இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் தாயார் கரீமா பேகம் இன்று காலமானார். இதனை ஏ,ஆர், ரஹ்மான் தனது இணைய தள பக்கத்தில் வருத்தமுடன் பதிவு செய்திருக்கிறார். ரஹ்மானின் தந்தை சேகர் ரஹ்மான் 9 வயதாக இருக்கும்பேதே இறந்துவிட்டார். அதன்பிறகு ரஹ்மானை இசையில் ஈடுபட வைத்து அவரை வளர்த்து ஆளாக்கியவர் அவரது தாயார்தான். தயாரின் இழப்பு ரஹ்மானுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாக அமைந்துவிட்டது
ரஹ்மான் தாயார் மறைவுக்கு சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் டி.ராஜேந்தர் வெளியிட்ட அறிக்கையில்,’
ஆஸ்கார் வென்று பல ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் தாயார் கரீமா பேகம் இன்று இயற்கை எய்தினார் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன்.
அவரது குடும்பத்தாருக்கு எனது ஆறுதலை கூறி கொள்கிறேன். அம்மையாரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.
மேலும் இசை அமைப்பாளர்கள் ஜி.வி.பிரகாஷ், தேவி ஸ்ரீபிரசாத், ஹாரிஸ் ஜெயராஜ், எஸ்.தமன், இயக்குனர்கள் சேரன், அஜய் ஞானமுத்து, பாடகி ஸ்ரேயா கோஷல் எனட் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின் றனர். .