நடிகர் விக்ரம் நடிக்கும் மாறுபட்ட கதை அம்சம் கொண்ட படம் கோப்ரா. அஜய் ஞானமுத்து இயக்குகிறார். ஏ.ஆர்.ரஹ்மான இசை அமைக்கிறார். எண் கணக்குகளை மையமாக கொண்டு இதன் கதை அமைக்கப்பட்டிருக்கிறது. பலவித தோற்றங்களில் இருக்கும் விக்ரமின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாக பலத்த வரவேற்பை பெற்றது. தற்போது கோப்ரா படத்தின் டீஸர் வெளியாகி இருக்கிறது.
விக்ரம் கணித அறிஞராக நடித்துள்ளார். எவ்வளவு சிக்கலான எண்களையும் எளிதில் விடை சொல்லிவிடும் ஜீனியஸாக நடித்திருக்கிறார். இதன் டீஸர் விறுவிறுப்பாக வெளியாகி ரசிகர்களை ஈர்த்து வருகிறது.