ரூ 45 லட்சம் கையாடல்: கணக்காளர் பற்றி விஷால் நிறுவனம் புதிய அறிவிப்பு..
நடிகர் விஷாலின் விஷால்பிலிம் ஃபேக்ட்டரி நிறுவனத்தில் பணியாற்றிய கணக்காளர் ரம்யா ரூ 45 லட்சம் கையாடல் செய்ததாக தர்பட்ட புகாரை விசாரித்து விருகம்பாக்கம் போலீஸார் கணக்காளர் ரம்யா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் விஷாலின் பிலிம் பேக்ட்டரி திடீர் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. அதில் கூறியதாவது:
எங்கள் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தில் கணக்காளராக பணிபுரிந்த ரம்யா, நிறுவனத் தில் பல வருடங்களாக வங்கிக் கணக்குகளை முறைகேடாக பயன்படுத்தி ரூ.45 லட்சம் வரை ஏமாற்றியுள்ளார் என்பதை கண்டறியப் பட்டு 30.06.2020 அன்று காவல் துறையில் புகாரளிக்கப்பட்டு விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் மோசடி தொடர்புடைய பிரிவின் கீழ் 7-07-2020 அன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளார்.
எனவே ரம்யா இனி எங்கள் நிறுவனமான விஷால் ஃபிலிம் பேக்டரியில் பணியாற்ற வில்லை என்று தெரிவித்துக் கொள்கிறோம். விஷால் ஃபிலிம் பேக்டரி கணக்கு தொடர் பான எந்த விஷயங்களிலும் இனிமேல் ரம்யாவை தொடர்பு கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. மேலும் மீறி தொடர்பு வைத்துக் கொண்டால் நிர்வாகம் பொறுப்பல்ல என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்’ என கூறப்பட்டு உள்ளது.