Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

78 குண்டுகள் முழங்க விவேக் உடல் தகனம்..

ஜனங்சங்களின் கலைஞ்ன், சின்னகலைவாணர் என்றழைக்கப்பட்ட  நடிகர் விவேக்.  நேற்று முன்தினம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். இந்நிலையில் அவர் வீட்டில் நேற்று குடும்பத்தினர் களுடன் பேசிக் கொண்டி ருந்தபோது  திடீரென்று மயங்கி விழுந்தார்,. உடனடியாக அவரை தனியார் மருத்துவமனை யில் சிகிச்சைக்காக சேர்ந்தனர்.

சுயநினைவு இல்லாமல் இருந்த விவேக்கை டாக்டர்கள் பரிசோதித்த போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது கண்டுபிடிக்கப் பட்டது. உடனடியாக அவரை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தது. விவேக்கிற்கு எக்மோ சிகிச்சை, ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. 24 மணி நேரம் கழித்துத்தான் விவேக் உடல் நிலை பற்றி கூறமுடியும்  என்று நேற்று டாக்டர்கள் தெரிவித்திருந் தனர்.


தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில்  விவேக் சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று அதிகாலை 4.35 மணிக்கு மரணம் அடைந்த தாக மருத்துவமனை அறிவித்தது. அவருக்கு வயது 59. விவேக் உடல் மருத்துவமனையிலிருந்து  விருகம்பாக்கத்தில் உள்ள வீட்டுக்கு எடுத்து செல்லப் பட்டு பொதுமக்கள் இறுதி அஞ்சலிக்காக வைக்கப் பட்டது. திரையுலகினர் பொதுமக்கள், ரசிகர்கள் வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினார்கள்.

நடிகர் விவேக் உடலுக்கு அஞ்சலி செலுத்த கொடைக்கானலில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்த உதயநிதி ஸ்டாலின் விவேக் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
மாலை 4.30மணி அளவில் விவேக் உடல் வீட்டிலிருந்து அம்புலன்ஸ் வேன் மூலம் இறுதி ஊர்வலம் புறப்பட்டது. வழி நெடுக்கிலும் அவருக்கு மக்கள் திரண்டு நின்று அஞ்சலி செலுத்தினார்கள். ஊர்வலத்தில் நூற்றுக் கணக்கானவர்கள் நடந்து சென்றனர். நடிகர் மயில் சாமியும் ஊர்வலத்தின ருடன் நடந்து சென்றார். சிலர் கைகளில் மரக்கன்று கள் ஏந்தி வந்தனர்.
மின்மயானத்தை அடைந் ததும் நடிகர் உதயா உள்ளிட்ட திரையுலகினர் விவேக் உடலை தோளில் சுமந்து சென்றனர்.

பின்னர் போலீஸ் மரியாதையுடன் 78 குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது. விவேக் மகள் தேஜஸ்வினி இறுதி சடங்கு செய்தார். நடிகை ரேகா தகனம் செய்யும் இடத்தில் வந்து அஞ்சலி செலுத்தினார். பிறகு மின்மயானத்தில் உடல் தகனம் நடந்தது.

Related posts

ANTIINDIANMotionPoster Release

Jai Chandran

ஒடிடியில் கீர்த்திசுரேஷின் பெண்குயின்

Jai Chandran

அர்ஜுன் – ஐஸ்வர்யா இணைந்து நடித்த அனுபவம்..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend