Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

வெளியாகிவிட்டது ஆர். மாதவன் – ஷ்ரத்தாவின் மாறா.. பார்த்தாச்சா..?

ஆர். மாதவன் மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் அமேசான் ப்ரைம் வீடியோவின் மாறா வெளியாகிவிட்டது. இது கட்டாயம் பார்க்க வேண்டிய திரைப்படம் என்பதற்கான காரணங்கள் இதோ!

மனதை மயக்கும் காட்சிகளை பார்த்து நீண்ட காத்திருப்புக்கு பிறகு, அமேசான் ப்ரைம் வீடியோவின் மாறா திரைப்படம் வெளியாகிவிட்டது. ஆர். மாதவன் மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ள இப்படம் தனது ட்ரெய்லர் மற்றும் பாடல்களால் பார்வையாளர்களின் மனதை கவர்ந்தது. இது கட்டாயம் பார்க்கப்பட வேண்டிய படம் என்பதற்கு ஐந்து காரணங்கள்:

1. கண்கவர் காட்சிகள் மற்றும் இடங்கள்: படப்பிடிப்பின் போது நடந்த யாருக்கும் தெரியாத தருணங்களைப் பற்றி குறிப்பிடுகையில், கேரளா, தமிழ்நாடு ஆகிய பகுதிகளின் அழகிய இடங்களிலும், பார்வையாளர்களின் கண்களுக்கு குளிர்ச்சியான வகையில் மழையிலும் இப்படம் எவ்வாறு காட்சிப்படுத்தப்பட்டது என்பது குறித்து திலிப் கூறியுள்ளார். காட்சிகளை பொறுத்தவரை, ஒவ்வொரு காட்சியின் அழகின் மூலம் அது எவ்வாறு உருவாக்கப்பட்டுள்ளது என்பதை நாம் பார்த்து ரசிக்க இயலும்.

2. திறமை வாய்ந்த குழு மற்றும் இசையமைப்பாளர் ஜிப்ரான்: ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்துக்கு கார்த்திக் முத்துக்குமார் மற்றும் தினேஷ் கிருஷ்ணன் இருவரும் ஒளிப்பதிவு செய்துள்ளனர். மேலும், வழக்கத்துக்கு மாறாக, படம் முழுக்க இசையின் உணர்வை கடத்துவதற்காக இயக்குநர் இப்படத்தில் ஒரே ஒரு பாடலாசிரியரை மட்டுமே பயன்படுத்தியுள்ளார். 2015ஆம் கல்கி என்ற குறும்படத்தை இயக்கிய புதுமுக இயக்குநர் திலிப் குமார் மாறா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்.

3. டிஜிட்டல் வெளியீட்டுக்காக விசேஷமாக HDR உள்ளடக்கம் கொண்ட முதல் இந்தியப்படம்: தொழில்நுட்பரீதியாக, அமேசான் ப்ரைம் வீடியோவில் உள்ள HDR உள்ளடக்கம் கொண்ட முதல் இந்திய திரைப்படம். இப்படம் இன்று வெளியாகவுள்ளது. மேலும், ப்ரைமில் இடம்பெறும் முதல் அட்மாஸ் மிக்ஸ் செய்யப்படவுள்ள முதல் தமிழ் அல்லது தென்னிந்திய திரைப்படமாகவும் உள்ளது. நிச்சயமாக இப்படம் ஒரு விஷுவல் விருந்தாக இருக்கப்போகிறது.

4. மாதவன் மற்றும் ஷ்ரத்தாவின் திரை பொருத்தம்: வழக்கமான ‘ஆணும் பெண்ணும் சந்திக்கும் காதல்’ திரைப்படம் இல்லையென்றாலும் ஒரு மாயாஜாலம் கொண்ட காதலைப் பற்றி மாறா பேசுகிறது. ஆனால் இதன் கரு வித்தியாசமானது. விக்ரம் வேதாவுக்குப் பிறகு மாதவன் மற்றும் ஷ்ரத்தா திரையில் இணையும் இத்திரைப்படத்தில் இவர்களது திரைப்பொருத்தம் மாறாவைப் போலவே வித்தியாசமாக இருக்கும்.

5. காதல் ம்யூசிக்கல் திரைப்படத்தில் ஒரு காதல் கதாபாத்திரத்தில் மாதவன்: 240 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் தற்போது மாறா வெளியாகிறது. உங்கள் வீட்டின் திரையில், மீண்டும் நம்மை காதலில் விழவைக்கும் மற்றொரு காதல் கதாபாத்திரத்தில் மாதவன் நடிக்கும் இந்த உலகளாவிய உள்ளடக்கத்தை காண்பதை விட வேறு என்ன சிறப்பு வேண்டும்?

ப்ரதீக் சக்ரவர்த்தி மற்றும் ஷ்ருதி நல்லப்பா ஆகியோர் ப்ரமோத் பிலிம்ஸ் சார்பில் தயாரித்துள்ள இப்படத்தில் அலெக்ஸாண்டர் பாபு, ஷிவதா, மௌலி, பத்மாவதி ராவ், அபிராமி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். தற்போது வெற்றிகரகமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் மாறாவின் உலகளாவிய வெளியீட்டை பிரத்யேகமாக அமேசான் ப்ரைம் வீடியோவில் காணுங்கள்.

Related posts

கர்நாடக முதல்வருடன் தேசிய தலைவர் பட நாயகன் ஏ.எம்.பஷீர் சந்திப்பு

Jai Chandran

“ரமணி Vs ரமணி” திரைத்தொடர் மீண்டும் புதிய சீசன்

Jai Chandran

திரில்லார் காதல் கதையாக உருவாகிறது தராதிபன்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend