Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தயாரிப்பாளர் கே.ராஜன் திடீர் தற்கொலை செய்தது ஏன்?..

பிரபல தயாரிப்பாளர் விடியோகஸ்தர் நடிகர் கே ராஜன் நேற்று சென்னையில் உள்ள அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது தமிழ் திரை உலகினரையும், அரசியல் தலைவர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
அவரது உடலை போலீசார் அடையாறு ஆற்றிலிருந்து நீண்ட நேரம் கடையில் சென்று தேடி கண்டுபிடித்து மீட்டனர்.
கே ராஜன் திடீரென்று தற்கொலை செய்து கொண்டதற்கு என்ன காரணம் என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

கே ராஜன் 1983 ஆம் ஆண்டு பிரம்மச்சாரி என்ற படத்தை தயாரித்தார் பின்னர் டபுள்ஸ், அவள் பாவம், நினைக்காத நாளில்லை போன்ற படங்களை தயாரித்தார் மேலும் நம்ம ஊரு மாரியம்மா உணர்ச்சிகள் என இரண்டு படங்களை இயக்கினார். மைக்கேல் ராஜ் சொந்தக்காரன் மகாசூரன் உள்ளிட்ட சுமார் 15 படங்கள் நடித்தும் இருக்கிறார். ஒரு சினிமா பையனானசராக இருந்து பலருக்கு அவர் கோடிக்கணக்கில் கடனும் வழங்கி இருக்கிறார். தன்னிடம் கடன் வாங்கிய தயாரிப்பாளர்கள் அதனை திருப்பி தராமல் இழுதடிக்கிறார்கள் என்று  பல்வேறு மேடைகளில் அவர் வெளிப்படையாகவே பேசி இருக்கிறார்.

கே ராஜன் திரைத் துறை, நன்மைக்காக பல்வேறு போராட்டங்கள் நடத்தி இருக்கிறார். குறிப்பாக திருட்டு விசிடி போராட்டம் நடத்தி அதனை ஒழிக்க பெரும்பாடு பட்டிருக்கிறார். திரைப்பட விழாக்களில் கலந்து கொள்ளும்போது அவர் எதற்கும் தயங்காமல் துணிச்சலாக பேசி தவறு செய்யும் எந்த ஹீரோவாக இருந்தாலும் அவர்களை தட்டி கேட்கும் குணம் படைத்தவராக இருந்தார்.

கே ராஜன் சென்னை செங்கல்பட்டு திரைப்பட முனியத்தூரில் தலைவராகவும், தயாரிப்பாளர்கள் சங்க பொறுப்பிலும்  இருந்தவர்.

இது தவிர சிறுபட தயாரிப்பாளர்களுக்காக அவர் ஒவ்வொரு மேடையிலும் குரல் கொடுத்து வந்தார். மேலும் இது ஒரு வட சென்னை பகுதியில் காமராஜர் பெயரில் பள்ளி ஒன்றையும் நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கே ராஜன் தற்கொலை குறித்து அவரது குடும்பத்தினர் கூறும்போது, ” கே ராஜன் கடன் சுமையால் தற்கொலை செய்து கொண்டதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவுகிறது. அவர் யாரிடமும் ஒரு பைசா கூட கடன் வாங்கவில்லை. அவரிடம் தான் சில தயாரிப்பாளர்கள் கோடி கணக்கில் கடன் பெற்று  திருப்பித் தராமல் ஏமாற்றி வருகிறார்கள். கொடுத்த பணம் திரும்பி வரவில்லை என்ற வருத்தத்திலும் அவர் இருந்தார். தயாரிப்பாளர்கள் வாங்கிய பணத்தை திருப்பி பெற்றுத்தர வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்திலும் புகார் தரப்பட்டுள்ளது. அந்த பணத்தை பெற்றுச் சென்றால் எங்கள் குடும்பத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் ” என்றனர்.

 

 

 

 

Related posts

Pushpa Trailer mAAnia all over 15M+ views

Jai Chandran

ஆதிராஜன் இயக்கத்தில் ஹரிப்பிரியா நடிக்கும் த்ரில்லர் படம் “மாஸ்க்”!

Jai Chandran

‘கண்ணப்பா’ மிகப்பெரிய தாக்கம் ஏற்படுத்தும் – விஷ்ணு மன்ச்சு உறுதி

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend