தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்து டி.ராஜேந்தர் இன்று ராஜினாமா செய்தார். இதையடுத்து சங்கத்துக்கு புதிய தலைவர் தேர்வு செய்ய வேண்டி உள்ளது.
இதுகுறித்து அச்சங்க செயலாளர் ஜேஎஸ்கே சதீஷ்குமார் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவராக டி.ராஜேந்தர் நீடிக்க வேண்டும் என்று அந்த சங்கத்தின் பெரும்பாலான உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று, அந்த சங்கத் தின் தலைவராக நீடிக்கிறார். மேலும், அந்த சங்கத்தின் By Law விதிமுறைகளுக்கு உட்பட வேண்டிய கட்டாயத்தின் பேரில் வேறு சங்கங்களில் பதவி வசிக்க முடியாத சூழிலின் காரணமாக இன்று தமிழ்நாடு திரைப்பட தயாரிப் பாளர்கள் சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து ராஜினரா செய்துள்ளார்.
தமிழ்நாடு திரைப்பட தயாரிப் பாளர்கள் சங்கத்தின் புதிய தலைவரை சங்க நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பி னர்கள் கூடி விரைவில் அறிவிக்க உள்ளோம் என்று தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு ஜே எஸ் கே.சதீஷ்குமார் தெரிவித்திருக்கிறார்.