கொரோனா காலகட்டத்தில் திரையுலக நட்சத்திரங்கள் பலர் இறந்தனர்.இந்தி நடிகர்கள் ரிஷிகபூர், இர்பான் கான் மாரடைப்பில் மரணம் அடைந்தனர். பிரபல பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம், கன்னட நடிகர் சிரஞ்ஜ்வி சார்ஜா,,தமிழ் நடிகர் தவசி என எதிர்ப்பராத மரணங்கள் அதிர்ச்சி அளித்தது. சமீபத்தில் இயக்குனர் எஸ்பி ஜனநாதன் மரணம் திரையுலகை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தற்போது மற்றொரு நடிகர் மரணம் அடைந்திருக்கிறார்.
ரேணிகுண்டா, தென்மேற்கு பருவக் காற்று, நீர்பறவை, கண்ணே கலைமானே உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் தீப்பெட்டி கணேசன் இவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. மதுரை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனில்லாமல் இன்று மரணம் அடைந்தார். அவரது உடல் இன்று மதுரையில் தகனம் நடக்கிறது.
தீப்பெட்டி கணேசனுக்கு மனைவி மற்றும் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளார்கள். திரையுலகினர் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.