தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக பொறுப்பு வகித்து வந்தார் டி.ராஜேந்தர். அவர் இச்சங்கத்திலிருந்து இன்று ராஜினாமா செய்துள்ளார்.இதுகுறித்து அவர் வெ ளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பாரம்பரியமிக்க சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவராக பொறுப்பு வகித்து வருகி றேன்.
எங்கள் சங்கத்தின் பொதுக் குழு வருகிற டிசம்பர் 27ம் தேதி காலை நடைபெற இருக்கிறது. எங்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்களும், சங்கத்தின் நலம் விரும்பிகளும், ஏனைய சங்க உறுப்பினர்களும், திரையுலகத்திற்கு இருக்கும் இந்த சோதனையான காலத்தில் தலைவராக நான் இருக்கும் இந்த சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் பதவியில் நீடிக்க வேண்டும் என்று விருப்பமும் கோரிக்கையும் தெரிவித்தனர்.
எனவே அவர்களின் கோரிக் கையை ஏற்று சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப் பட விநியோகஸ்தர்கள் சங்கத் தின் தலைவர் பதவியில் தொடர்ந்து பணியாற்றுவேன்.
எங்கள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் சட்டதிட்ட விதிகளுக்கு உட்பட்டு சமீபத்தில் தொடங்கப்பட்ட தமிழ்நாடு திரைப்படத்தயாரிப்பாளகள் சங்கத்தின் (Tamilnadu Movie Makers Sangam) தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்து கொள்கிறேன் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு டி. ராஜேந்தர் அறிக்கையில் கூறி உள்ளார்.
previous post