பத்மஸ்ரீ விவேக் மறைவிற்கு இந்திய பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தி வருமாறு:
பிரபல நடிகர் விவேக்கின் அகால மரணம் பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நடிகர் விவேக்கின் நகைச்சுவை மற்றும் அறிவுப்பூர்வமான வசனங்கள் மக்களை மகிழ்வித்தன. அவரது படங்களிலும் அவரது வாழ்க்கையில், சுற்றுச்சூழல் மற்றும் சமூகத்தின் மீதான அக்கறையை தனது திரைப்படங்களில் பிரதிபலித்தார். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அபிமானிகளுக்கும் எனது இரங்கல். ஓம் சாந்தி”
இவ்வாறு பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்