Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நடிகர் ராம் சரணுக்கு திடீர் அறுவை சிகிச்சை..

தெலுங்கு பட  முன்னணி நடிகர் ராம்சரண், ‘பெத்தி’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்தபோது, மல்யுத்த சண்டைக் காட்சி ஒன்றில் நடித்தார். அப்போது அவரது இடதுகை மணிக்கட்டில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆனாலும் காயத்தை பொருட்படுத்தாமல் தொடர்ந்து அப்படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து முடித்தார். படம் திரைக்கு வந்து அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.

சமீபத்தில்  ராம் சரணுக்கு எம்.ஆர்.ஐ. மற்றும் எக்ஸ்ரே பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன., அவரது இடதுகை மணிக்கட்டில் தசைநார் கிழிவு மற்றும் லேசான எலும்பு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

தசைநார் முழுமையாகக் கிழிந்துள்ளதால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.

இதனையடுத்து கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ராம்சரணுக்கு மணிக்கட்டு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்தது.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு ராம்சரண் சில வாரங்கள் முழுமையான ஓய்வில் இருக்க வேண்டும் என்றும், மணிக்கட்டு இயல்புநிலைக்குத் திரும்ப 4 முதல் 6 வாரங்கள் வரை சிகிச்சை தேவைப்படலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் அவர் மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருந்து ஓய்வெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
#ramcharan #treatmen

Related posts

முதல்வர் கொரோனா தடுப்பு நிதிக்கு ரூ 10லட்சம் அளித்தார்

Jai Chandran

JailTeaser marching towards 2 MILLION VIEWS!

Jai Chandran

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் டீசர் வெளியீடு .

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend