திரைப்பட பாடகர் எஸ்.பி.பாலசுப்ர மணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை சூளை மேட்டில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி அனுமதிக்கப்பட் டார். தனி அறையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலை யில் ஆகஸ்ட் 13ம் தேதி அவரது உடல் நிலை கவலைக்கிடமானது. உடனே தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றி வென்டிலேட்டர் மற்றும் எக்மோ சிகிச்சை அளித்தனர். அதன்பிறகு மயக்கநிலைக்கு சென்றார் எஸ்பிபி.
எஸ்பிபி குணம் அடைய திரையுலகினர் ரசிகர்கள் கூட்டு பிரார்த்தனை செய் தனர். மருத்துவமனை டாக்டர்கள் சர்வதேச டாக்டர் களிடம் தொடர்பு கொண்டு ஆலோசனை பெற்று சிகிச்சை அளித் தனர். படிப்படியாக எஸ்பிபி உடல்நிலை குணம் அடைந்தது. மயக்கநிலைக்கு சென்றுவிட்ட எஸ்பிபி பிறகு அதிலிருந்தும் மீண்டார். ஐபேட்டில் வைத்து கிரிக்கெட், டென்னிஸ் போட்டிகளை ரசித்துப் பார்த்து வந்தார். சைகை மூலம் பேசினார். பிஸியோதெரபி சிகிச்சைக் கும் ஒத்துழைப்பு தந்தார். அவராகவே சாப்பிடவும் தொடங்கினார். தனது தந்தைக்கு உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு விட்டார் ஆனாலும் சுவாசம் சீராகவில் லை நுரையிரல் சீராவதற்கான சிகிச்சை அளிக்கப்படுவதால் அவருக்கு வென்ட்டிலேட்டரில் தொடர்ந்து ஆக்ஸிஜன் தரப்படுகிறது என்று எஸ்பி பி மகன் சரண் தெரிவித்தார்.
விரைவில் பூரண குணம் அடைந்து வீடு திரும்புவார் என்று எதிர்பார்த்த நிலையில் நேற்று இரவு திடீரென அவரது உடல் நிலை கவலைக்கிட மானது வென்ட்டி லேட்டர் சிகிச் சைக்கு நுரையீரல் ஒத்துழைக்கவில்லை என மருத்துவமனை தரப்பில் தெரிவிக் கப்பட்டது. அவரது உயிரை காக்க விடிய, விடிய டாக்டர்கள் போராடி னார். விவரம் அறிந்து நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனைக்கு நேரில் சென்று எஸ்பிபி உடல்நிலை பற்றி விசாரித்தார். பின்னர் அவர் கூறும்போது.’ எஸ்பிபி உடல்நிலை நல்ல நிலை மையில் இல்லை’ என்று நம்பிக்கை இழந்த நிலையில் கூறினார்.
டாக்டர்கள் எஸ்பிபியை காப்பாற்ற தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லா மல் இன்று (25 செப்டம்பர் 2020) மதியம் 1.04 மணிக்கு மரணம் அடைந் தார். அவருக்கு 74 வயது ஆகிறது.
எஸ்பிபி மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோபிந்த். பிரதமர் மோடி, உள்ள்துரை அமைச்சர் அமித்ஷா, தமிழக் கவர்னர் பன்வாரிலால் பொஉரோகித், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி,
நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார், சத்யராஜ் விஷால், விவேக் ராஜ்கிரண் பாரதிராஜ, இளையராஜா, வைரமுத்து உள்ளிட்ட ஏராளமான திரையிலகினர் இரங்கல் தெரிவித்து அவருக்கு புகழாரம் சூட்டினார்கள்.
பின்னர் மருத்துவமனையிலிருந்து எஸ்பிபி உடல் கண்ணாடி பேழையில் வைத்து நுங்கம்பாக்கத்தில் உள்ள வீட்டுக்கு வேன் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு ரசிகர்கள் திரண்டு வந்து அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். கொரோனா தொற்று காலத்தில் இப்படி கூட்டம் சேர்வது கொரோன பரவலுக்கு வழி வகுக்கும் எனவே எஸ்பிபி உடலை செங்குன்றம் அருகே உள்ள தாமரைப் பாக்கம் பண்ணை வீட்டுக்கு எடுத்துச் செல்லும்படி குடும்பத்தி னரிடம் போலீ ஸார் கேட்டுக்கொண் டனர். இதையடுத்து இரவு 7.30 மணி அளவில் எஸ்பி பி உடல் தாமரைப் பாக்கம் பண்ணை வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு நாளை காலை 10 மணிக்கு உடல் அடக்கம் செய்யப் படுகிறது.
எஸ்பிபி உடலுக்கு திரையுலகினர் யாரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்த வில்லை. கொரோனா கட்டுப்பாடு காரணமாக அவர்கள் இரங்கலை டிவிட்டரிலும் வீடியோவிலும் தெரிவித்தனர்.