படம்:; மகா ராஜா
நடிப்பு: விஜய் சேதுபதி, மம்தா மோகன்தாஸ், அபிராமி, அனுராக் காஷ்யப், நடராஜ், சிங்கம்புலி, அருள்தாஸ், பாரதிராஜா
தயாரிப்பு: சுதன் சுந்தரம், ஜெகதீஷ் பழனிச்சாமி
இசை: அஜினீஷ் லோக்நாத்
ஒளிப்பதிவு: தினேஷ் புருஷோத்தமன்
இயக்கம்: நிதிலன் சாமிநாதன்
பி ஆர் ஓ: சுரேஷ் சந்திரா
சலூனில் வேலை பார்க்கும் மகாராஜா ( விஜய் சேதுபதி) போலீஸ் நிலையம் சென்று தன் வீட்டில் இருந்த லட்சுமி என்ற குப்பை தொட்டியை காணோம், என்னை அடித்து போட்டுவிட்டு யாரோ திருடி சென்று விட்டார்கள் கண்டுபிடித்து தாருங்கள் என்று புகார் செய்கிறார். குப்பை தொட்டிக்கு ஒரு புகாரா என்று போலீசார் கேட்க , அதை கண்டுபிடித்து தந்தால் ஏழு லட்சம் தருவதாக மகாராஜா கூறுகிறார். குப்பைத்தொட்டியில் அப்படி என்ன இருந்தது,? அதன் பின்னணியில் நடந்தது என்ன? என்பதை சஸ்பென்ஸ் திரில்லராக மகாராஜா கிளைமாக்ஸ் விளக்குகிறது.
விஜய் சேதுபதியை சோலோ ஹீரோவாக பார்த்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. பிரபல ஹீரோக் களுக்கு வில்லனாக அவர் நடிக்க தொடங்கியதிலிருந்து நிறைய கேப் ஆகிவிட்டது தற்போது மீண்டும் தனது பழைய நிலைக்கு அதாவது சோலோ ஹீரோ அந்தஸ்துக்கு வந்திருக்கிறார்.
சூது கவ்வும், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பட பாணியில் விஜய் சேதுபதியை பார்த்து நாளாகிவிட்டதே என்று ஏங்கு பவர்களுக்கு அவர்களது ஏக்கத்தைப் போக்கும் விதமாக வந்திருக்கிறது மகாராஜா.
சலூன் கடையில் வேலை செய்பவராக விஜய் சேதுபதி இருந்தாலும் கதை வேறு பக்கம் நிகழ்கிறது . குப்பைத் தொட்டியை காணோம் என்று போலீஸ் நிலையத்துக்கு சென்று அவர் பாவனை செய்வது அவரது குழப்பமான மன நிலையை பிரதிபலிக்கிறது.
எப்படியாவது குப்பைத் தொட்டியை கண்டுபிடித்து தாருங்கள் , என்னை அடிச்சி போட்டவர்களை கண்டுபிடிக்க எஃப் ஐ ஆர் பதிவு செய்யுங்கள் ‘ என்று விஜய் சேதுபதி மல்லு கட்டுவதும் அவரை போலீசார் தூக்கி வெளியில் வீச முயலும் போது போலீஸ் நிலையத்தின் கூரையை இழுத்து தள்ளி செய்யும் ரகளையும் ரணகளம்.
குப்பைத்தொட்டியை கண்டுபிடித்து தாருங்கள் என்று போலீசார் அருள்தாசிடமும், நட்டியிடமும் விஜய்சேதுபதி கேட்டு நச்சரிப்பு செய்வது ஒரு கட்டத்தில் நகைச்சுவை காட்சியாகவே மாறிவிடுகிறது.
மகாராஜா விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமாக உருவாகி இருக்கிறது.
பட இடைவெளிக்கு பிறகு கதை இன்னும் சூடு பிடிக்கிறது. பல சஸ்பென்சுகளை உள்ளடக்கி திரைக்கதையை இயக்குனர் நிதிலன் அமைத்திருக்கும் நிலையில் அதை இங்கே ஓபன் செய்து விட்டால் படம் பார்க்கும் போது சுவாரஸ்யம் குறைந்து விடும்.
படத்தில் எதிர்பார்க்காத் கதாபாத்திரங்களாக நட்ராஜ், அருள்தாஸ், சிங்கம் புலி முனிஷ்காந்த் நடித்திருக்கின் றனர்.
படத்தில் இன்னொரு சர்ப்ரைஸ் அனுராக் காஷ்யப் கதாபாத்திரம். நல்ல நடிகர் என்று ஏற்கனவே அவருக்கு பெயர் உண்டு ஆனால் விஜய் சேதுபதிக்கு டஃப் கொடுக்கும் அளவுக்கு இப்படத்தில் நடித்திருப்பது சபாஷ் போட வைக்கிறது.
அபிராமி, மம்தா மோகன்தாஸ் இருவருக்கும் நார்மலான கதாபாத்திரங்கள்தான். பாய்ஸ் மணிகண்டன் நீண்ட இடைவெளிக்கு பிறகு பிரதான வில்லனாக நடித்திருப்பது அவருக்கு கோலிவுட்டில் மீண்டும் ஒரு கதவை திறக்கும்..
சுதன் சுந்தரம், ஜெகதீஷ் பழனிச்சாமி படத்தை தயாரித்து இருக்கின்றனர்
அஜினீஷ் லோக்நாத் இசை காட்சிகளை மிஞ்சாமல் தினேஷ் புருஷோத்தமனின் கேமராவோடு ஒட்டி உறவாடி இருக்கிறது.
குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இப்பபடத்தை இயக்கி இருக்கிறார். பூடகமான சில சஸ்பென்ஸ் விஷயங்களை கடைசி வரை அவர் கட்டிக் காத்து கிளைமாக்சில் ஓபன் செய்யும்போது அபளாஸ் பெறகிறார்.
திரைக்கதை முன்னும் பின்னுமாக சுழன்று செல்லும்போது நடப்புக் கதை நடக்கிறதா அல்லது பிளாஷ்பேக் செல்கிறதா என்ற குழப்பம் ஏற்படுகிறது. .
மகாராஜா – ரசிகர்களின் மனம் கவர் கள்வன்.

