Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

பரம்பொருள் (பட விமர்சனம்)

படம் : பரம்பொருள்

நடிப்பு :ஆர்.சரத்குமார்,  அமிதேஷ் , காஷ்மீரா பரதேசி,  சார்லஸ் வினோத், ரவி வெங்கட், டி.சிவா, பாலாஜி சக்திவேல் , சுவாதிகா, பவா செல்லதுரை,  கஜராஜ், வி.பாலகிருஷ்ணன், வின்சென்ட் அசோகன், செந்தில் குமரன்

தயாரிப்பு: மனோஜ் மற்றும் கிரீஷ்

இசை: யுவன் சங்கர் ராஜா

ஒளிப்பதிவு எஸ்.பாண்டிகுமார்

இயக்கம்: சி.அரவிந்த்ராஜ்

பி ஆர் ஒ :நிகில் முருகன்

இளைஞன் ஆதி (அமிதேஷ்)  தங்கையின்  சிகிச்சைக்காக பணம் தேவைப்படும் நிலையில்  எப்படியாவது பணம் புரட்டினால் போதும் என்று எண்ணி பழங்கால சிலையை கடத்தி விற்க எண்ணு கிறான். இந்த விஷயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மைத்ரேயனுக்கு (சரத்குமார்)  தெரிய வர அவர்  ஆதியை மிரட்டி கூட்டு சேர்ந்து சிலையை கோடிக்கணக்கில் விற்று பங்கு பிரிக்க முடிவு செய் கிறார். சிலை கடத்தல்.கூட்டத்திடம் டீல் நடக்கிறது. இந்நிலையில் பழங்கால சிலை விபத்து  ஒன்றில்.கிக்கி சின்னா .பின்ன மாகிறது ஆனாலும் போலியாக ஒரு சிலையை செய்து அதை விற்க ஆதியும், மைத்ரேயனும் முயல்கின்றனர். இதற்கு ஒரிஜினல் சிலை என்று  சான்றிதழ் தர   சங்கரலிங்கத்தை.  (பாலாஜி சக்திவேல்) அணுகு கின்றனர். அவர் அதற்கு சம்மதிக்க ஒரு கோடிக்கு மேல் பணம் கேட்கி றார். இந்த சிக்கலுக்கு கிளை மாக்ஸ் எதிர்பாராத விடை சொல்கிறது.

சிலை கடத்தல் கதையாக தொடங்கும் காட்சிகள் இடை வேளை வரை அப்படியே நகர்கிறது. ஆனாலும் போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் சரத்குமார் இதுவரை இல்லாத வகையில் நெகடிவ் கதாபாத்திரத்தில் வருவது புதிதாக உள்ளது. லஞ்சம் வாங்குவது, சிலையை ஒரு போலீஸ் அதிகாரியாக இருந்தும் கூட அதை கடத்தல்காரர்களிடம் விற்க விலை பேசுவது, சான்றிதழ் தர மறுக்கும் பாலாஜி சக்திவேல் கழுத்தை பிடித்து நெருக்குவது என்று  முக்கால்  வில்லனாகவே மாறியிருப்பது ஷாக். சில இடங்களில் காமெடியாக பேசி கலகலக்க வைக்கிறார்.

இருதலை கொல்லி எறும்பாக சிக்கி தவிக்கிறார் அமிதேஷ் . சரத்குமாரிடம் வசமாக சிக்கிக் கொண்டு அவர் சொல்வதற்கெல் லாம் தலையாட்டுவதும் புதிய சிலையை செய்ய தன் பங்கு பணத்தை கொடுப்பது என செய்து கடைசியில் ஒரு சஸ்பென்ஸ் பாத்திரமாக அவர் மாறுவது  எதிர்பாராத டுவிஸ்ட்.

காஷ்மிரா பரதேசி,  சார்லஸ் வினோத், ரவி வெங்கட், டி.சிவா, சுவாதிகா, பவா செல்லதுரை,  கஜராஜ், வி.பாலகிருஷ்ணன், வின்சென்ட் அசோகன், செந்தில் குமரன் ஆகியோரும் நடித்துள் ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசை காட்சிகளுக்கு உயிர்.கொடுக் கிறது.

எஸ்.பாண்டிகுமார் ஒளிப்பதிவின் கலர் டோன் படத்தை வித்தியாச மாக்கியிருக்கிறது

படத்தின் முதல் பாதியில் பழைய சிலை கடத்தல் கதையை எதற்கு கையிலெடுத்தாரோ என்று யோசிக்க வைக்கும் இயக்குனர்  சி.அரவிந்த்ராஜ், இடைவேளைக்கு பிறகு  தந்திருக்கும்  டிவிஸ்ட். வித்தியாசத்தை உணர்த்துகிறது

பரம்பொருள்  –  சஸ்பென்ஸ் த்ரி்ல்..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Related posts

பாடல்களை ஏலத்தில் விடும் ஜி.வி.பிரகாஷ்:

Jai Chandran

“எண்ணி துணிக” டப்பிங் நிறைவு செய்த ஜெய் !

Jai Chandran

– Team RAPO19 Happy’ Birthday To Lingusamy

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend