Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

“உறியடி”விஜயகுமார் புதுபட படப்பிடிப்பு நிறைவு

உறியடி படத்தின் மூலம் கதாநாயக னாக அறிமுகமான நடிகர் விஜய குமார் நடிப்பில் , சேத்துமான் படத்தின் இயக்குநர் தமிழ் இயக் aaaகத்தில் தயாராகிவரும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து இரவு பகலாக 62 நாட்கள் நடைபெற்று முடிவடைந்தது.

சிறந்த படைப்புகளை தரும் நோக்கத்தோடு தொடங்கப்பட்ட ‘ரீல் குட் பிலிம்ஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஆதித்யாவின் இரண்டாவது படைப்பாக காதல், அரசியல், ஆக்சன் கலந்த ஜனரஞ்சகமான குடும்பதிரைப் படமாக இப்படம் தயாராகி வருகிறது.

கதாநாயகனாக விஜய்குமார் நடிக்க நாயகிகளாக ’அயோத்தி’ படத்தில் நடிக்கும் ப்ரீத்தி அஸ்ரானி மற்றும் அறிமுக நடிகையான ரிச்சா ஜோஷி நடிக்கிறார்கள். இவர்களோடு முக்கிய கதாப்பாத் திரத்தில் ‘வத்திக்குச்சி’ திலீபன், ’கைதி’ ஜார்ஜ் மரியான், ’வடசென்னை’ பாவல் நவகீதன் மற்றும் பல முன்னணி நட்சத்திரங் கள் நடிக்கிறார்கள்.

இத்திரைப்படத்தில் 96 படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவும் ஒளிப்பதிவாளர் மகேந்திரன் ஜெயராஜும் பணியாற்றியுள்ளார்கள். பிரபல எழுத்தாளர் அழகிய பெரியவன் , விஜய்குமார், தமிழ் மூவரும் இணைந்து வசனம் எழுதியுள் ளனர். தேசிய விருது பெற்ற குற்றம் கடிதல் படத்தில் பணிபுரிந்த சி.எஸ்..பிரேம் குமார் படத்தொகுப்பு செய்கிறார். கலை இயக்குநராக ஏழுமலை ஆதிகேசவன் பணியாற்றியுள் ளார். ’ஸ்டன்னர்’ சாம் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார். ஸ்ரீகிரிஷ் மற்றும் ராதிகா நடனம் அமைத்துள்ளனர்.

ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடித்த படக்குழுவினர் விரைவில் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை துவங்க உள்ளதாக அறிவித்துள்ளார்கள்.

இதனிடையே இதே ரீல்குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் திரைப் படத்திலும் உறியடி விஜய்குமார் கதாநாயகனாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

விக்ரமின் ‘வீர தீர சூரன்- பார்ட் 2 ‘பெங்களூரூ புரமோஷன்

Jai Chandran

கதிர் ( பட விமர்சனம்)

Jai Chandran

Vairamuthu’s Kallikaatu Idhikasam is being released in Dubai

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend