Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

வெங்கட் பிரபு வழங்கும் “நண்பன் ஒருவன் வந்த பிறகு” கதை என்ன?- இயக்குனர் ஆனந்த்

ஹிப் ஹாப் ஆதி நடித்த மீசைய முறுக்கு படத்தில் ஆதியின் தம்பியாக நடித்தவர் ஆனந்த். இவர் அடுத்து ஹீரோவாக களமிறங்கும் படம் “நண்பன் ஒருவன் வந்த பிறகு”. ஹீரோவாக நடிப்பதுடன் இப்படத்தை எழுதி இயக்குகிறார் ஆனந்த்.

வெங்கட் பிரபு இயக்கிய சென்னை 28 பட பாணியில் இவர் இயக்கும் “நண்பன் ஒருவன் வந்த பிறகு” உருவாகி இருக்கிறது.

இது குறித்து இயக்குனர், நடிகர் ஆனந்த் கூறியதாவது: மீசைய முறுக்கு படத்தில் ஹிப் ஹாப் ஆதி தம்பியாக நடித்த பிறகு எனக்கு நடிகனாக ஒரு அடையாளம் கிடைத்தது.  அதற்காக ஆதிக்கு  நன்றி.

நான் கூத்து பட்டறையில் நாடக நடிகனாக இருந்திருக்கிறேன்.  படத்தில் நடிப்பது இயக்குவது என்பது என் கனவு. இந்த நேரத்தில்தான் என் வாழ்க்கையில் ஒரு சம்பவம் நடந்தது. என் வாழ்க்கையில் என்பதைவிட எல்லோர் வாழ்க்கையிலும் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கும். என் நண்பன் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம். அதை படமாக்க வேண்டும் என்று எண்ணி உண்மை சம்பவத்தை பொழுது போக்குடன் இணைத்து தரவேண்டும் என்ற எண்ணத்தில் எழுத ஆரம்பித்தேன். அந்த கதை தான் நண்பன் ஒருவன் வந்த பிறகு.

ஒரு சில படங்கள்தான் தனக்கு தேவையானவற்றை தானே அமைத்துக் கொள்ளும். அந்த வகையில் வெங்கட் பிரபு  இயக்கிய சென்னை 28 படம் தனக்கு தேவையானவற்றை தானே அமைத்துக் கொண்டது. அது எனக்கு மிகவும் பிடித்த படம். அதுபோல்தான் நண்பன் ஒருவன் வந்த பிறகு படமும் தனக்கு தேவையானவற்றை தானே அமைத்துக் கொண்டது.

இந்த படம் இரண்டு விஷயங்களை முக்கியமாக பேசும். வீட்டை மிஸ் செய்பவர்கள், மற்றும் நட்பு என இரண்டையும் இது முக்கியமாக பேசும். இந்த சம்பவங்கள் எல்லோர் வாழ்க்கையையும் தொடர்பு கொள்ள வைப்பதாகவே இருக்கும்.

இதில் நடிக்கும் நடிகர்களையும் நான் தேர்வு செய்தேன் என்பதை விட கதையே அவர்களை தேர்வு செய்து கொண்டது.  அந்த வகையில் இதில்  லீலா, குமாரவேல், விஷாலினி, ஆனந்த்,  பவானி ஸ்ரீ, ஆர் ஜே விஜய், இர்ஃபான், வில் ஸ்பாட், தேவ், ஐஸ்வர்யா என நட்சத்திரங்கள் இணைந்தனர். இவர்களுடன் கே பி ஒய் பாலா, மோனிகா, ஆர் ஜே ஆனந்தி, சபரீஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் கதையை நான் இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் கூறிய போது,” இது என்னடா சென்னை 28 மூன்றாம் பாகம் போலவே இருக்கிறது” என்று வாழ்த்தியதுடன். இந்த படத்தை நானே பிரசன்ட் செய்கிறேன் என்று கூறி இணைந்தார். அவர் முக்கிய வேடத்திலும் நடித்திருக்கிறார்.

காற்றின் மொழி படத்துக்கு இசையமைத்த ஏ எச் காசிப் இப்படத்துக்கு இசையமைக் கிறார்.  இப்படத்தில் இடம்பெறும் பாடல்களை நடிகர் தனுஷ், யுவன் சங்கர் ராஜா, ஜிவி பிரகாஷ், ஹிப் ஹாப் ஆதி பாடி கொடுத்துள்ளனர். பாடல்கள் வெளியாகி பெரிய வரவேற்பு பெற்றிருக்கிறது. ஏ ஆர் ரகுமான் இப்படத்தின் டிரைலரை பார்த்துவிட்டு பாராட்டியதுடன் இப்படத்தில் அவரது இசையில் உருவான சில பாடல்கள் இடம்பெறுகிறது அதற்கான அனுமதியும் அவரிடம் பெற்றிருக்கிறோம்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை காஞ்சிபுரம் ஏலகிரி, போன்ற பல்வேறு இடங்களில் நடந்ததுடன் சிங்கப்பூரிலும்  முக்கிய காட்சிகள் படமாகி இருக்கிறது.

சக்தி பிலிம் பேக்டரி படத்தை வெளியிடுகிறது.

இவ்வாறு இயக்குனர் ஆனந்த் கூறினார்.

படத்தில் நடித்த ஆர் ஜே விஜய் கூறும் போது, இந்த படத்தில் இரண்டு பாடல்கள் எழுத வந்தேன். எனக்கான கதாபாத்திரமும் இதிலிருந்ததால்  நடித்தும் இருக்கிறேன். என் வாழ்வில் நடந்த சம்பவங்கள் போலவும் இக்கதை அமைந்திருந்தது’ என்றார்.

இசையமைப்பாளர்  ஏ எச் காசிப் கூறும் போது,’ காற்றின் மொழி படத்துக்கு இசையமைத்த பிறகு மலையாளத்தில் மம்முட்டி சார் நடித்த பதினெட்டாம்படி படத்துக்கு இசையமைத்தேன். நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழில் வருவதால் நல்ல படமாக வரவேண்டும் என்று காத்திருந்தேன். அந்த வகையில் நண்பன் ஒருவன் வந்த பிறகு ஒரு நல்ல கதையாக அமைந்தது. கதையைக் கேட்டபோது என் வாழ்வில் நடந்தது போலவே பல சம்பவங்கள் இக்கதையில் இருந்தன இது என்னை மிகவும் படத்தோடு கனெக்ட் செய்தது. படத்தில் எட்டு பாடல்கள் இடம் பெற்றாலும் அந்த பாடல்கள் எப்படி செல்கிறது என்றே தெரியாத அளவுக்கு இடம்பெற்றிருக்கிறது” என்றார்.

நடிகர் தேவ் கூறும் போது,” புரொடக்ஷன்  நிர்வாகம் செய்துகொண்டிருந்த எனக்கு  எனக்கு நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. இந்த படத்தில் அப்படி ஒரு வாய்ப்பு அமைந்த போது அதை ஏற்றுக் கொண்டேன்’ என்றார்.

நடிகர் வில்ஸ்பாட் கூறும் போது,”யூட்யூபில் நான் வீடியோக்கள்  வெளியிட்டு வந்தேன். சினிமாவில் நடிப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை  இந்த வாய்ப்பை எனக்கு இயக்குனர் ஆனந்த் அழைத்து கொடுத்திருக்கிறார். இதை என் வாழ்வில் அடுத்த படியாக நான் நினைக்கிறேன்’என்றார்.

தயாரிப்பாளர், நடிகை ஐஸ்வர்யா கூறும்போது,”என்னை தயாரிப்பு துறையில் ஈடுபட ஊக்குவித்தவர் இயக்குனர் வெங்கட் பிரபு எனது நெருங்கிய நண்பர். நண்பன் ஒருவன்  வந்த பிறகு கதை மிகவும் அற்புதமாக இருந்தது. அதை தயாரிக்க முடிவு செய்தபோது வெங்கட் பிரபு படத்தை தானே பிரசன்ட் செய்வதாக கூறி எங்களுக்கு ஊக்கமும் வாழ்த்தும் கூறினார்”

ஒயிட் பெதர் ஸ்டுடியோஸ் உடன் மசாலா பாப்கார்ன் நிறுவனம்  சார்பில் ஐஸ்வர்யா எம், சுதா. ஆர் தயாரிக்கின்றனர்” என்றார்.

 

Related posts

சரத்குமார் நடிக்கும் ‘ஆழி’ பட இசை வெளியீட்டு விழா..

Jai Chandran

The third collaboration of Kavalthurai Ungal Nanban RDM-Suresh Ravi duo

Jai Chandran

தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த’அடங்காமை’ படக்குழு !

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend