Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

புதுமுகஙகள் நடிக்கும் ” குண்டு ஒண்ணு வச்சிருக்கேன்

காளையப்பா பிக்சர்ஸ் சார்பில் ஜி.காளையப்பன் தயாரித்தி ருக்கும் அடுத்த படத்தின் பெயர் தான் ” குண்டு ஒண்ணு வச்சிருக்கேன்”. இதில் ஸ்ரீதர், சிரஞ்சீவி, முருகன், ஜீவி, ரேஷ்மா, கேப்டன் கணேஷ், சரவணன், பஜார் பாபு, ரவி, கிருபா, சௌந்தர், விருமாண்டி, விக்னேஷ், ஏ.சோணை , சரண்யா, மெர்க்குரி சத்யா நடித்துள்ளனர்.

மோகன்ராஜ் மற்றும் ஏ.சோணை எழுதிய பாடல்களுக்கு, கிருஷ்டி இசையமைக்க, முத்துமுனியசாமி படத்தொகுப்பையும்,
எம்.ஆர்.எம் ஜெய்சுரேஷ் – மோகன் இருவரும் ஒளிப்பதிவு செய்துள்ளார்கள். மணி கலையை யும், சுரேஷ் — அபிநயஸ்ரீ இருவரும் நடன பயிற்சியையும் அளித்துள் ளனர் .

“புதிய புரூஸ்லி ” படத்தை இயக்கியவரான முளையூர் ஏ.சோணை தனது இரண்டாவது படமாக ” குண்டு ஒண்ணு வச்சிருக்கேன்” படத்தை கதை , திரைக்கதை, வசனம், எழுதி இயக்கி இருக்கிறார். மேலும் அவர் படத்தைப் பற்றி கூறியதாவது,
“நகரங்கள் நாகரீக உலகில் பரபரப்பாக இயங்கினாலும் பல கிராமங்களின் நிலை அப்படியே தான் இருக்கிறது. அதிலும் மலை கிராமத்து மக்களின் நிலைமை மிகவும் பின்தங்கியேதான் உள்ளது. அப்படிபட்ட மலை கிராமத்து இளைஞர்கள் நால்வர் வேலை தேடி அருகில் உள்ள மதுரை மாநகருக்கு வருகின்றனர். ஒரு இடத்தில் தங்கி வேலை செய்துவரும் இவர்களிடம் சிலர் வம்பு இழுத்து தொல்லை கொடுக் கின்றனர். இந்த சூழ்நிலையில் அந்த நால்வரிடமும் ஒரு கைத்துப்பாக்கி கிடைக்கிறது. அதனால் ஒரு விபரீதம் ஆகி நால்வரும் சிக்கி போலீசில் மாட்டுகின்றனர். அதிலிருந்து இவர்கள் எப்படி மீண்டு வருகின் றனர் என்பதை திரில்லுடன் நகைச்சுவையையும் கலந்து ஜனரஞ்சகமான படமாக இயக்கி இருக்கிறேன். ” என்று தெரிவித் தார்.

விரைவில் திரைக்கு வர துரிதமாக வேலை நடைபெற்று வருவதாக தயாரிப்பாளர் ஜி.காளையப்பன் கூறியுள்ளார்.

என். விஜயமுரளி
PRO

Related posts

அடிவி சேஷ் நடிக்கும் ‘G2’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Jai Chandran

சந்தீப் கிஷன் நடிக்கும் ‘பவர் பேட்டா’ டைட்டில் வெளியீடு..

Jai Chandran

மழை, சூறாவளியில் படமான மாதவன் – ஷ்ரத்தாவின் மாறா

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend