Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

நூறு ஆண்டு ஆனாலும் எஸ்பிபி குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும். ரஜினிகாந்த புகழாரம்..

பாடகர் எஸ்பி பாலசுப்ர மணியம் இன்று (25 செப்டம்பர்) காலமானார். அவருக்கு வயது 74. எஸ்பிபி மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்து வீடியோவில் பேசி வெளியிட்டுள்ளார்.
ரஜினி கூறியிருப்பதாவது:
இன்னிக்கு ரொம்ப சோகமான நாள். கடைசி நிமிடம்வரை உயிருக்காக போராடி மதிப்பிற்குரிய எஸ்பிபி அவர்கள். நம்மல விட்டு பிரிஞ்சிருக் காங்க. அவரது மறைவு மிகுந்த வேதனையும் அதிர்ச்சியும் அளிக்கிறது. எஸ்பியின் குரலுக்கும் அவரது பாட்டுக்கும் ரசிகர்களே இல்லாமல் இந்தியாவில் இருக்க மாட்டர்கள். அவருக்கு தெரிஞ்வங்க அவரது குரலவிட அவரது பாட்ட விட அவரையே அதிமா நேசிச்சாஞ்க அதுக்கு காரணம் அவரது மனித நேயம். அவர் எல்லாரையும்.. சின்னவங்க, பெரியவங்கன்னு பாக்காம மதிச்சாங்க கவுரவம் கொடுத்தாங்க, அன்பு கொடுத்தாங்க. அவ்வளவு பெரிய ஒரு நல்ல அன்பான அருமையான ஒரு மனிதர்.
இந்திய திரையுலகம் எத்தனையோ மிகப்பெரிய பாடகர்கள உருவாக்கி இருக்கிறது. முகமது ரஃபி அவர்கள், கிஷோர் குமார் அவர்கள், கண்டசாலா அவர்கள், டி.எம் சவுந்தராஜன் அவர்கள். அவர்களுக்ககெல்லாமே இல்லாத ஒரு க்சிறப்பு நம் எஸ்பிபிக்கு இருக்கிறது. அது என்னன்னா அவங்க எல்லாமே அந்தந்த மொழியில மட்டும்தான் பாடினாங்க. அந்தந்த பாஷை காரங்களுக்கு மட்டும்தான் தெரியும். ஆனா எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் பல லேங்குவேஜ்ல, பல பாஷையில் பாடினாங்க. இந்தியா விலே இருக்கிற அனைவருக்குமே அவரை தெரியும் , முக்கியாம தென்னிந்தியாவிலே ரசிகர்களே இல்லாம இருக்க மாட்டாங்க. அவ்ளோ வந்து ரசிச்சாங்க. அவருடைய அந்த இனிமையான, கம்பீரமான அந்த குரல் இன்னும் நூறு ஆண்டு ஆனா கூட நம்ம மத்தியிலே, நம்ம காதுகள்ல வந்து ஒலிட்சிகிட்டே இருக்கும். ஆனா அந்த குரலுக்கான உரிமையாளர் இனிமே நம்ம கூட இல்லன்னு நினைக்கும் போது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. மிகப் பெரிய ஆத்மா, மிகப் பெரிய பாடகர், பெரிய ஒரு மகான். அவருடைய ஆத்ம சந்தி அடையணும். அவங்க குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.
இவ்வாறு ரஜினி தெரிவித்திருக்கிறார்.

 

Related posts

கொடைக்கானலில் “தி நைட்” படத்தின் படப்பிடிப்பு முடிந்தது

Jai Chandran

Arya starrer “Captain” First Look revealed

Jai Chandran

ஆன்டி இண்டியன் படத்திற்கு சிங்கப்பூரிலும் தடை.

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend