Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

போலீஸ் அதிகாரி விஜயகுமார் எழுதிய வீரப்பன் உண்மைச் சம்பவம்.. வெப்சிரியல் ஆகிறது…

மாபெரும் வெற்றிப் படங்களை மலையாளத்தில் அளித்தி ருக்கும் E4 என்டர்டெயின் மென்ட் நிறுவனம், ஏற்கெனவே இஷ்க் (ISHQ) போன்ற நடிகர் துருவ் விக்ரமின் முதல் படமான ஆதித்ய வர்மா படத்தையும் தயாரித்தது. தற்போது சந்தனக் கடத்தல் வீரப்ப னைப் பற்றி முன்னாள் ஏடிஜிபி விஜய குமார் ஐ.பி.எஸ். எழுதியிருக்கும் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு வெப் சீரிஸ் மற்றும் OTT தளங்களில் படைப்புகளைத் தயாரித்து வெளியிட விருக்கிறது. இந்த இரு படைப்புகளும் ‘சேஸிங் தி பிரிகண்ட் ’ (Chasing the Brigand) என்ற தலைப்பில் முன்னாள் ஏஜிடிபி விஜய குமார் ஐ.பி.எஸ். எழுதிய பரபரப்பான புத்தகத்தில் இருக்கும் உண்மைச் சம்பவங்களைப் பிரதிபலிக்கும் வகையில் இருக்கும்.


இதுகுறித்த தயாரிப்பாளர் முகேஷ் மேதா கூறியதாவது:
எங்கள் மீது நம்பிக்கை வைத்து, தம்முடைய புத்தகத்தின் அடிப் படை யில் திரைப் படம் தயாரிக்க அனுமதி அளித்ததற்காக, தற்போது மத்திய அரசு உள்துறை அமைச்சகத்தில் மூத்த பாதுகாப்பு ஆலோசகராக இருக்கும் விஜயகுமார் அவர்களுக்கு எமது நன்றியைத் தெரிவித்துக்கொள் கிறோம். விஜயகுமார் ஜம்மு மற்றும் காஷ்மீர் கவர்னருக்கு ஆலோசகராகவும் பணிபுரிந்தவர்.
உண்மை சம்பவங்களின் அடிப்படை யில் உருவாகும் இந்த வெப் சீரிஸில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள், ஊரடங்கு முடிந் ததும் வெளியிடப் படும்.
இவ்வாறு முகேஷ் மேதா தெரிவித்திருக்கிறார்.

Related posts

ஆதிராஜன் இயக்கத்தில் மாளவிகா மேனன் நடிக்கும் சிலந்தி 2..

Jai Chandran

Sabhaapathy Trailer hits 3M+ views

Jai Chandran

நடிகர் சங்க வாக்கு எண்ணிக்கை 20ம் தேதி நடக்கிறது!

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend