Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

கர (பட விமர்சனம் )

ஸ்டார் ரேட்டிங்:

படம் : கர

நடிப்பு : தனுஷ், மமிதா பைஜூ, கே எஸ் ரவிக்குமார், கருணாஸ், சுராஜ் வெஞ்சாராமூடு, ப்ரித்வி பசண்டியராஜன், ஸ்ரீ ஜா ரவி

தயாரிப்பு : ஐசரி கணேஷ்

இசை : ஜிவி பிரகாஷ்குமார்

ஒளிப்பதிவு :தேனி ஈஸ்வர்

இயக்கம் : விக்னேஷ் ராஜா

பி ஆர் ஓ : சதீஷ் (AIM ), ரியாஸ் கே அஹமத், பாரஸ் ரியாஸ்

ரிலீஸ்: ரெட் ஜெயன்ட் மூவிஸ் இன்பா உதயநிதி

ராமநாதாபுரம் திருவெறும்பூர் பகுதி வீட்டில் திருட்டு சம்பவம் நடத்தும் கர (தனுஷ் ) போலிசில் சிக்கி தப்பிக்கிறான். காதலியுடன் வெளிமாநிலம் தப்பிச் செல்லும் கர சொந்தமாக மெஸ் தொடங்கி நடத்த முடிவு செய்து வங்கியில் கடன் கேட்கிறான். அதற்கு அடமானம் கேட்கவே சொந்த ஊரில் உள்ள 3 ஏக்கர் நிலத்தை வாங்கி வர புறப்படும் கர ஊருக்கு சென்று தந்தையை சந்திக்கிறான். திடீரென்று தந்தை இறக்கிறார். அங்கு எதிர்பாரத சம்பவங்கள் நடக்கின்றன. வங்கியில் கொள்ளையடிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறான் கர. இதன் முடிவு என்னவாகிறது என்பது கிளைமாக்ஸ்.

90 கால கட்டங்களில் நடப்பது போன்ற கதை அமைந்திருப்பதால் படத்தில் செல்போன்
போன்றவை பயன்படுத்தவில்லை.
தொடக்க காட்சியில் தனுஷ் அறிமுகமும் பில்டப் எதுவும் இல்லாமல் எதார்த்தமான அறிமுகமாகவே செய்யப்படுகிறார். இதனால் அவர் படத்திலும் சராசரி இளைஞனைப் போல் அனைவர் மனதிலும் இடம் பிடிக்கும் வகையில் காட்சிகளில் இயல்பாக நடித்து காட்சிகளை நிஜமாக்குகிறார்.

படத்தில் சென்டிமென்ட் களுக்கு நிறைய இடம் இருக்கிறது அதைவிட வங்கிகளில் கொள்ளை அடிக்கும் காட்சிகளில் ஹாலிவுட் படங்களுக்கு ஏற்ப ஒரு பரபரப்பு அரங்கை ஆக்கிரமித்து கொள்கிறது. இத்தனைக்கும் அந்த வங்கிகள் கிராமப்புறம் மற்றும் நெடுஞ்சாலைகளில் அமைந்திருப்பது என்றாலும் தனுஷும் அவருடன் கருணாஸ் இணைந்து கையில் பெரிய ஆயுதம் எதுவும் இல்லாமல் வங்கிகளுக்குள் சென்று சிக்கிக் கொள்வது அடுத்து என்ன நடக்குமோ என்ற பரபரப்பு கூட்டி விடுகிறது.

தனி ஆளாக வங்கியில் கொள்ளையடிக்கும் தனுஷ் அங்குள்ள போலீசின் துப்பாக்கி முனையில் நிற்பதும் திடீரென்று ஆக்சன் அதிரடி காட்டி தப்பித்து வெளியே வர முயலும் போது ஊர் மக்கள் திரண்டு கையில் ஆயுதங்களுடன் வழிமடக்குவதும் அடுத்து என்ன நடக்கும் என்ற அச்சம் படர அந்த நொடியில் தனுஷ் செய்யும் அதிரடி எதிர்பாராத ஷாக்

ஜெயராம் சஸ்பென்ஸ் கதாபாத்திரத்தில் வருகிறார். யூத் படத்தில் கென் தந்தையாக நடித்த சுராஜ் வெஞ்சாராமூடு இப்படத்தில் தனுஷை துரத்தி பிடிக்கும் போலீசாக நடித்திருக்கிறார். கிளைமாக்சில் துப்பாக்கி முனையில் தனுஷை அவர் நிறுத்தம் காட்சியில் அடுத்து இப்படித்தான் நடக்கப் போகிறது என்ற டிவிஸ்ட்டை சற்றும் யூகிக்க முடியவில்லை.

தனுஷ் தந்தையாக நடித்திருக்கும் கே எஸ் ரவிக்குமார் தோற்றத்திலும், நடிப்பிலும் ரொம்பவே வித்தியாசம் காட்டியியிருக்கிறார்.

பிரித்வி பாண்டியராஜன் தனுஷுக்கு சப்போட்டிங் கதாபாத்திரத்தில் நடித்து அவ்வப்போது திடுக்காட்சிக்கும், கலகலப்பு காட்சிகள் பயன்பட்டிருக்கிறார்.

ஐசரி கணேஷ் படத்தை தயாரித்திருக்கிறார்.

ஜிவி பிரகாஷ்குமார் இசை, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு 90 காலகட்டத்தை ஞாபகப்படுத்துகிறது.

கொள்ளைக்காரன் வாழ்வைப் பற்றி சொல்லும் கதையாக இருந்தாலும் விவசாயிகளின் வாழ்வை சீரழிக்கும் வங்கி கடன் பற்றிய கொடுமையை வெகு இயல்பாக இயக்கி இருக்கிறார் விக்னேஷ் ராஜா.

கர – ஏழைகளின் கண்ணீர் துடைக்க ஊருக்கு ஒரு கர பிறக்க வேண்டும்.

Review By

k. jayachandhiran
trending cinemas now. com

 

Related posts

பிரபாசின் ‘கல்கி 2898 ஏ டி ‘ பட டிரெய்லர் வெளியீடு

Jai Chandran

இசை பெரிதா? மொழி பெரிதா? வைரமுத்து பதில்

Jai Chandran

மருத்துவர் சீட்டுக்காக காத்திருக்காமல்‌ நேரடியாக ஆய்வக பரிசோதனை.. அரசுக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend