Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

தலைவர் தம்பி தலைமையில்.. (பட விமர்சனம்)

படம்: தலைவர் தம்பி தலைமையில்..

நடிப்பு: ஜீவா, தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா நாதன், ஜெய்வந்த், ஜென்சன் திவாகர், மணிமேகலை, சர்ஜின் குமார், ராஜேஷ் பாண்டியன், சுபாஷ் கண்ணன், அமித் மோகன், அனு ராஜ், சரத்

தயாரிப்பு: கண்ணன் ரவி

இணை தயாரிப்பு: தீபக் ரவி

இசை: விஷ்ணு விஜய்

ஒளிப்பதிவு: பப்லு அஜு

இயக்கம்: நிதிஷ் சகாதேவ்

பி ஆர் ஓ: சதீஷ்குமார் (S2)

அந்த சிறிய ஊரில் அருகருகே உள்ள வீடுகளில் குடியிருக்கின்றனர் மணி (தம்பி ராமையா), இளவரசு ( இளவரசு). தனது மகளுக்கு இளவரசு மறுநாள் நடக்கும் திருமணத்துக்கான ஏற்பாடுகள் செய்துள்ள நிலையில், மணியின் தந்தை திடீர் மரணம் அடைகிறார். ஏற்கனவே மணி, இளவரசு இருவருக்கும் முன்விரோதம் இருப்பதால் திருமண நிகழ்ச்சியையும், துக்க நிகழ்ச்சியும் ஒரே நேரத்தில் நடத்த பிடிவாதமாக இருக்கின்றனர். பஞ்சாயத்து தலைவர் ஜீவா இருவரிடமும் சமாதானம் செய்து இரு நிகழ்ச்சியையும் வெவ்வேறு நேரத்தில் நடத்த பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதில் இருதரப்பும் சமாதானம் ஆகாத நிலையில் பெரிய மோதல் வெடிக்கிறது. இறுதியில் நடப்பது என்ன என்பது கலாட்டா கிளைமாக்ஸ் ஆக முடிகிறது.

மலையாள படம் போல் தமிழ் படம் எடுப்பதிலேயே என்று ரசிகர்கள் ஆதங்கப்படுவதுண்டு அந்த குறையை போக்கும் வகையில் வந்திருக்கிறது தலைவர் தம்பி தலைமையில். ஒரு மலையாள படத்தை மிக எதார்த்தமாக தமிழிலும் இயக்க முடியும் என்பதை இப்படத்தின் இயக்குனர் நிதிஷ் சகாதேவ் நிரூபித்திருக்கிறார். இவர் ஏற்கனவே மலையாளத்தில் ஃபேமிலி என்ற காமெடி படத்தை இயக்கி இருக்கிறார்.

ஜீவா இதுவரை ஏற்காத எதார்த்தமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்றால் அது இந்த படத்தில் தான்.
தன் மகளுக்கு திருமணம் செய்து வைக்கும் இளவரசு வீட்டுக்கு வரும் பஞ்சாயத்து தலைவர் ஜீவா அந்த வீட்டில் உள்ள வேலைகளை எடுத்து செய்வது இளவரசு குடும்ப உறவினர்களை வரவேற்பது என்று ஒரு கிராம பஞ்சாயத்து தலைவராகவே மாறி இருக்கிறார்.
தம்பி ராமையா வீட்டில் அவரது தந்தை இறந்தவுடன் அவர் வீட்டுக்கும் சென்று அவர்களுக்கு உதவுவது என்று நியாயமான பேச்சுக்கள் பேசி இரு குடும்பத்தாருக்கும் எந்த பிரச்சினையும் வரக்கூடாது என்பதற்காக தயங்கி பேசி, ஆதரவாக பேசி, நடுநிலையாக பேசி சமாதான முயற்சியில் ஈடுபடும்போது பண்பட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஒரு பக்கம் ஜீவா எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்று சமாதானம் செய்து கொண்டிருக்கும் நிலையில் இளவரசையும், தம்பி ராமையாவையும் உடனிருப்பவர்கள் உசுப்பி விட்டு அடிதடி, துப்பாக்கி சூடு, குண்டு வீச்சு என பிரச்சனை கலவரத்தில்போய் முடிவது எதிர்பார்க்காத கிளைமாக்ஸ்.

கதாநாயகியாக பிரார்த்தனா நாதன் நடித்திருக்கிறார். இரு குடும்பத்தாருக்கும் இடையில் சிக்கிக்கொண்டு மணப்பெண்ணாக செய்வதறியாமல் திணறுவதும், தவிப்பதும் சென்டிமென்ட்டுக்கு பயன்பட்டிருக்கிறது.

தரப்பட்ட பாத்திரங்கள் பெரிது சிறிது என்று எண்ணாமல் இதில் எடுத்திருக்கும் சக நட்சத்திரங்கள் ஜெய்வந்த், ஜென்சன் திவாகர், மணிமேகலை, சர்ஜின் குமார், ராஜேஷ் பாண்டியன், சுபாஷ் lகண்ணன், அமித் மோகன், அனு ராஜ், சரத் அந்தந்த பாத்திரங்களாகவே மாறி இருக்கின்றனர்.

கண்ணன் ரவி தயாரிக்க
இணை தயாரிப்பு செய்திருக்கிறார் தீபக் ரவி.

விஷ்ணு விஜய் இசை காட்சிகளுக்கு விறுவிறுப்பு கூட்டி இருக்கிறது.

ஒரே இரவில் நடக்கும் கதையை மிக அழகாக ஒளிப்பதிவு செய்துள்ளார் பப்லு அஜு.

விஜய், சூர்யா, வடிவேலு நடித்த “பிரண்ட்ஸ்” படத்தை வழங்கிய இயக்குனர் சித்திக் போல் ஃபேமிலி காமெடி கலாட்டாவாக “தலைவர் தம்பி தலைமையில்” படத்தை இயக்கி உள்ளார் நிதிஷ் சகாதேவ்.

தலைவர் தம்பி தலைமையில் – குடும்பத்துடன் ஜாலியாக பார்க்கத் தகுந்த பொங்கல் விருந்து.

Review By
K Jatachabdhiran

trending cinemas now.com

Related posts

Napoleon contributed One Crore to Actor Association

Jai Chandran

Tamil Nadu GYM Owners Association – Congratulating MK Stalin

Jai Chandran

Abhishek Sinha Directorial “BAS KARO AUNTY”

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend