’பாகுபலி’ பட இயக்குனர் எஸ்.எஸ். ராஜ மவுலி மற்றும் அவரது குடும்பத் தினருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
இதுபற்றி ராஜமவுலி இணைய தள பக்கத்தில்,’ சில நாட்களுக்கு முன்பு எனக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் லேசான ஜூரம் இருந்தது. அது தானாக குணமானது. கொரோனா பரிசோனை செய்தபோது எல்லோருக்கும் லேசான அறிகுறிகள் தெரிந்தன’ என தெரிவித்துள்ளார்.
தற்போது ராஜம்வுலி மற்றும் குடும்பத் தினர் தனிமைப்படுத்தலில் இருக்கின் றனர்.
ராஜமவுலி தற்போது ’ஆர் ஆர் ஆர்’ ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண், ஆலியா பட் மற்றும் அஜய் தேவ்கன் ஆகியோர் நடிக்கும் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது.