ஜெயம் ரவி அரவிந்த் சாமி நடித்த தனி ஒருவன், அப்பா, கொடி, நிமிர்ந்து நில், தொண்டன், மிஸ்டர் லோக்கல் போன்ற பல்வேரு தமிழ் மற்றும் மலையாளம் தெலுங்கு என 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பவர் அனில் முரளி. இவர் இன்று மரணம் அடைந் தார். அவருக்கு வயது 56.
நுரையீரல் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மரணம் அடைந்தார்.
முதலில் வில்லன் வேடங்களில்தான் அனில் முரளி நடித்துவந்தார். பின்னர் குணசித்ர வேடங்களில் நடித்து வந்தார்.
நடிகர் அனிலுக்கு மனைவி மற்றும் மகன் ஆதித்யா, மகள் அருந்ததி ஆகியோர் உள்ளனர்.
previous post