ஒவ்வொரு புகைப்படத்திலும் ஒரு கதை சொல்லி, அதில்
பிரம்மாண்டத்தையும், அழகியலும் சேர்த்து நம் கண்களுக்கு விருந்தளிப்பவர், உலக புகழ்பெற்ற புகைப்பட கலைஞர் எல்.ராமசந்திரன்.
அதிலும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியோடு இவர் படைத்த
இந்த ’மேன் ஆஃப் பியூஷன்’ புகைப்பட தொகுப்பு ஒர் ஒளிஜாலம்.
ரோஷனா அன் ராய், கேரளாவை சேர்ந்த நடிகை மற்றும் ஒப்பனை கலைஞர், இவர் விஜய் சேதுபதிக்காக ஒரு போட்டோ ஷூட் தயார் செய்தார் அவரது ஒப்புத லோடு. அவர்கள் தங்களது
முதற்கட்ட திட்டத்தோடு ராமசந்திரன் அவர்களை சந்தித்தனர், இந்த புகைப்பட தொகுப்பு மக்கள் செல்வ னுக்கு ஸ்டைலான மற்றும் பேஷன் புகைப்படங்களாக வேண்டும் என்று முடிவு செய்தார் ராமசந்திரன்.
ரோஷனாவின் ஒப்பனை மற்றும் காஸ்டியூம்களோடு சேர்ந்து, ராமசந்திரன் ஒளிக்கீற்றினால் நமது மக்கள் செல்வனுக்கு புதுமையான ஒரு புகைப்பட தொகுப்பை நடத்தியுள்ளார். இது வரை விஜய் சேதுபதியை யாரும் பார்க்காத கோணங்களில் புகைப்படம் எடுத்து
அசத்தியுள்ளார்.
ரெட்ரோ, பார்ட்டி என கான்செப்ட்களுக்கு விஜய் சேதுபதி கொடுத்த போஸ் களும், அதற்கு செய்யபட்ட பேக் ட்ராப் லைட்கள் மிக
சிரேத்தையோடு கையாளப் பட்டுள்ளது. புதுமைகளில் இணைவான இந்த
தொகுப்பு ஒளிச்சிதறல்களில் அலங்கரிக்கபட்ட ஒர் அற்புத தொகுப்பு.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் புதுமைக்கு புகைப்பட கலைஞர் எல்.ராமசந்திரனின் பிரம்மாண்டம், இருவரும்
ஒரு சேர இணைவது என்றும் ஒரு பியூஷன்தான்.