பரபரப்பை அதிகரிக் கிறது.

ஜி.டில்லிபாபு படத்தை தயாரித்திருக்கிறார்.

படத்துக்கு தூண்களாக பிரசாத்.எஸ்.என். இசையும், சுரேஷ் பாலாவின் ஒளிப்பதிவும் அமைந்தி ருக்கிறது.

விண்ட்மில்களின் இசை காதில் திரும்ப திரும்ப ஒலிக்கிறது.

எல்லாவற்றையும் ஒருங்கி ணைத்து படத்தை இயக்கியி ருக்கும் எம்.சக்திவேல் கோலிவுட் கவனித்தை கவரும் இயக்குன ராகியிருக்கிறார். வெட்ட வெளியில் ஒரு திகில் படத்தை இயக்கி அசத்தி உள்ளார்.

எடிட்டர் ஆர்.கலைவாணனின் கட்சிதமான எடிட் படத்தை ஜிவ்வென பறக்க வைக்கிறது.

மிரள் – மிரட்சி.

 

 

 

Related posts

ரன்பீர்-அலியாபட் நடிக்கும் பிரம்மாஸ்த்ரா ரூ 300 கோடி செலவில் உருவாகிறது

Jai Chandran

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் தவசி காலமானார்..

Jai Chandran

ஜிப்ஸி(பட விமர்சனம்)

CCCinema

Leave a Comment

Share via
Send this to a friend